இந்தியாவின் ஒரே அலுவல் மொழியாகிறதா இந்தி? அமித் ஷா சூசகம்

இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தியை பயன்படுத்த பிரதமர் முடிவு செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 8, 2022, 01:24 PM IST
  • இந்தி மொழியின் முக்கியத்துவத்தை அதிகரிக்க வேண்டும்
  • ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி பயன்படுத்த வேண்டும்
  • மாநில மொழிகளின் முக்கியத்துவம் குறையாது என அமித்ஷா விளக்கம்
இந்தியாவின் ஒரே அலுவல் மொழியாகிறதா இந்தி? அமித் ஷா சூசகம் title=

இந்தியாவின் அலுவல் மொழிகளாக ஆங்கிலம் மற்றும் இந்தி பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை குறைத்து இந்திக்கான முக்கியத்துவத்தை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 37வது பாராளுமன்ற அலுவல் மொழிக் கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இக்கூடத்துக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர், அரசாங்கத்தை நடத்துவதற்கான அலுவல் மொழியே, நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி என்பதை பிரதமர் மோடி முடிவு செய்திருப்பதால், இது இந்தி மொழியின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். 

மேலும் படிக்க | CrPC திருத்த மசோதா; இனி குற்றவாளிகள் தப்புவது சுலபமல்ல

" நாட்டின் ஒருமைப்பாட்டை அதிகரிக்க அலுவல் மொழியின் முக்கியத்துவத்தையும், பயன்பாட்டையும் அதிகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. பல்வேறு மொழிகளில் உரையாடும் மாநில மக்கள், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது அந்த மொழி இந்திய மொழியாக இருக்க வேண்டும். இந்தி மொழி உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்துக்கு மாற்றாக. பிற உள்ளூர் மொழிகளில் இருக்கும் வார்த்தைகள் இந்தி மொழியில் ஏற்றுக் கொள்ளும் வகையில் நெகிழ்வாக மாற்ற வேண்டும். 

9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் அடிப்படை அறிவை கொடுக்க வேண்டும். இந்தி கற்பித்தல் தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார். உள்துறை அமைச்சகத்தின் 70 விழுக்காடு நிகழ்ச்சி நிரல்கள் இந்தி மொழியில் மட்டுமே இருப்பதாக தெரிவித்த அமித் ஷா, 8 வடகிழக்கு மாநிலங்களில் 22,000 இந்தி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக கூறினார். 

மேலும், ஒன்பது பழங்குடி இன மக்கள் தங்களின் மொழிகளை தேவ நாகரிக்கு மாற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமித்ஷா, இந்த மாநிலங்கள் 10 ஆம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக்க ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தி மொழி ஆதிக்கம் குறித்து அவர் பேசும்போது, பிராந்திய மொழிகளின் முக்கியத்துவம் குறைக்கப்படாது, ஆங்கிலத்துக்கு மாற்றாக மட்டுமே இந்தி பயன்படுத்தப்படுகிறது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். 

மேலும் படிக்க | RBI Monetary Policy: ரெப்போ விகிதங்களில் மாற்றம் இல்லை, 4% விகிதம் தொடரும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News