உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க இந்த காய்கறிகளை உட்கொண்டால் போதும்

High cholesterol: உங்கள் உணவின் மூலம் உங்கள் கொலஸ்ட்ராலைக் குறைக்க, நீங்கள் செய்ய வேண்டியது நார்ச்சத்தை அதிகரித்து கெட்ட கொழுப்பைக் குறைப்பதுதான். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 7, 2022, 02:35 PM IST
  • பூசணிக்காய் உட்கொள்வது பலருக்கு பிடிப்பதில்லை.
  • ஆனால், கெட்ட கொலஸ்ட்ரால் காரணமாக நீங்கள் அவதியில் உள்ளீர்கள் என்றால், கண்டிப்பாக பூசணிக்காயை சாப்பிட வேண்டும்.
  • பூசணிக்காயில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.
உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க இந்த காய்கறிகளை உட்கொண்டால் போதும் title=

நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், காய்கறிகள் ஆரோக்கியத்தை பராமரிக்க இன்றியமையாதவையாக கருதப்படுகின்றன. காய்கறிகளால் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். இந்த பதிவில் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதில் காய்கறிகள் எந்த அளவு உதவுகின்றன என்பதை காணலாம். காய்கறிகளில் பெக்டின் அதிகமாக உள்ளது. இது கொழுப்பைக் குறைக்கும் கரையக்கூடிய நார்ச்சத்து ஆகும். இவை ஆப்பிள் மற்றும் ஆரஞ்சுகளிலும் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் உணவின் மூலம் உங்கள் கொலஸ்ட்ராலைக் குறைக்க, நீங்கள் செய்ய வேண்டியது நார்ச்சத்தை அதிகரித்து கெட்ட கொழுப்பைக் குறைப்பதுதான். உங்கள் உணவில் காய்கறிகளைச் சேர்ப்பது பல வித நோய்களைத் தடுக்க உதவும். கெட்ட கொழுப்பை எவ்வாறு குறைப்பது? இவற்றை கட்டுப்படுத்த எந்த காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்? இதில் நமக்கு உதவக்கூடிய காய்கறிகளின் முழு பட்டியலை இந்த பதிவில் காணலாம். 

தக்காளி

தக்காளியில் அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. மேலும், இதில் வைட்டமின் ஏ மற்றும் சி-யின் நன்மைகளும் உள்ளன. தக்காளியில் லைகோபீன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது அதிக அளவுகளில் எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்கும் ஒரு கலவை என்பது குறிப்பிடத்தக்கது.

கத்திரிக்காய் மற்றும் வெண்டைக்காய் 

கத்தரிக்காய் ஆக்சிடேடிவ் அழுத்தத்தைக் குறைக்கும் திறனைக் கொண்டுள்ளது. மன அழுத்தம் நாள்பட்ட அழற்சி மற்றும் பிளேக் வடிவத்தைத் தொடங்குவதால், அதிக கொழுப்பை உருவாக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக இது இருக்கிறது. மறுபுறம், வெண்டைக்காய் குறைந்த கலோரி கொண்ட ஒரு காயாகும். இதில் இதய ஆரோக்கியத்திற்கு தேவையான கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பாலிபினால்களின் நல்ல மூலமாகும். இது இயற்கையாக வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது.

மேலும் படிக்க | இலவங்கப்பட்டையின் இதமான நன்மைகள்: குளிர்காலத்தில் உங்கள் கவசமாய் உதவும் 

பூசணிக்காய்

பூசணிக்காய் உட்கொள்வது பலருக்கு பிடிப்பதில்லை. ஆனால், கெட்ட கொலஸ்ட்ரால் காரணமாக நீங்கள் அவதியில் உள்ளீர்கள் என்றால், கண்டிப்பாக பூசணிக்காயை சாப்பிட வேண்டும். பூசணிக்காயில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. பூசணிக்காயில் ஆண்டிஆக்சிடெண்டுகள் அதிகம் உள்ளன. இது உடலில் அதிகரிக்கும் கொழுப்பை எதிர்த்துப் போராட உதவும்.

உருளைக்கிழங்கு

ஒரு வாழைப்பழத்தை விட அதிகமாக வேகவைத்த உருளைக்கிழங்கு இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற பொட்டாசியத்தை வழங்கும். ஆகையால், அனைத்து முக்கியமான ஊட்டச்சத்துகளும் சரியான அளவில் இருக்கும் இதை உட்கொள்வது கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும். இது பக்கவாதம் மற்றும் பிற இருதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.

கீரைகள், பச்சை காய்கறிகள்

உங்கள் உணவில், அதிக அளவில் கீரைகள், அதிக அளவில் பச்சை காய்கறிகள் இருந்தால், உங்களுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். அவற்றில் ஒன்று கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவதில் பங்களிப்பு. கீரைகள் மற்றும் பச்சை காய்கறிகள் உடலில் நைட்ரிக் ஆக்சைடு (NO) உற்பத்தியை ஊக்குவித்து கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Detox Drinks: உடலின் நச்சுக்களை அகற்றும் சில ‘மேஜிக்’ பானங்கள்..!! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News