பாகிஸ்தான் காலிஸ்தான் தொடர்புள்ள 1178 டுவிட்டர் கணக்குகளை முடக்கவும்: மத்திய அரசு

விவசாயிகள் போராட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்பி, அதன் மூலம் போராட்டங்கள் தூண்ட, இந்த கணக்குகள் வேலை செய்வதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 8, 2021, 04:47 PM IST
  • தற்போது ட்விட்டரில் இந்தியாவில், பொது கொள்கை, பிரிவு மற்றும் தெற்காசியாவின் இயக்குநராக இருக்கும் மஹிமா கவுல் பதவி விலகியுள்ளார்.
  • இந்தியாவை வலுவிழக்க செய்யும் நோக்கம் தெளிவாக அம்பலமானதை அடுத்து, அரசு கடுமையாக நடவடிக்கை எடுத்துள்ளது.
  • விவகாரங்களில் எந்தவொரு நிபுணத்துவமும் இல்லாத சில சர்வதேச பிரபலங்கள், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ட்விட்டரில் தங்கள் ஆதரவை வழங்கினர்.
பாகிஸ்தான் காலிஸ்தான் தொடர்புள்ள 1178 டுவிட்டர் கணக்குகளை முடக்கவும்: மத்திய அரசு title=

பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தானுடன் தொடர்புள்ள 1178  டுவிட்டர் கணக்குகளை முடக்குமாறு டுவிட்டர் நிறுவனத்திடம் அரசு கூறியுள்ளது. விவசாயிகள் போராட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்பி, அதன் மூலம் போராட்டங்கள் தூண்ட, இந்த கணக்குகள் வேலை செய்வதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக, குறிப்பிட்ட 1178 டுவிட்டர் கணக்குகளின் பட்டியலை டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது.
இந்த பட்டியல் பிப்ரவரி 4ம் தேதி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். விவசாயிகள் போராட்டத்தை தூண்டும் வகையில், தவறான தக்வல்களை பதிவிட்டு ட்வீட் செய்து, சட்ட ஒழுங்கிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், தற்போது ட்விட்டரில் இந்தியாவில் (India), பொது கொள்கை, பிரிவு மற்றும் தெற்காசியாவின் இயக்குநராக இருக்கும் மஹிமா கவுல் பதவி விலகியுள்ளதாக, அந்நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. எனினும் இவர் மார்ச் இறுதி வரை தலைமை பொறுப்பு வகிப்பார் எனவும் ட்விட்டர் (Twitter) நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச சதியின் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் இருந்து விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, வெளிநாடுகளில் இருந்து ட்வீட் செய்யப்பட்டதை அடுத்து, அரசு தனது கடுமையாக கருத்து தெரிவித்து, டுவிட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தியாவை வலுவிழக்க செய்யும் நோக்கம் தெளிவாக அம்பலமானதை அடுத்து, அரசு கடுமையாக நடவடிக்கை  எடுத்துள்ளது.  இந்திய விவகாரங்களில் எந்தவொரு நிபுணத்துவமும் இல்லாத சில சர்வதேச பிரபலங்கள், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ட்விட்டரில் தங்கள் ஆதரவை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | இந்தியா வீழ்த்த நினைக்கும் புதிய FDI குறித்து எச்சரிக்கை தேவை: பிரதமர் மோடி

 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News