10 நாள்களில் 4.5 கிலோ எடை குறைந்த அரவிந்த் கெஜ்ரிவால்... திஹார் ஜெயிலின் பதில் என்ன?

Arvind Kejriwal Health Update: திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமடைந்து, அவர் 4.5 கிலோ எடை குறைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Apr 3, 2024, 11:32 AM IST
  • அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
  • அவருக்கான நீதிமன்ற காவல் ஏப். 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • தற்போதும் அவர் டெல்லி முதல்வராக தொடர்கிறார்.
10 நாள்களில் 4.5 கிலோ எடை குறைந்த அரவிந்த் கெஜ்ரிவால்... திஹார் ஜெயிலின் பதில் என்ன? title=

Arvind Kejriwal Health Update In Tihar Jail: டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் கடந்த மார்ச் 21ஆம் தேதி அன்று கைது செய்தனர். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். அவரை கடந்த திங்கட்கிழமை அன்று அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

அப்போது, அவரின் நீதிமன்ற காவலை வரும் ஏப்.15ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இரண்டு நாள்களுக்கு முன் அவர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அரவிந்த் கெஜ்ரிவாலை விடுதலை செய்தால் தற்போது நடைபெற்று வரும் பணமோசடி வழக்கின் விசாரணைக்கு இடையூறாக இருக்கும் என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து டெல்லி நீதிமன்றம் அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. விசாரணைக்கு கெஜ்ரிவால் ஒத்துழைக்கவில்லை என்றும் அமலாக்கத்துறை கூறியுள்ளது. டெல்லி முதல்வரின் இடைக்கால ஜாமீன் இன்று விசாரணைக்கு வருகிறது.

'கடவுள் கூட மன்னிக்க மாட்டார்...'

இது ஒருபுறம் இருக்க அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை தற்போது மோசமடைந்திருப்பதாகவும், அவர் கைது செய்யப்பட்டதில் இருந்து சுமார் 4.5 கிலோ எடை குறைந்திருப்பதாகவும் ஆம் ஆத்மி தலைவர் பகீரங்கமாக தெரிவித்துள்ளார். டெல்லி அமைச்சரான ஆதிஷி இதுகுறித்து அவரது X பதிவில்,"அவரின் உடல்நிலை கவலைக்குரியதாக இருந்தாலும், அவர் நாட்டுக்காக மணிக்கணக்காக உழைத்தார். 

மேலும் படிக்க | ராகுல் காந்தி கேரளாவை விடுத்து உத்தர பிரதேசத்தில் போட்டியிட வேண்டும்: CPI(M) காட்டம்

கைதானதில் இருந்து தற்போது வரை 4.5 கிலோ உடல் எடை அவருக்கு குறைந்துள்ளது. இது கவலைக்கொள்ள செய்கிறது. அவரின் உடல்நிலையை பாஜக இன்னும் மோசமாக்குகிறது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏதும் நடந்தது என்றால், இந்த நாடு மட்டுமல்ல கடவுளும் கூட அவர்களை மன்னிக்க மாட்டார்" என குறிப்பிட்டுள்ளார். 

சிறை தரப்பில் மறுப்பு

இருப்பினும், சிறை தரப்பில் இருந்து இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து அவரது உடல் எடையில் எவ்வித மாற்றமும் இல்லை என சிறை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சிறை தரப்பில் வெளியான தகவலின்படி, அவர் சிறைக்கு அழைத்து வரப்பட்டபோது 55 கிலோ இருந்துள்ளார், அதில் இப்போது எவ்வித மாற்றமும் இல்லை. அவரின் ரத்த சர்க்கரை அளவும் இயல்பாக உள்ளது. அவர் காலையில் யோகா மற்றும் தியானம் செய்கிறார். சிறையிலேயே நடைபயிற்சியும் மேற்கொள்கிறார் என தெரிவிக்கப்படுகிறது. 

திஹார் சிறையின் இரண்டாம் நம்பர் கொண்ட 14x8 அறையில் அரவிந்த் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் ரத்த சர்க்கரை அளவில் சில ஏற்ற இறக்கங்கள் இருந்ததாகவும், அது 50க்கும் கீழ் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க அவருக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவரின் ரத்த சர்க்கரை அளவு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

வீட்டில் இருந்து சமைக்கப்பட்டு கொண்டு வரப்படும் உணவே, அவருக்கு மதியமும், இரவும் பரிமாறப்படுகிறது. ஏதும் உடல்நிலை சார்ந்த அவசர சூழல் ஏற்பட்டாலும் உடனடியாக சிகிச்சை அளிக்க அதற்கான குழு தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், அவரது மனைவி சுனிதாவுடன் நேற்று காணொலி காட்சி மூலமாக உரையாடினார். நேரடியாக அவரது வழக்கறிஞரையும் சந்தித்து பேசியுள்ளார்.  

மேலும் படிக்க | குஜராத் பிஜேபியில் அரசியல் குழப்பம்.. இந்தமுறை பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படலாம்?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News