நுரையிரலை பலவீனமாக்கும் ‘சில’ விட்டமின்களின் குறைபாடு! எச்சரிக்கும் நிபுணர்கள்!

நுரையீரல் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், உங்கள் இரத்தத்தில் அழுக்குகள் சேரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பின்னர் சுவாசம் மட்டுமல்ல, இரத்தம் தொடர்பான நோய்களின் அபாயமும் அதிகரிக்கும். ஏனெனில் நுரையீரலின் முக்கிய வேலை இரத்தத்தை சுத்திகரிப்பதாகும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 5, 2023, 05:12 PM IST
  • சருமம் மற்றும் முடிக்கு வைட்டமின் ஈ மிகவும் முக்கியம் என பலருக்குத் தெரியும்.
  • நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், சில வைட்டமின்கள் பற்றாக்குறையாக இருக்க கூடாது.
  • நுரையீரலின் முக்கிய வேலை இரத்தத்தை சுத்திகரிப்பதாகும்.
நுரையிரலை பலவீனமாக்கும் ‘சில’ விட்டமின்களின் குறைபாடு! எச்சரிக்கும் நிபுணர்கள்! title=

ஆரோக்கியமான நுரையீரல் நம்மை பல நோய்களிலிருந்து காக்கும். ஆனால் சில நேரங்களில் உயிர்ச்சக்தி இல்லாததால், நுரையீரல் பலவீனமடைகிறது. நீங்கள் சரியான நேரத்தில் கவனம் செலுத்தவில்லை என்றால், அனைத்து வகையான நோய்த்தொற்றுகள், ஒவ்வாமை அல்லது ஆஸ்துமா வருவதற்கான ஆபத்து அதிகம் உள்ளது.

நுரையீரல் தொடர்பான ஏதேனும் பிரச்சனையுடன் நீங்கள் போராடிக் கொண்டிருந்தால், உங்களுக்கு மிகவும் தேவையான வைட்டமின்கள் எது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அவற்றின் குறைபாடு உங்கள் நோயின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கலாம். நுரையீரல் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், உங்கள் இரத்தத்தில் அழுக்குகள் சேரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பின்னர் சுவாசம் மட்டுமல்ல, இரத்தம் தொடர்பான நோய்களின் அபாயமும் அதிகரிக்கும். ஏனெனில் நுரையீரலின் முக்கிய வேலை இரத்தத்தை சுத்திகரிப்பதாகும்.

உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், சில வைட்டமின்கள் பற்றாக்குறையாக இருக்க கூடாது. இது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | மடமடனு எடை ஏறுதா? இந்த சூப்பர் ட்ரிங்கை குடிங்க... சட்டுனு குறையும்!!

வைட்டமின் ஏ:

நுரையீரலை ஆரோக்கியமாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வைட்டமின் ஏ மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இது உயிரணுக்களின் மீளுருவாக்கம் மற்றும் நுரையீரலில் தொற்று அல்லது தேய்மானம் ஏற்பட்டால், இந்த வைட்டமின் அவற்றை சரிசெய்கிறது. வைட்டமின் ஏ நுரையீரல் திசுக்களை சீர் செய்கிறது. மீன், கேரட், இனிப்பு உருளைக்கிழங்கு மற்றும் ப்ரோக்கோலி போன்றவற்றில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ குறைபாடு, நுரையீரலை பாதிப்பதோடு, எலும்பு மற்றும் கல்லீரல் பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வைட்டமின் சி

வைட்டமின் சி நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. அதனால்தான் நுரையீரலில் ஏற்படும் தொற்று நோய்களில் இருந்தும் அதனை பாதுகாக்கிறது. இந்த வைட்டமின் முழு சுவாச மண்டலத்தையும் வலுப்படுத்த வேலை செய்கிறது. உங்கள் நுரையீரலில் பலவீனம் இருந்தால், கண்டிப்பாக வைட்டமின் சி உள்ள உணவை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு, நீங்கள் எலுமிச்சை, ஆரஞ்சு, கிவி, திராட்சை, பெர்ரி அல்லது சிட்ரஸ் பழங்களை சாப்பிட வேண்டும். நீங்கள் புகைப்பிடிப்பவராக இருந்தால், வைட்டமின் சி குறைபாடு ஏற்படுவதை நீங்கள் அனுமதிக்கக்கூடாது. ஏனெனில் இது மாசு மற்றும் புகைப்பழக்கத்தால் நுரையீரலுக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுக்கிறது. இதனுடன், நுரையீரலில் குவிந்துள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.

வைட்டமின் டி

வைட்டமின் டி எலும்புகள் மற்றும் பற்களுக்கு மட்டுமல்ல, நுரையீரலுக்கும் மிகவும் முக்கியமானது. வைட்டமின் டி சுவாச பிரச்சனைகள் அல்லது தொற்றுநோய்களைத் தடுப்பது மட்டுமல்லாமல் அவற்றை எதிர்த்துப் போராடுகிறது. இது நுரையீரலுக்கு காற்று செல்வதை தடுக்கும் நுரையிரலில் ஏற்படும் நாள்பட்ட வீக்க நோயான Chronic Obstructive Pulmonary Disease (COPD) அபாயத்தை பெருமளவு குறைக்கிறது. வைட்டமின் டி குறைபாடு, மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா, மார்பு அல்லது தொண்டையில் மூச்சுத்திணறல் மற்றும் சுவாசம் தொடர்பான பிற பிரச்சனைகள் அதிகரிப்பதால், உங்கள் உணவில் முட்டையின் மஞ்சள் கரு, சால்மன் மீன், மத்தி, சூரை போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

வைட்டமின் ஈ

தோல் மற்றும் முடிக்கு வைட்டமின் ஈ மிகவும் முக்கியம் என பலருக்குத் தெரியும். ஆனால் இது உங்கள் நுரையீரலுக்கும் மிகவும் முக்கியமானது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதன் குறைபாட்டால் நுரையீரல் பலவீனமடையும். அதனால்தான் வைட்டமின் ஈ நுரையீரலுக்கும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. வைட்டமின் ஈ ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது சேதமடைந்த நுரையீரலை சீர் செய்ய உதவுகிறது. இது நுரையீரல் திசுக்களின் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இதற்கு அவகேடோ பாதாம் மற்றும் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க |  மூளையை பலவீனமாக்கும் விட்டமின் B12 குறைபாடு! தவிர்க்க சாப்பிட வேண்டியவை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News