IIT Madras மெட்ராஸ், பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கான ஆன்லைன் முதுகலை (M.Tech) படிப்பைத் தொடங்கியுள்ளது. இது நிர்வாகத் துறையில் உள்ளவர்கள் தங்கள் வேலையுடன் கல்வித் தகுதியைத் தொடர அனுமதிக்கும் பிரபலமான நிர்வாக எம்.பி.ஏ (MBA) படிப்புகளைப் போலவே உள்ளது. டெக்னாலஜி நிறுவனங்களில் இருந்து தகுதியான பொறியாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த ஆன்லைன் திட்டம் ஏற்கனவே பிரபலமடைந்துள்ளது.
ஏற்கனவே 600 க்கும் மேற்பட்ட பணிபுரியும் வல்லுநர்கள் வழக்கமான இரண்டு வருட படிப்புக்கு பதிலாக, மூன்று ஆண்டு படிப்புக்கு பதிவுசெய்துள்ளனர். வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்படுகின்றன மற்றும் அவர்களின் சொந்த நிறுவனங்களில் ப்ராஜெக்ட்ஸ் செய்யப்படலாம். ஐ.ஐ.டி மெட்ராஸ் அதன் தொடர் கல்வி மையம் மூலம் தொலைதூர முறையில் எம்.டெக் படிப்பை வழங்கும் முதல் ஐ.ஐ.டி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
ஐ.ஐ.டி மெட்ராஸ் மையத்தின் தலைவர் பேராசிரியர் தேவேந்திர ஜலிஹால் கூறுகையில், “இந்த திட்டத்தின் மாணவர்களுக்கு வழக்கமான மாணவர்களைப் போலவே உரிமைகளும் சலுகைகளும் உள்ளன. பணிபுரியும் வல்லுநர்கள் தங்கள் பணியிடங்களில் திட்டப்பணிகளை மேற்கொள்ளலாம். ஸ்பான்சர் செய்யப்பட்ட மாணவர்களுடன் ஒப்பிடும்போது அவர்களுக்கு எந்த வசிப்பிடமும் தேவையில்லை. 2020 இல் 14 மாணவர்கள் மட்டுமே இருந்த நிலையில், இந்த ஆண்டு எண்ணிக்கை 605 ஆக உயர்ந்துள்ளது,” என்று கூறினார்.
ஐ.ஐ.டி.,யின் ஆசிரியர்கள், பிற முதன்மை கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் பிரபல தொழில் வல்லுநர்கள் இந்த மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்துவார்கள். மாலையில் நடைபெறும் வகுப்புகளைத் தவிர, மாணவர்கள் தங்கள் ஆசிரிய உறுப்பினர்களுடன் நேரடி உரையாடலையும் நடத்துவார்கள். மாணவர்கள் தங்கள் அலுவலகங்கள் இருக்கும் நகரத்திலேயே தேர்வு எழுதலாம், என ஐ.ஐ.டி மெட்ராஸ் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாய்ப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ