பெங்களூரு: சில பள்ளி மாணவர்கள் வகுப்பறைகளுக்கு செல்போன்களை கொண்டு வருவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து மாணவர்களின் பைகளை ஆசிரியர்கள் சோதனையிட்டனர். அப்போது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் புத்தகப் பைகளில் ஆணுறைகள், கருத்தடைகள் மற்றும் சிகரெட்டுகள் இருப்பதைக் கண்டு பெங்களூரில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற பள்ளிப் பைகள் சோதனையில் ஆச்சரியத்தை மட்டுமல்ல, அதிர்வையும் ஏற்படுத்துகிறது.
மாணவர்களின் பைகளில் இருந்து ஆணுறைகள் தவிர, சிகரெட், லைட்டர்கள், கருத்தடை சாதனங்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இருப்பினும், சில மாணவர்கள் செல்போன்களையும் எடுத்துவந்தது சோதனையில் தெரியவந்தது.
8, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் பைகளில் ஆணுறை, கருத்தடை, லைட்டர், சிகரெட், ஒயிட்னர் மற்றும் ரொக்கம் போன்ற பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கர்நாடகாவில் உள்ள ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் தொடர்புடைய நிர்வாகம் (KAMS) மாணவர்களின் பைகளைச் சரிபார்க்கத் தொடங்குமாறு பள்ளிகளை கேட்டுக் கொண்டது. அதன் விளைவு எதிர்பாராத அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
இதனை அடுத்து, சில பள்ளிகளில் இது தொடர்பாக சிறப்பு பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்கள் நடத்தப்பட்டன. சிலர் பெற்றோர்களை ஒன்றாக அமர்ந்து குழந்தைகளுடன் இதைப் பற்றி பேசச் சொன்ன ஆசிரியர்கள், தாங்களும் இனிமேல் கண்காணிப்பை அதிகப்படுத்துவதாக சொன்னார்கள்.
மேலும் படிக்க | கடந்த வாரம் துரோகி! இந்த வாரம் நண்பேண்டா! அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!
இடைநீக்கத்திற்கு பதிலாக ஆலோசனை
இந்த முழு விஷயத்தையும் கருத்தில் கொண்டு, மாணவர்களை இடைநீக்கம் செய்வதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்று பள்ளிகள் முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக, பள்ளிகளில், பெற்றோருடன் கூட்டம் நடந்தது.
மாணவர்களின் நடத்தையில் இதுபோன்ற மாற்றத்தைக் கண்டதும், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியகள் அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டாலும், மாணவர்களின் எதிர்காலத்தை முன்னிட்டு, விஷயத்தை ஆக்கப்பூர்வமாக கையாள பள்ளிகள் நினைத்தன. இதற்காக பள்ளிகள் பெற்றோருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால் இந்த அறிவிப்பு முன்பு இருந்ததை விட முற்றிலும் மாறுபட்டது. மாணவர்களை இடைநீக்கம் செய்வதற்கு பதிலாக கவுன்சிலிங்கிற்கு பரிந்துரை செய்து பள்ளி நிர்வாகங்கள் ஆச்சரியத்தை அளித்துள்ளன. பள்ளிகளில் கவுன்சிலிங் அமர்வுகள் இருந்தாலும். குழந்தைகளுக்கும் வெளியில் இருந்து உதவி பெறுவதற்காக 10 நாட்கள் வரை விடுப்பு கொடுப்பதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதில், 10ம் வகுப்பு மாணவி ஒருவரின் பையில் ஆணுறை இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மாணவியிடம் விசாரித்த போது, தான் டியூஷன் படிக்கச் செல்லும் இடத்தைச் சேர்ந்தவர்களே இதற்கு காரணம் என மாணவி தெரிவித்தார். சுமார் 80 பள்ளிகளில் சோதனை நடத்தப்பட்டதாக ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் நிர்வாகத்தின் பொதுச் செயலாளர் டி சசிகுமார் தெரிவித்தார். அவர் கூறுகையில், 'மாணவி ஒருவரின் பையில் கருத்தடை ஐ-மாத்திரை இருந்தது. மேலும் தண்ணீர் பாட்டில்களில் மதுபானம் இருந்தது.
மாணவர்கள் தொடர்பான இந்த பிரச்னையை சமாளிக்க போராடி வருகிறோம் என்று அவர் தெரிவித்தார். பல சந்தர்ப்பங்களில் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களை துன்புறுத்தும் வகையில் தகாத வார்த்தைகளால் அச்சுறுத்தும் வேலையை பல மாணவர்கள் செய்வதும் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க | இந்தியா-சீனா இடையில் 2023ல் போர் நிச்சயம்! காரணங்களை அடுக்கும் அரசியல் நிபுணர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ