நாடு முழுவதிலும், கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தொடங்கி, தொற்று பாதிப்புகள் மிக வேகமாக பரவி வருகிறது, குறிப்பாக, மகாராஷ்டிரா, தில்லி, கேரளா, தமிழகம் உள்ளிட்ட சில இடங்களில் கொரோனா பரவல் அதிகம் உள்ளது.
இதுவரை இல்லாத அளவிற்கு தேசிய அளவில் தொடர்ந்து, ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பதிவகியுள்ளது. தேசிய அளவில் கடந்த 24 மணி நேரத்தில், 2.17 லட்சம் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் கோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக அம்மாநில அரசு சமீபத்தில் பிரேக் தி செயின் ('Break the Chain') என்னும் விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடக்கியது.
விழிப்புணர்வு பிரச்சாரத்தின் வெற்றியை உறுதிப்படுத்த எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும், நாசிக் நாணய பாதுகாப்பு பதிப்பகம் மற்றும் இந்திய பாதுகாப்பு பதிப்பகத்தில் (Nashik's Currency Security Press and India Security Press) ரூபாய் நோட்டுக்களை அச்சிடும் பணியை ஏப்ரல் 30 வரை அரசு நிறுத்தியுள்ளது.
ALSO READ | தீயாய் பரவும் கொரோனா; 10 நாட்களுக்கு லாக்டவுன் அமல்படுத்த வர்த்தக அமைப்பு கோரிக்கை
இந்த இரண்டு அச்சகங்களிலும், தீயணைப்பு படை, நீர் சப்ளை மற்றும் மருத்துவ சேவைகள் போன்ற அவசர சேவைகளுடன் தொடர்புடைய பணியாளர்கள் மட்டுமே பணியில் இருப்பார்கள். அவர்களும் ஷிப்ட் முறையில், மாறி மாறி, குறைந்து அளவிலான எண்ணிக்கையில் மட்டுமே பணியில் இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் புழக்கத்தில் விடப்படும் ரூபாய் நோட்டுக்களில் சுமார் 40 சதவீதம் நாசிக்கில் அச்சிடப்படுகின்றன. இரண்டு நிறுவனங்களில் சுமார் 3000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டும், கொரோனா வைரஸ் தொற்றுநோயால் , ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி சில நாட்களுக்கு நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | சில மாநிலங்களில் சரியான திட்டமிடல் இல்லை, 9% தடுப்பூசிகள் வீணாகியுள்ளன: மத்திய அரசு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR