CrPC திருத்த மசோதா; இனி குற்றவாளிகள் தப்புவது சுலபமல்ல

குற்றவாளிகளுக்கு எதிரான மிக முக்கிய மசோதாவாக கருதப்படும் CrPC மசோதா அமலுக்கு வந்த பிறகு, கடுமையான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தப்புவது சுலபம் அல்ல. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 7, 2022, 12:34 PM IST
  • குற்றவாளிகளின் பயோமெட்ரிக் பதிவுகளை எடுக்க இப்போது காவல்துறைக்கு உரிமை.
  • அறிவியல் ஆதாரங்களை மேலும் வலுப்படுத்துவதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கம்.
  • பிரதமர் நரேந்திர மோடியின் ஸ்மார்ட் போலீஸ் கனவை நனவாக்கும் மசோதா.
CrPC திருத்த மசோதா; இனி குற்றவாளிகள் தப்புவது சுலபமல்ல title=

CrPC திருத்த மசோதா (குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா குற்றவாளிகளுக்கு எதிரான மிக முக்கிய மசோதாவாக கருதப்படுகிறது. கடுமையான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் பயோமெட்ரிக் பதிவுகளை எடுக்க இப்போது காவல்துறைக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது குறிப்பிடத்தக்க மாற்றமாக கருதப்படுகிறது.

 நாட்டில் நடக்கும் கடுமையான குற்றங்களில் பாதிக்கும் மேற்பட்ட குற்றவாளிகள், ஆதாரங்கள் இல்லாததால் தான் மறைந்து விடுகின்றனர் என உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த மசோதாவுக்குப் பிறகு, கைரேகை போன்ற ஆதாரங்களை சேகரிக்கும் உரிமை காவல்துறையினருக்கும் கிடைக்கும் நிலையில், இது விசாரணைக்கு பெரிதும் உதவும்.

அறிவியல் ஆதாரங்களை மேலும் வலுப்படுத்துவதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கம். எந்த ஒரு சம்பவம் நடந்தாலும், இனி அந்த இடத்தில் இருந்து தேவையான அறிவியல் ஆதாரங்களை போலீசார் சேகரிப்பார்கள். சேகரிக்கப்பட்ட அனைத்து தரவுகளும் NCRB, அதாவது தேசிய குற்றப்பதிவு பணியகத்திற்கு அனுப்பப்படும். 

இதன் மூலம், குற்றவாளி ஏற்கனவே ஏதேனும் குற்றத்தில் ஈடுபட்டுள்ளாரா அல்லது முதல் முறையாக குற்றத்தை செய்தாரா என்பது குறித்த தகவல் போலீசாருக்கு எளிதில் கிடைக்கும். இந்த மசோதாவில், கைது செய்யப்பட்ட எந்தவொரு நபரின் தனிப்பட்ட உயிரியல் தரவுகளையும் சேகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கைரேகைகள், கால்தடங்கள், உள்ளங்கை ரேகைகள், விழித்திரை ஸ்கேன், உடல், உயிரியல் மாதிரிகள் மற்றும் அவற்றின் பகுப்பாய்வு, கையொப்பம், கையெழுத்து அல்லது குற்றவாளியின் பிற தரவுகளை காவல்துறை சேகரிக்கலாம்.

மேலும் படிக்க | மத்திய அரசு 22 யூடியூப் சேனல்கள், 3 ட்விட்டர் கணக்குகளை முடக்கியுள்ளது

ஒரு கொலை வழக்கில், போலீசார் அந்த இடத்தில் இருந்து கைரேகைகளை எடுத்த நிலையில், அவரது தரவு என்சிஆர்பியில் அளிக்கப்படும். குற்றவாளி இதற்கு முன் வேறு ஏதேனும் வழக்கில் ஈடுபட்டிருந்தால், அதன் முழு விவரம் தெரியவரும். எதிர்காலத்தில் அவரது தரவு என்சிஆர்பியின் சர்வரில் பாதுகாப்பாக இருக்கும். இதன் மூலம் காவல்துறையின் பணி மிகவும் எளிதாகும் என்றும், யாருடைய தனியுரிமையும் மீறப்படாது என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

தனியுரிமை மீறப்படாத வகையில், மசோதாவில் மிகக் கடுமையான விதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தவிர, ஏழு ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தங்கள் உயிரியல் மாதிரிகளை வழங்க மறுக்கலாம் என்ற விதியும் உள்ளது.

மேலும் படிக்க | பெட்ரோல் டீசல் விலை குறையுமா; நிதி அமைச்சர் கூறுவது என்ன..!!

இந்தத் தரவுகள் தேசிய குற்ற ஆவணக் பணியகத்தில் (NCRB) 75 ஆண்டுகளுக்குப் பாதுகாப்பாக வைக்கப்படும். எந்தவொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் காவல்துறையும் இந்தத் தரவைச் சேகரிக்க வேலை செய்யும். இந்தத் தரவைச் சேமிக்கவும், பாதுகாக்கவும், அழிக்கவும் என்சிஆர்பிக்கு அதிகாரம் இருக்கும்.

இது ஒரு புரட்சிகரமான மாற்றம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். பிரதமர் நரேந்திர மோடியின் ஸ்மார்ட் போலீஸ் கனவை நனவாக்குவது போன்ற மசோதா இது எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், கடுமையான குற்றச் செயல்களில் மட்டுமே இந்த மசோதா பொருந்தும் என்றும் அவர் கூறினார். அரசியல் விவகாரங்களில், கடுமையான குற்றச் செயல்கள் நடந்தாலொழிய இந்த மசோதா அதற்கும் பொருந்தாது என அவர் குறிப்பிட்டார். 

மேலும் படிக்க | ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத சம்பவங்கள் கணிசமாக குறைந்துள்ளன: உள்துறை அமைச்சகம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News