இந்த தீபாவளியையும் பிரதமர் மோடி எல்லையில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடக்கூடும்

நமது இந்தியப் பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி பண்டிகையை எல்லைப் பகுதிகளில் இராணுவ வீரர்களுடன் கொண்டாட வாய்ப்புள்ளது என தெரிய வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 13, 2020, 02:40 PM IST
  • இவ்வண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 14 சனிக்கிழமை கொண்டாடப்படும்.
  • பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவார் என தெரிகிறது.
  • தீபாவளியை படையினருடன் கொண்டாடுவதை பிரதமர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்த தீபாவளியையும் பிரதமர் மோடி எல்லையில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடக்கூடும் title=

புதுடெல்லி: தீபாவளித் திருநாள் நாடு முழுதும் நாளை கொண்டாட்டப்படும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நாடு முழுதும் நடந்துகொண்டிருக்கின்றன.

நம் நாட்டின் ராணுவப் படையினர் (Indian Army) மட்டும் வழக்கம் போல நாட்டின் எல்லையை பாதுகாத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களது தீபாவளி நாளை சிறப்புமிக்கதாக்க பிரதமர் ஒவ்வொரு ஆண்டும் முயற்சி எடுப்பதை நாம் அனைவரும் பார்த்துள்ளோம்.

நமது இந்தியப் பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தீபாவளி பண்டிகையை எல்லைப் பகுதிகளில் இராணுவ வீரர்களுடன் கொண்டாட வாய்ப்புள்ளது என தெரிய வருகிறது. அவர் நாட்டின் பிரதமராக பதவியேற்ற காலத்திலிருந்தே, தீபாவளி பண்டிகையை எல்லையில் உள்ள வீரர்களுடன் கொண்டாடி வருகிறார்.

சிபிஎஸ் ஜெனரல் பிபின் ராவத் தீபாவளி கொண்டாட்டத்தில் வீரர்களுடன் பிரதமர் மோடியுடன் சேரக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ: Twitter மீது நடவடிக்கை எடுக்கத் தயாராகும் மோடி அரசு நோட்டீஸ் அனுப்பியது

முன்னரும், தீபாவளியன்று பாகிஸ்தான் (Pakistan) மற்றும் சீனாவின் எல்லையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு பிரதமர் மோடி விஜயம் செய்துள்ளார்.

கடந்த ஆண்டு, பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.

2018 ஆம் ஆண்டில் அவர் உத்தரகண்ட் எல்லை நிலைகளில் இருந்தார். அவர் 2017 இல் வடக்கு காஷ்மீரின் குரேஸ் துறைக்கு விஜயம் செய்தார். அங்கு தீபாவளியை பணியில் இருந்த வீரர்களுடன் கொண்டாடினார்.

2015 ல் தீபாவளியில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள எல்லைக்கு பிரதமர் மோடி விஜயம் செய்தார்.

இந்தியப் பிரதமராக தான் பதவி ஏற்றபிறகு வந்த முதல் தீபாவளியைக் கொண்டாடுவதற்காக பிரதமர் மோடி 2014 ஆம் ஆண்டில் சியாச்சின் பேஸ் காம்ப் முகாமுக்கு சென்று படையினரைச் சந்தித்தார்.

இவ்வண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 14 சனிக்கிழமை கொண்டாடப்படும்.

ALSO READ: தன்னம்பிக்கை இந்தியா 3.0 திட்டத்தில் யார் அதிகம் பயனடைவார்கள்- இதோ முழு விவரம்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News