1 நாளில் 1 கிலோ எடை குறையணுமா? இதோ சுலபமான வழி, இதை குடிங்க!!

Weight Loss Tips: அன்றாட வாழ்க்கையில் தேவை இல்லாத, ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவது உங்கள் உடலில் தவறான விளைவை ஏற்படுத்துகிறது. எடை அதிகரிப்பால் பல நேரங்களில் பலர் பல சங்கடங்களுக்கு ஆளாவது உண்டு. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 13, 2023, 11:10 AM IST
  • பெரும்பாலானோர் உடல் எடையை குறைக்க பல்வேறு பயிற்சிகள் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.
  • உடல் எடையை குறைக்க, மக்கள் கடுமையான உணவு முறைகளையும் பின்பற்றுகிறார்கள்.
  • ஆனால் பல சமயங்களில் எளிய வீட்டு வைத்தியங்களே எடை குறைப்பதில் நல்ல பலன்களை அளிக்கின்றன.
1 நாளில் 1 கிலோ எடை குறையணுமா? இதோ சுலபமான வழி, இதை குடிங்க!! title=

உடல் எடையை குறைப்பது எப்படி:  உடல் எடையை குறைக்க நாம் பல வழிகளில் முயற்சி செய்கிறோம். குறிப்பாக தொப்பை வந்துவிட்டால், அதை சரி செய்வது மிக கடினமாகிவிடுகிறது. உடல் எடையை குறைக்க நமது வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டியது மிக அவசியமாகும். எடை அதிகரிப்பதற்கு உங்கள் உணவே முக்கிய காரணமாகும். அன்றாட வாழ்க்கையில் தேவை இல்லாத, ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவது உங்கள் உடலில் தவறான விளைவை ஏற்படுத்துகிறது. எடை அதிகரிப்பால் பல நேரங்களில் பலர் பல சங்கடங்களுக்கு ஆளாவது உண்டு. 

பெரும்பாலானோர் உடல் எடையை குறைக்க பல்வேறு பயிற்சிகள் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். உடல் எடையை குறைக்க, மக்கள் கடுமையான உணவு முறைகளையும் பின்பற்றுகிறார்கள். ஆனால் பல சமயங்களில் எளிய வீட்டு வைத்தியங்களே எடை குறைப்பதில் நல்ல பலன்களை அளிக்கின்றன. ஒரு மிக எளிதான வழி மூலம் ஒரு நாளில் 1 கிலோ எடை குறைக்கலாம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? இது உணைதான். இதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

சிறிய முயற்சி செய்து தினசரி ஒரு கிலோ எடையை எளிதாகக் குறைக்கலாம். உடல் எடை குறைப்பு பற்றிய சில அறிக்கைகளில் இந்த முறை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எடை இழப்பு முயற்சியில் லெமனேட் ஃபாஸ்ட் டயட் உங்களுக்கு உதவும் என அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், உங்கள் எடை இழப்பு இலக்கை நீங்கள் அடைந்தவுடன் இந்த டயட்டைப் பின்பற்றுவதை நிறுத்த வேண்டும் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். 

ஒரு நாளில் 1 கிலோ எடை குறைப்பது எப்படி

எலுமிச்சை உடலில் இருந்து கொழுப்பை வேகமாக எரிக்க உதவுவதாக பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே உங்கள் உடல் எடையை வேகமாக குறைக்க நினைத்தால், எலுமிச்சை நீருடன் ஃபாஸ்ட் டயட்டை பின்பற்றலாம். இது மாஸ்டர் க்ளீன்ஸ் லெமனேட் டயட் என்றும் அழைக்கப்படுகிறது. இது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கின்றது. 

லெமனேட் டயட் செய்முறை: 

இந்த டயட்டில் குறிப்பிட்ட கால இடைவெளியில் 4 கிளாஸ் எலுமிச்சைப் பழ நீரை தொடர்ந்து குடித்து வர வேண்டும். டயட்டுடன் மேலும் சில விஷயங்களையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். லெமனேடை நீங்கள் வீட்டிலேயே தயாரிக்க வேண்டும். எலுமிச்சை நீர் தயாரிக்கும்போது, அதில் சர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்துங்கள். இது ஒரு நச்சுநீக்கி பானமாகும். இது உடலில் இருந்து நச்சுப் பொருட்களை அகற்ற உதவுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

லெமனேட் டயட் செய்முறையை: எப்படி தயாரிப்பது

- 8 கப் தண்ணீர்
- 6 எலுமிச்சை
- 1/2 கப் தேன்
- சில ஐஸ் கட்டிகள்
- 10 புதினா இலைகள்

லெமனேட் அல்லது எலுமிச்சம்பழம் மற்றும் தேன் சேர்த்து வேறு ஏதேனும் பானங்களை நீங்கள் தயாரிக்கும் போது, ​​கொதித்த சூடான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டாம். இதற்கு வெதுவெதுப்பான நீரையே பயன்படுத்தவும்.

மேலும் படிக்க | ஒரு கிளாஸ் பெருங்காயத் தண்ணீர்..இந்த நன்மைகள் உங்களை தேடி வரும்

இப்படி உங்கள் உணவில் சேர்க்கலாம்: 

காலை உணவு: 
காலை உணவில் பழங்களை மட்டும் உட்கொள்ளவும். ஆனால் காலை உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன், வெறும் வயிற்றில் 1 கிளாஸ் எலுமிச்சைப் பழ நீரை குடிக்கவும்.

மத்தியான சிற்றுண்டி: 
காலை 11 மணியளவில் 1 கிளாஸ் எலுமிச்சைப் பழ நீர், 1 வாழைப்பழம் மற்றும் 50 கிராம் பாதாம் பருப்பை உட்கொள்ளவும்.

மதிய உணவு: 
மதிய உணவில் நீங்கள் காய்கறி சாலட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றையும் சேற்க்கவும்.

மாலை ஸ்நாக்ஸ்: 
மாலை 4 மணியளவில் நீங்கள் மீண்டும் 1 கிளாஸ் எலுமிச்சைப்பழ நீர் மற்றும் சில பழங்களை சாப்பிட வேண்டும்.

இரவு உணவு: 
உணவில் சில எலுமிச்சைத் துண்டுகள், பச்சை சாலட் மற்றும் வறுக்கப்பட்ட மீன்களைச் சேர்க்கவும்.

மேலும், உறங்கச் செல்வதற்கு 2 மணி நேரத்திற்கு முன் கடைசியாக எலுமிச்சைப் பழ நீரை உட்கொள்ள வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தொப்பையை கரைக்கும் உத்தான பாதாசனம்... செய்வது எப்படி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News