CBSE Date Sheet 2023: சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை எப்போது வெளியீடு?

CBSE 10th 12th Date Sheet 2023: சிபிஎஸ்இ போர்டு தேர்வு அட்டவணை 2023 பற்றிய சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்ந்து பார்க்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 23, 2022, 04:33 PM IST
  • CBSE 10 ஆம், 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை 2023.
  • சிபிஎஸ்இ பத்தாம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான தகவல்.
  • சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புக்கான ஆண்டு இறுதித் தேர்வு.
CBSE Date Sheet 2023: சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை எப்போது வெளியீடு?  title=

CBSE 10 ஆம் வகுப்பு 12 ஆம் தேர்வு அட்டவணை 2023: CBSE தேர்வு அட்டவணை 2023 CBSE - cbse.gov.in இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தகால போக்குகளின்படி, சிபிஎஸ்இ தேர்வு தேதிகள் பொதுவாக தேர்வுக்கு 45 முதல் 60 நாட்களுக்கு முன்பு வெளியிடப்படும். மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரிவான அட்டவணையை விரைவில் எதிர்பார்க்கலாம். முன்னதாக ஜனவரி 01, ஆம் தேதி 2023 முதல் ப்ராக்ட்டிகல்ஸ் தேர்வுகளுக்கான தேதிகளை வாரியம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் மத்திய கல்வித்துறை மற்றும் சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் தகவலின்படி சிபிஎஸ்இ 10ம் வகுப்பு இறுதித் தேர்வு 2023, பிப்ரவரி 16ம் தேதியும், 12ம் வகுப்பு இறுதித் தேர்வு பிப்ரவரி 15ம் தேதியும் வெளியிடப்படும்”எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு ஜனவரி 1ம் தேதி தொடங்குகிறது. அத்துடன் மாணவர்கள் சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மட்டுமே தேர்வு தேதி அட்டவணையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | ஐஐடி மெட்ராஸில் வேலை பார்த்துக் கொண்டே படிக்கலாம்!

CBSE Date Sheet 2023: சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அப்டேட்

இந்த நிலையில் 2022–2023 இல் சிபிஎஸ்இ போர்டு தேர்வுகளை எழுதும் மாணவர்கள், கல்வி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து CBSE தேதித்தாள் 2023ஐ பதிவிறக்கம் செய்யலாம். 34 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் CBSE 10 ஆம் வகுப்பு மற்றும் 12 போர்டு தேர்வுகளை எழுத பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில் சுமார் 18 லட்சம் மாணாக்கர்கள் 10 ஆம் வகுப்பிலும், 16 லட்சம் பேர் 12 ஆம் வகுப்புத் தேர்வுகளையும் எழுத உள்ளனர்.

முன்னதாக நடப்பு கல்வியாண்டின் தமிழக அரசின் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தொடர்பான அட்டவணை தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அண்மையில் வெளியிடப்பட்டது. ஆனால் சிபிஎஸ்இ பாடப்பிரிவுகளுக்கு இன்னமும் பொதுத்தேர்வுகள் தேதி அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஸ்கூல் பேகில் என்னவெல்லாம் இருக்கும்? ஆணுறை, சிகரெட்? அதிர வைக்கும் பெங்களூர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News