CBSE 10 ஆம் வகுப்பு முடிவுகள் இன்று வெளிவருகின்றன: எப்படி பார்ப்பது? இதோ விவரம்

 மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) இன்று மதியம் 12 மணிக்கு 10 ஆம் வகுப்பு முடிவுகளை வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 3, 2021, 11:33 AM IST
CBSE 10 ஆம் வகுப்பு முடிவுகள் இன்று வெளிவருகின்றன: எப்படி பார்ப்பது? இதோ விவரம் title=

CBSE 10th Result 2021 LIVE:  மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) இன்று மதியம் 12 மணிக்கு 10 ஆம் வகுப்பு முடிவுகளை வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CBSE -யின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான cbseresults.nic.in, cbse.gov.in.- ல் இன்று மதியம் 12 மணிக்கு 2021-ஆம் ஆண்டின் 10 ஆம் வகுப்பு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். இது தவிர Digilocker, Umang செயலி மற்றும் எஸ்எம்எஸ் மூலமும் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

12 ஆம் வகுப்பைப் போலவே, இறுதி மதிப்பெண்கள் அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுகான தேதி மற்றும் நேரத்தை வாரியம் அறிவித்தது. 10 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று மதியம் 12 மணிக்கு இணையத்தில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோய் (Coronavirus) காரணமாக, CBSE இந்த ஆண்டு அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்தது. உள் மதிப்பீட்டின் அடிப்படையில் மாணவர்களின் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ | 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுகள்: ஹால் டிக்கெட் பதிவிறக்கம் துவங்கியது

மதிப்பெண்களை பார்ப்பதற்கான வழிமுறை:

CBSE -யின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான  cbseresults.nic.in அல்லது cbse.nic.in க்குச் செல்லவும்

- அடுத்த பக்கத்தில் கிளிக் செய்து, ரோல் எண் மற்றும் பிறந்த தேதி போன்ற உங்கள் தேர்வு விவரங்களை உள்ளிடவும்.

- விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு, உங்கள் 10 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

- உங்கள் முடிவு திரையில் டிஸ்பிளே செய்யப்படும்.

- எதிர்கால பயன்பாட்டுக்கு இதை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

ஜூலை 30, வெள்ளிக்கிழமை 12 ஆம் வகுப்பு மாணவர்களின் முடிவுகளை CBSE அறிவித்த நிலையில், 10 ஆம் வகுப்பு முடிவுகளுக்காக லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கின்றனர். சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாளர், வெள்ளிக்கிழமை  அன்று இது குறித்து கூறுகையில், 10 ஆம் வகுப்பு மாணவர்களின் முடிவுகளை விரைவில் அறிவிக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். 

ALSO READ: மதிப்பீட்டில் திருப்தி இல்லை என்றால் மாணவர்கள் தேர்வு எழுதலாம்: CBSE செயலாளர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News