Health Tips: மன அழுத்தத்தை விரட்டும் 6 பழங்கள்.!!

இன்றைய துரித வாழ்க்கையில், மன அழுத்தம் என்பது பொதுவான பிரச்சனையாகிவிட்டது. மன அழுத்தத்தைப் போக்கும் இந்த பழங்களை தினமும் உணவில் சேர்த்தால் உற்சாகமாக இருக்கலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 22, 2021, 07:04 AM IST
  • வைட்டமின் சி நிறைந்த பழங்களை உட்கொள்வது மன அழுத்தத்தை குறைக்கிறது.
  • திராட்சையில் நீர் சத்து, சோடியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
  • கிவி மன அழுத்தத்தைப் போக்க வந்த வரம் எனக் கூறினால் மிகையில்லை.
 Health Tips: மன அழுத்தத்தை விரட்டும் 6 பழங்கள்.!!  title=

Stress relieving fruits: துரிதமான வாழ்க்கையில், அதிக போட்டி நிறைந்த உலகில் மன அழுத்தம் என்பது உலகம் முழுவதும் உள்ள பலருக்கு ஒரு முக்கிய கவலையாகவும் பிரச்சனையாகவும் உள்ளது. கவலை, மன அழுத்தம் ஆகியவை பல கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கிறது. மன அழுத்தத்திற்கு பல காரணங்கள் இருக்கலாம். சில நேரங்களில் இது ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். சில நேரங்களில் சில அலுவலக பிரச்சனைகள் அல்லது குடும்ப தகராறுகள் அதற்கு காரணமாக இருக்கலாம். 

சரியான நேரத்தில் மன அழுத்தத்திற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது மன  ஆரோக்கியத்திற்கு  பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். நீடித்த மன அழுத்தம் மன ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். மன அழுத்தம் காரணமாக இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, சுவாசம், வளர்சிதை மாற்றம் ஆகிய அனைத்தும் பாதிக்கப்படுகிறது. மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடுவதில் பயனுள்ளதாக இருக்கும் சில பழங்களை (Fruits) தினமும் உணவில் சேர்த்தால் உற்சாகமாக இருக்கலாம்.   

ALSO READ | Health Alert! சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்..!!

மன அழுத்தத்தை போக்கும் பழங்கள் 

1. கொய்யா (Guava) 

வைட்டமின் சி நிறைந்த பழங்களை உட்கொள்வது மன அழுத்தத்தை குறைக்கிறது. கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி அதிகளவில் காணப்படுவதால், குளிர் காலத்தில் இதனை உட்கொள்வதன் மூலம், பல நோய்களை எதிர்த்துப் போராடும் வலிமையையும் கூடுதலாக பெறலாம் 

2. திராட்சை (Grape) 

திராட்சையில் நீர் சத்து, சோடியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது மன அழுத்தத்தை போக்க சிறந்த வழி. 

3. ஆரஞ்சு (Orange)

ஆரஞ்சு மன அழுத்தத்தை நீக்குகிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இந்த பழம் மன அழுத்தத்தை  நீக்குகிறது என்று ஒரு ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. 

ALSO READ | Health Alert! அளவுக்கு மிஞ்சிய சீரகம் பெரும் கேடு விளைவிக்கும்..!!

4. வாழை (Banana)

பல வைட்டமின்கள், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் வாழைப்பழத்தில் காணப்படுகின்றன. மன அழுத்தத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது நன்மை பயக்கும். இதனுடன், அத்தகைய சூழ்நிலையில் வாழைப்பழத் தோலில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரையும் அருந்துவது நல்லது. 

5. புளுபெர்ரி (Blueberry) 

புளுபெர்ரி எனப்படும் அவுரிநெல்லியில் வைட்டமின் சி, ஏ, பி, ஈ போன்றவை நிறைந்துள்ளன. இது மன அழுத்தத்தைப் போக்கி, உடலை வலுவாக வைத்திருக்கும் என்று  ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில்,  இது நியாபக சக்தியையும் அதிகரிக்கிறது 

6. கிவி (kiwi) 

கிவி மன அழுத்தத்தைப் போக்க வந்த வரம் எனக் கூறினால் மிகையில்லை.இதில் இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலம் நிறைந்துள்ளது. எனவே இந்த பழம் மன அழுத்தத்தை சமாளிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. இது பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.

ALSO READ | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ‘5’ உணவுகள்..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News