Income Tax Refund: வரி செலுத்துபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. நடப்பு நிதியாண்டில் 21.32 லட்சம் வரி செலுத்துவோருக்கு ரூ .45,896 கோடியை ரீபண்ட் செய்துள்ளது வருமான வரித்துறை. மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) இந்த தகவலை ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது. வருமான வரித் துறை 21.32 லட்சம் தனிப்பட்ட வழக்குகளில் ரூ .13,694 கோடி ரீபண்ட் செய்யப்பட்டுள்ளது என்றும், அதே நேரத்தில், 1,19,173 கார்ப்பரேட் வழக்குகளில் ரூ .32,203 கோடி பணம் ரீபண்ட் செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் ரீபண்ட் நிலையையும் நீங்கள் சரிபார்க்கலாம்.
முன்னதாக நடப்பு நிதியாண்டில் ஜூலை 26 வரை ரூ .43,991 கோடிக்கு மேலாக வரிப் பணத்தை, வரி செலுத்துவோருக்கு திரும்ப செலுத்தியுள்ளதாக, அதாவது ரீபண்ட் (Tax Refund) செய்துள்ளதாக சிபிடிடி முன்பு ஜூலை 30 -ம் தேதி அறிவித்தது. மேலும், 1961 ஆம் ஆண்டின் வருமான வரி சட்டத்தின் கீழ் பல்வேறு படிவங்களை மின்னணு முறையில் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை CBDT நீட்டித்துள்ளது.
வரி ரீபண்ட் நிலையை அறிந்து கொள்ளும் முறை
வருமான வரி ரீபண்ட் தொகை நேரடியாக வரி செலுத்துவோர் கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் கணக்கில் பணம் வந்துள்ளதா இல்லையா என்பதை உங்கள் நிலையை நீங்கள் சரிபார்க்கலாம். நிலையைச் சரிபார்க்க, நீங்கள் வருமான வரித் துறையின் புதிய மின்னணு-தாக்கல் இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இங்கு சென்று லாக் இன் செய்ய வேண்டும். உள்நுழைந்த பிறகு நீங்கள் வருமான வரி ரீபண்ட் நிலையை இங்கே பார்க்கலாம்.
ALSO READ | வருமான வரியை தாக்கல் செய்ய நாளை முதல் புதிய இணையதளம்
ITR வெரிபை செய்யாவிட்டால் பணம் கிடைப்பது தாமதமாகும்
உங்கள் ப்ரொபைலில் ITR வெரிபை செய்யப்படாவிட்டால், உங்கள் ஆதார் எண் உதவியுடன் மீண்டும் வெரிபை செய்வதற்கான கோரிக்கையை அனுப்பவும் அல்லது கையொப்பமிடப்பட்ட ITR-V படிவத்தை வருமான வரி CPC அலுவலகத்திற்கு வேக தபால் மூலம் அனுப்பவும். இந்த செயல்முறையை முடிக்காத வரை, உங்கள் கணக்கில் பணம் திரும்ப வராது. வரி செலுத்துவோர் CPC அல்லது மதிப்பீட்டு அதிகாரியிடம் புகார் மனு அளிப்பதன் மூலம் துறையிலிருந்து விரைவான ITR ப்ராசஸிங் செய்ய கோரலாம்.
முன்னதாக, வருமான வரி தாக்கலை (Income Tax Return) எளிதாக்க, மின்னணு முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான புதிய இணையதளம் ஜூன் மாதம் 7ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | வரி செலுத்துவோருக்கு அதிர்ச்சி தகவல்! IT ரீபண்ட் கிடைப்பதில் தாமதம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR