Good News: கிரிக்கெட் வீரர் கபில் தேவ் நலமுடன் வீடு திரும்பினார்..!!!

இந்தியாவிற்கு உலக கோப்பையை பெற்றுத் தந்த  கபில் தேவ், ஹரியானாவின் சூறாவளி (The Haryana Hurricane) என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 25, 2020, 07:50 PM IST
  • இந்தியாவிற்கு உலக கோப்பையை பெற்றுத் தந்த கபில் தேவ், ஹரியானாவின் சூறாவளி (The Haryana Hurricane) என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.
  • நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
  • உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Good News: கிரிக்கெட் வீரர் கபில் தேவ் நலமுடன் வீடு திரும்பினார்..!!! title=

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் இன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். மாரடைப்பு காரணமாக நேற்று முன் தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது

இந்தியாவிற்கு (India)  உலக கோப்பையை பெற்றுத் தந்த  கபில் தேவ், ஹரியானாவின் சூறாவளி  என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். 61 வயதான கபில்தேவ் டெல்லியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவருக்கு நடத்திய பரிசோதனையில் இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.  அடைப்பை நீக்க ‘ஆஞ்சியோ பிளாஸ்டி’ சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில்  அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

கபில்தேவ் உடல் நிலை தொடர்ந்து சீராக உள்ளதையடுத்து கபில்தேவ் இன்று வீடு திரும்பியதாக தகவல்கள் வந்துள்ளன.

ALSO READ | அமைதியை விரும்பும் அதேநேரத்தில், ஒரு அங்குல நிலத்தை கூட இந்தியா விட்டுத்தராது: Rajnath Singh

முன்னதாக, அவர் மருத்துமனையில் நலமாக இருப்பதை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் வகையில், கையை உயர்த்திக்காட்டி புன்னகைக்கும் புகைப்படம் நேற்று வெளியிடப்பட்டது. 

கபில் தேவ் மருத்துவமனையிலிருந்து செய்யப்படுவதற்கு முன்பு அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர் அதுல் மாத்தூருடன் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

முதல்முறையாக உலக கோப்பையை 1983-ம் ஆண்டு இந்தியாவிற்கு  பெற்றுத் தந்த மகத்தான கேப்டன் கபில்தேவ் என்பது குறிப்பிடத்தக்கது. 

மிகச் சிறப்பான கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக கருதப்படும் கபில் தேவ் ,131 டெஸ்ட் மற்றும் 225 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றில் 400 விக்கெட்டுகளுக்கு அதிகமாக (434) வீழ்த்தி, டெஸ்ட் போட்டிகளில் 5000 ரன்களைக் குவித்த ஒரே வீரராக அவர் தொடர்ந்து சாதனை பட்டியலில் உள்ளார்.

அவர் 1999 மற்றும் 2000 க்கு இடையில் இந்தியாவின் தேசிய அளவிலான பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.

கபில் தேவ்,  2010 இல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார்.

ALSO READ | மதசார்பின்மை என்ற பெயரில் காங்கிரஸ் தீவிரவாதத்தை ஆதரிக்கிறது: Mukhtar Abbas Naqvi

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News