மதிப்பீட்டில் திருப்தி இல்லை என்றால் மாணவர்கள் தேர்வு எழுதலாம்: CBSE செயலாளர்

சிபிஎஸ்இ (CBSE) 12வது பொது தேர்வுகள் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்,  மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக  பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 3, 2021, 07:36 PM IST
மதிப்பீட்டில் திருப்தி இல்லை என்றால் மாணவர்கள் தேர்வு எழுதலாம்: CBSE செயலாளர் title=

சிபிஎஸ்இ (CBSE) 12வது பொது தேர்வுகள் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்,  மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக  பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். 

முன்னதாக, கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவ தொடங்கியதை அடுத்து, CBSE 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாகவும், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைப்பதாகவும், மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்திருந்தது.

பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 12 ஆம் வகுப்புக்கான மதிப்பீட்டு அளவுகோல்கள்  குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாககவும், வல்லுநர்கள் இது குறித்த ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், மதிப்பீடு தொடர்பான இறுதி முடிவெடுக்க 2 வாரங்கள்  ஆகும் எனவும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) வியாழக்கிழமை, கூறியுள்ளது.

ALSO READ | CBSE: 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு: கல்வி அமைச்சகம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

இது குறித்து பேசிய சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி, மாணவர்கள் மதிப்பீட்டு முறையில் திருப்தி அடையவில்லை என்றால், கோவிட் -19 க்குப் பிறகு அவர்களுக்கு தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றார். "தேர்வு முடிவுகள் விஷயத்தில் மாணவர்கள் எந்தவொரு பிரச்சினையையும் எதிர்கொள்ளக்கூடாது என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். உயர் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை தொடங்குவதற்கு முன்பு அவர்களின் தேர்வு முடிவுகள் கிடைக்கும் என்று மாணவர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம்" என்று சிபிஎஸ்இ அதிகாரி கூறினார்.

12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளை அரசாங்கம் ரத்து செய்திருப்பதைக் குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைவதாகவும், மாணவர்களை மதிப்பீடு செய்வதற்கான நன்கு வரையறுக்கப்பட்ட  சிறந்த வழிமுறையை, இரு வார காலத்திற்குள் ஆராயுமாறு  சிபிஎஸ்இ (CBSE) மற்றும் சிஐசிஎஸ்இக்கு (CICSE ) உத்தரவிட்டதாக உச்சநீதிமன்றம் கூறிய சிறிது நேரத்திலேயே சிபிஎஸ்இ அதிகாரியின் கருத்துக்கள் வெளிவந்துள்ளதா வந்துள்ளன.

ALSO READ | Viral Video: மோடி ஜி இதை கேளுங்க, க்யூட்டான காஷ்மீர் குழந்தையின் கோரிக்கை நிறைவேறியதா

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News