உடலில் இங்கெல்லாம் வலி இருக்கா? கொலஸ்ட்ரால் அறிகுறியாக இருக்கலாம், ஜாக்கிரதை

High Cholesterol Remedies: உடலின் தமனிகளில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால், இரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டு, மாரடைப்பு ஏற்படும். இதன் காரணமாக, உலகில் லட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் உயிரை இழக்கின்றனர். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 12, 2022, 02:58 PM IST
  • இரத்த தமனிகளில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது, ​​அது இரத்த ஓட்டத்தை குறைக்கிறது.
  • இதன் காரணமாக இதயத்திற்கு ரத்தம் முழுமையாக கிடைக்காது.
  • அத்தகைய சூழ்நிலையில், மார்பில் வலி உணரப்படும்.
உடலில் இங்கெல்லாம் வலி இருக்கா? கொலஸ்ட்ரால் அறிகுறியாக இருக்கலாம், ஜாக்கிரதை title=

அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கான வைத்தியம்: உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பது பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்துகின்றது. இது சில சமயம் மரணத்திற்கும் வழிவகுப்பதுண்டு. இது இரத்தத்தில் காணப்படும் ஒரு மெழுகுப் பொருளாகும். உடலின் தமனிகளில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால், இரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டு, மாரடைப்பு ஏற்படும். இதன் காரணமாக, உலகில் லட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் உயிரை இழக்கின்றனர். 

உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் ஏற்படும் பல அறிகுறிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த அறிகுறிகள் ஒருவருக்கு தோன்றினால், அந்த நபர் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அந்த அறிகுறிகளுக்கான காரணங்களை அகற்றுவதில் ஈடுபட வேண்டும். இதனால் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் உடலுக்கு ஏற்படக்கூடிய தீங்கை தவிர்க்கலாம். 

அதிக கொலஸ்ட்ரால்: அறிகுறிகள்

இதயத்தில் வலி அதிகரித்தல் 

இரத்த தமனிகளில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது, ​​அது இரத்த ஓட்டத்தை குறைக்கிறது. இதன் காரணமாக இதயத்திற்கு ரத்தம் முழுமையாக கிடைக்காது. அத்தகைய சூழ்நிலையில், மார்பில் வலி உணரப்படும். இது சில நேரங்களில் பக்கவாதம் மற்றும் மாரடைப்புக்கு வழிவகுக்கும்.

மேலும் படிக்க | இந்த பழம் கொலஸ்ட்ராலின் எதிரி, கட்டாயம் சாப்பிடுங்க 

கால் வலியை அலட்சியம் செய்யாதீர்கள்

அதிக கொலஸ்ட்ரால் காரணமாக, கால்களுக்கு இரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்படுகிறது. இதனால், பாதங்களில் வலி ஏற்பட்டு, தோலின் நிறம் மாறும். சில நேரங்களில் கால்களின் வெப்பநிலை மிகவும் குறைந்து கால்கள் குளிர்ச்சியாக உணரப்படும். இந்த அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம். 

நெஞ்சு வலி: அதிக கவனம் தேவை

பல நேரங்களில், இதயத்திற்கு இரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகளில் கொலஸ்ட்ரால் குவியத் தொடங்குகிறது. இதன் காரணமாக மார்பு வலி தொடங்குகிறது. சில நேரங்களில் இத்தகைய வலி படிப்படியாக ஏற்படுகிறது, எனினும், சில நேரங்களில் அது திடீரென்று உயரத் தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உடனடியாக ஒரு இதய நிபுணரை சந்திக்க வேண்டும்.

இவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகமானால் ஆபத்தும் அதிகமாக இருக்கும்:

- அதிகமாக புகைபிடிப்பவர்கள் மற்றும் மது அருந்துபவர்கள், மற்றவர்களை விட அதிக கொலஸ்ட்ராலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால் இந்த பழக்கங்களை சரியான நேரத்தில் தவிர்க்க வேண்டும்.

- டின்னில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொள்பவர்கள், அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையையும் சந்திக்க நேரிடும். இதன் காரணமாக, அவர்களின் தமனிகளில் கெட்ட கொலஸ்ட்ரால் சேரத் தொடங்குகிறது.

- உடல் இயக்கம் அதிகம் இல்லாமல் தொடர்ந்து ஒரே இடத்தில் நிலையாய் இருப்பவர்களுக்கு உடல் பருமன் அதிகரிக்கும். அத்தகையவர்களுக்கு கெட்ட கொலஸ்ட்ரால் ஆபத்து மிக அதிகம். எனவே, தினமும் குறைந்தது 2 கி.மீ., நடக்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த 4 தவறுகள் உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News