இந்தியா வீழ்த்த நினைக்கும் புதிய FDI குறித்து எச்சரிக்கை தேவை: பிரதமர் மோடி

மாநிலங்கள் அவையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை மீதான எம்.பிக்கள் கருத்துகளுக்கு பதிலளித்து பிரதமர் மோடி நிகழ்த்திய உரையின் முக்கிய அம்சங்கள். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 8, 2021, 03:29 PM IST
  • அறிவு ஜீவிகள் போல போராட்ட ஜீவிகள் என்றொரு புதிய வகைக் கூட்டம் நாட்டில் உருவாகியுள்ளது.
  • விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாய சங்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறார்.
  • கொரோனா எனும் பேரிடரை இந்தியா வெற்றிகரமாக போராடி தன்னை நிரூபித்துள்ளது.
இந்தியா வீழ்த்த நினைக்கும் புதிய FDI குறித்து எச்சரிக்கை தேவை: பிரதமர் மோடி title=

மாநிலங்கள் அவையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை மீதான எம்.பிக்கள் கருத்துகளுக்கு பதிலளித்து பிரதமர் மோடி நிகழ்த்திய உரையின் முக்கிய அம்சங்கள்: 

- விவசாயிகள் குறிப்பாக சிறு, குறு விஉவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் அரசு உறுதியாக இருக்கிறது.

- விவசாய விளை பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை MSP, முன்பும் இருந்தது, இப்போதும் இருக்கிறது, வருங்காலத்திலும் இருக்கும்.

- இந்தியாவை (India) வீழ்த்த நினைக்கும் புதிய FDI அதாவது, Foreign Destructive Ideology, என்ற புதிய சிந்தனை குறித்து எச்சரிக்கை தேவை, மக்கள் அதை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்றார். 

- அறிவு ஜீவிகள் போல போராட்ட ஜீவிகள் என்றொரு புதிய வகைக் கூட்டம் நாட்டில் உருவாகியுள்ளது. இந்த போராட்ட ஜீவிகளை. எல்லாவிதமான போராட்டங்களிலும் பார்க்கலாம்.  இவர்களுக்கு தொழிலே போராட்டம் தான். அதைக் கொண்டு தான் வாழ்க்கை நடத்துகின்றனர். 

-விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் (Narendra Singh Tomar), விவசாய சங்க தலைவர்களுடன்  பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறார். போராடும் விவசாயிகள் இந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ல வேண்டும் என இந்த சபையின் மூலம்  அழைப்பு விடுக்கிறேன்.

-கொரோனா எனும் பேரிடரை இந்தியா வெற்றிகரமாக போராடி தன்னை நிரூபித்துள்ளது. உலககிற்கும் கொரோன்ன தடுபூசியை வழங்கி உதவ வருகிறது. இது ஒரு தனிமனிதரின் சாதனை அல்ல. இந்தியாவின் சாதனை. 

- இந்தியாவின் திறமை மீது உலக நாடுகள் நம்பிக்கை வைத்திருக்கும் உலக நாடுகள் இந்தியாவிடம் இருந்து உலக நாடுகள் நிறைய எதிர்பார்க்கின்றன. நமக்காக ஏராளமான வாய்ப்புகள் காத்து கொண்டிருக்கின்றன.

- குடியரசுத் தலைவர் RamNath Kovind உரையில் என்ன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை புரிந்து கொள்ளாமல், எதிர்க்கட்சியினர் அதை விமர்சிக்கின்றனர். நாடு 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேளையில், இந்தியாவை வீழ்த்த நினைக்கும் அன்னிய சக்திகளுக்கு இடம் கொடுக்காமல், தேச நலனுக்கு அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும்.

ALSO READ | WATCH: குறுகிய சுரங்கத்திலிருந்து ஒரு நபரை மீட்ட ITBP. வைரலாகும் வீடியோ..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News