Shraddha Walker Murder: மே 18 புதன்கிழமை இரவு அன்று ஷ்ரத்தா சந்தேகத்திற்கு இடமின்றி கொல்லப்பட்டார். ஆனால் அப்தாப் மக்களின் கண்களில் மண்ணை தூவிவிட்டு அவள் உயிருடன் தான் இருக்கிறார் என நம்ப வைத்திருந்தார். எப்படி என்றால், ஷ்ரத்தாவின் உயிரைப் பறித்த பிறகு, அவரின் கிரெடிட் கார்டு கட்டணங்களை அப்தாப் செலுத்தி வந்தார். மேலும் ஷ்ரத்தாவின் சமூக ஊடகங்களில் உள்ள கணக்கையும் கையாண்டார். அதனால் ஷ்ரத்தாவின் மரணம் குறித்து அவரது நண்பர்கள் மற்றும் தோழிகளுக்கு எந்த சந்தேகமும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என பார்த்துக்கொண்டார். ஷ்ரத்தா இன்னும் உயிருடன் இருப்பதாகவும் அவர்களையும் நம்ப வைத்துள்ளார். இந்த முயற்சியில் அப்தாப் பெரிய அளவில் வெற்றி பெற்றார். ஆனால் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஷ்ரத்தாவின் சமூக ஊடக கணக்கைக் கையாண்ட பிறகு, ஜூலை மாதத்தில் அப்தாப் இந்த முயற்சியை கைவிட்ட போது, ஷ்ரத்தாவின் நண்பர்கள் சந்தேகம் அடைந்தனர். போனும் ஆப் செய்யப்பட்டு உள்ளது. சமூக ஊடகங்களிலும் இல்லை என அறிந்து, இதுக்குறித்து ஷ்ரத்தாவின் குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு தான் உண்மை வெளிசத்துக்கு வந்தது.
சல்பூரிக் ஹைபோகுளோரிக் அமிலம்:
அப்தாப் கைது செய்யப்பட்ட பிறகு, அவர் மக்களை ஏமாற்றுவதற்காக ஷ்ரத்தாவின் சமூக ஊடக கணக்கை செயலில் வைத்திருப்பது மட்டுமல்லாமல், சடலத்தை சிதைத்த பிறகு வீட்டில் சிதறிய இரத்தக் கறைகள் மற்றும் வாசனையை அகற்ற கந்தகத்தைப் பயன்படுத்தி உள்ளார். மார்க்கெட்டில் இருந்து ஆசிட் வாங்கி வந்து, அதைக் கொண்டு தினமும் குளியலறையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அதனால் ஒரு சொட்டு கூட ரத்தம் தேங்கவில்லை. ரத்தக் கறையை நீக்கி அதன் வாசனையைத் தவிர்ப்பது எப்படி என்பதை அறிய கூகுளிலும் தேடியுள்ளார்.
துர்நாற்றத்தை மறைக்க ரூம் ஃப்ரெஷ்னர் மற்றும் அகர்பத்தி:
சடலம் இருப்பதால் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசக்கூடாது மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக ரூம் ஃப்ரெஷ்னர் மற்றும் அகர்பத்திகளை அவர் தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளார். எப்படி என்றால், ஒரு கொலை செய்து வீட்டில் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்த பிறகும் அப்தாப் தனது புதிய காதலியை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளான். அப்போது கூட ஷ்ரத்தாவின் சடலத்தின் சில துண்டுகள் இன்னும் அவனது வீட்டில் இருந்தன. ஆனாலும் அவனுடன் வீட்டுக்கு வந்த புதிய காதலிக்கு கூட அங்கு ஒரு கொடூரமான கொலை நடந்துள்ளது என்பதை அறிந்துக்கொள்ள முடியவில்லை. அங்கே ஒரு பெண் கொலை செய்யப்பட்டதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை. அனைத்தையும் சரியாக கையாண்டு உள்ளார். தனது புதிய காதலி வீட்டுக்கு வருவதால், ஃப்ரிட்ஜில் இருந்து இறந்த உடலின் துண்டுகளை வெளியே எடுத்து அலமாரியில் மறைத்து வைத்துள்ளான் அப்தாப்.
கூகுளின் உதவியை நாடிய அப்தாப்:
போலீஸ் விசாரணையில், ஷ்ரத்தா கொலைக்குப் பிறகு, கூகுளில் தேடியதாகவும், மனித உடற்கூறியல் பற்றி ஆய்வு செய்ததாகவும், அது ஷ்ரத்தாவின் சடலத்தை சிதைக்க உதவியது என்றும் அப்தாப் கூறியுள்ளார். தற்போது, அப்தாபின் மொபைல் போன், லேப்டாப் மற்றும் பிற மின்னணு சாதனங்களை போலீசார் மீட்டுள்ளனர். கேஜெட்களில் இருக்கும் கால்தடங்களை அப்தாபின் வாக்குமூலத்துடன் பொருத்த முடியும் என்பதற்காக, அதன் தேடல் வரலாற்றைப் பற்றி தெரிந்துக்கொள்ள போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் படிக்க: Delhi Murder Case: கடும் தண்டனையில் இருந்து தப்பிக்க அப்தாப் போடும் மெகா பிளான்
சில எலும்புகளை போலீசார் மீட்டுள்ளனர்:
அப்தாபின் இலக்கில் மெஹ்ராலி மற்றும் சத்தர்பூர் பகுதிகளில் இருந்து சில எலும்புகளை போலீசார் கண்டுபிடித்தனர். ஆனால் இந்த எலும்புகள் ஷ்ரத்தாவின் இறந்த உடலின் பாகமா என்பதை உறுதியாக கூற முடியாது. உண்மையில், பிரச்சனை என்னவென்றால், ஆறு மாதங்கள் ஆகிவிட்டதால், உடல் திசு அல்லது சடலத்தின் துண்டுகளை இப்போது கண்டுபிடிக்க முடியாது. ஆனால், எலும்புகள் அவ்வளவு சீக்கிரம் மறைந்துவிடாது. அந்த காட்டில் வனவிலங்குகளாக இருந்தாலும், சில எலும்புத் துண்டுகள் கிடைக்கலாம். அவை ஷ்ரத்தாவின் சடலத்தின் பாகங்கள் என்று டிஎன்ஏ மூலம் நிரூபணமானால், வழக்கு கண்ணாடியைப் போல் தெளிவாகிவிடும் என்று போலீசார் முயற்சித்து வருகின்றனர்.
ஆனால் தவறுதலாக, ஷ்ரத்தாவின் சடலத்தின் எந்த பாகமும் போலீசாருக்கு கிடைக்கவில்லை என்றால், வழக்கு சிக்கிவிடும். ஷ்ரத்தா உண்மையில் இறந்துவிட்டார் என்பதை முதலில் போலீசார் நிரூபிக்க வேண்டும். ஆறு மாத சடலத்தின் ஆதாரத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்பதை காவல்துறையினரே ஒப்புக்கொள்கிறார்கள். இருப்பினும், ஆதாரங்களை கண்டுபிடிக்க, போலீசார் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்தாபின் வாக்குமூலத்தை நிருபிக்க ஆதாரம் அவசியம்:
அவர் அளித்த வாக்குமூலம் தொடர்பான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்போதுதான் அப்தாப் போலீஸ் முன் ஒப்புக்கொண்ட விஷயங்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் செல்லுபடியாகும். காட்டில் கண்டெடுக்கப்பட்ட பிணத்தின் துண்டுகள் ஷ்ரத்தாவின் உடல் பாகம் தான் என்பதை நிரூபிப்பதுடன், ஷ்ரத்தாவை அப்தாப் தான் கொலை செய்தான் என்பதை நிரூபிக்க இயலும்.
ஆதாரங்களை சேகரிப்பதில் சிக்கல்:
ஆனால் இப்போது ஆறு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், அப்தாப் தனது வீட்டையும், ஃப்ரிட்ஜையும் சல்பர் ஹைபோகுளோரிக் ஆசிட் மூலம் சுத்தம் செய்து வந்ததால், அங்கிருந்து ஆதாரங்களை சேகரிக்க காவல்துறைக்கும், தடயவியல் நிபுணர்களுக்கும் சுலபமாக இருக்கப் போவதில்லை என்றே தோன்றுகிறது.
சிசிடிவி கேமராவை ஆய்வு செய்யும் போலீசார்:
அப்தாபின் வீட்டிற்கு அருகிலுள்ள சத்தர்பூர் மலையில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர், ஆனால் இதுவரை விசாரணையில், ஷ்ரத்தா கொலையுடன் தொடர்புடைய எந்த காட்சிகளையும் போலீசார் கண்டுபிடிக்கவில்லை. உண்மையில், சம்பவம் நடந்து ஆறு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது, வழக்கமாக சிசிடிவி காட்சிகள் 90 நாட்களுக்கு அதாவது மூன்று மாதங்களுக்கு மட்டுமே காப்புப் பிரதி எடுக்கப்படும்.
மேலும் படிக்க: கொடூர கொலையை நினைவுபடுத்திய டெல்லி சம்பவம்! மனைவியை 72 துண்டுகளாக வெட்டி வீசிய கணவன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ