World Vegan Day 2022: சுத்த சைவ உணவு உண்பதை ஊக்குவிக்கும் ’வீகன் டயட்’ மாதம் இது

World Vegan Month: ’வீகன் டயட்’ என்பது விலங்குகளின் பாதுகாப்பை முக்கியமானதாய் கொண்டு,  சைவ உணவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் உணவு முறை இந்த நவம்பர் மாதம், வீகன் டயட் மாதம் ஆகும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 1, 2022, 10:15 AM IST
  • ’வீகன் டயட்’ மாதம் இது
  • சைவ உணவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நவம்பர் மாதம்...
  • விலங்குகளை பாதுகாக்கும் குறிக்கோளை நோக்கி....
World Vegan Day 2022: சுத்த சைவ உணவு உண்பதை ஊக்குவிக்கும் ’வீகன் டயட்’ மாதம் இது title=

World Vegan Day 2022: நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தாலும் 'சுத்த சைவ உணவு உண்பவர்' என்று சொல்லிக் கொள்ள முடியுமா? உண்மையில் சைவ உணவு என்றால் என்ன? விலங்குகளை பாதுகாக்கும் இந்த முயற்சி, மனிதர்களின் ஆரோக்கியத்தையும் பாதுக்காக்கும் முன்முயற்சியாகும்.  உலகம் முழுவதையும் ஒப்பிடுகையில் இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையிலான சைவ உணவு உண்பவர்கள் உள்ளனர். சைவ உணவுகளை உண்பதால் பல சிறப்பு நன்மைகள் கிடைப்பதோடு, பல நோய்களில் இருந்தும் நம்மை விலக்கி வைக்கிறது.

ஆனால் உண்மையில் இந்தியாவில் 'சுத்த சைவம்' என்று நினைப்பவர்கள் கூட உண்மையில் அசைவக்காரர்கள் என்பது கூட பலருக்குத் தெரியாது என்றால் ஆச்சரியமாக இருக்கிரதா? ஆம், நாம் சாப்பிடும் 'தூய சைவ உணவு', வீகன் டயட்டில் அசைவ உணவு என்று கருதப்படுகிறது. 

வீகன் உணவு முறை விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் வீகன் நாள் கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமல்ல, நவம்பர் மாதம் முழுவதும் வீகன் மாதம் என்று அழைக்கப்படுகிறது.  

மேலும் படிக்க | விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

இந்த ஆண்டு வீகன் உணவு நாளின் கருப்பொருள். விலங்கு உரிமைகளை மையமாகக் கொண்ட 'இயல்பான எதிர்காலம்' ('Future Normal’) என்பது ஆகும்.

பால், பாலாடைக்கட்டி, தயிர் 'சுத்த சைவ உணவில்' வராது

சைவ உணவு முறை தூய சைவ உணவு என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், இதில் உள்ள அனைத்து உணவுகளும் தாவர அடிப்படையிலானவை மட்டுமே. சுத்தமான சைவ உணவில் அதாவது சைவ உணவில் பசு, எருமை, ஆடு போன்ற விலங்குகளிடமிருந்து பெறப்படும் பால் மற்றும் பாலாடைக்கட்டி, தயிர், வெண்ணெய் போன்ற பால் பொருட்கள் சேர்க்கப்படவில்லை. இவை விலங்குகளிடமிருந்து பெறப்படுவதால், அவை விலங்குகளின் ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் நல்லது என்று கருதப்படவில்லை.

சைவத்திற்கும் வீகன் உணவுக்கும் உள்ள வேறுபாடு
சைவத்திற்கும் அசைவத்திற்கும் ஒரே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது, அது பால் அல்லது அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்பது வீகன் உணவு முறையின் அடிப்படை விதி ஆகும்.  

மேலும் படிக்க | காவு வாங்கிய பேலியோ டயட்?... நடிகர் பரத் கல்யாண் மனைவி மரணம்

வீகன் உணவு முறையை கடைபிடிப்பதன் நன்மைகள்:

வீகன் உணவை கடைப்பிடிப்பதன் மூலம் உடல் எடை குறைப்பது மிகவும் எளிதாகிறது. அதனால்தான் பலர் இந்த உணவு முறையைப் பின்பற்றுகிறார்கள்.

வீகன் டயட் உணவை உட்கொள்வது வகை 2 நீரிழிவு நோயில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதனுடன், சிறுநீரக செயல்பாடும் மேம்படுகிறது என பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

புதிய பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகள் வீகன் டயட் உணவின் முக்கியமான அடிப்படை விதி ஆகு. இவற்றை உண்பதன் காரணமாக உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவு குறைகிறது, இது நேரடியாக இதயத்திற்கு நன்மை பயக்கும்.

வீகன் டயட்டில் நார்ச்சத்து உணவுகள் அதிகமாக உள்ளன. இது வயிற்றை சுத்தமாக வைத்திருக்கவும், மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கவும் உதவுகிறது.

மேலும் படிக்க | Health Tips: உடலுக்கு ஆக்ஸிஜனை அள்ளி வழங்கும் 'சில' பழங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News