ஆட்டோ டிரைவருக்கு ஜாக்பாட்! ஓணம் லாட்டரியில் 25 கோடி பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி

Onam Bumper Lottery 2022: ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள அரசின் லாட்டரி சீட்டில் 25 கோடி பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி ஆட்டோ டிரைவர்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 18, 2022, 08:19 PM IST
  • ஆட்டோ டிரைவருக்கு கிடைத்த ஓணம் பண்டிகை பரிசு
  • 25 கோடி ரூபாய் வென்ற ஆட்டோ டிரைவர்
  • கேரளாவின் ஓணம் பண்டிகை சிறப்பு லாட்டரி குலுக்கல் முடிவுகள் வெளியாகின
ஆட்டோ டிரைவருக்கு ஜாக்பாட்! ஓணம் லாட்டரியில் 25 கோடி பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி title=

திருவனந்தபுரம்: கேரளா ஓணம் பம்பர் 2022 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது. ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு ரூ. 25 கோடி ஜாக்பாட் பரிசு கிடைத்தது. ஓணம் பம்பர் 2022 (BR-87) அல்லது திருவோணம் பம்பர் முடிவுகள் கேரள மாநில லாட்டரி துறையால் அறிவிக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு அறிவிக்கப்பட்ட இந்த லாட்டரி சீட்டு குலுக்கலில் திருவனந்தபுரத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு முதல் பரிசு ரூ 25 கோடி அறிவிக்கப்பட்டது. 25 கோடி ரூபாய் முதல் ரூ 1,000 வரை என பலதரப்பட்ட பரிசுகள் அறிவிக்கப்பட்டன. முதல் பரிசான ரூ.25 கோடியை திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் வென்றார்.

இரண்டாவது பரிசான ரூ.5 கோடியை கோட்டயத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கிடைத்தது. ஓணம் பம்பர் லாட்டரி முடிவு அறிவிக்கப்படதும் அனைவருக்கும் பரபரப்ப்பு ஏற்பட்டது. ஓணம் பம்பர் 2022 (BR-87) அல்லது திருவோணம் பம்பர் என்று பெயரிடப்பட்ட இந்த லாட்டரியின் குலுக்கலை நடத்திய கேரள மாநில லாட்டரி துறை முடிவுகளை அதிகரித்தது.  

மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!

டி.வி.எம் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர் மற்றும் கூலியான அனூப் என்பவர் 25 கோடி ரூபாய் வென்றுள்ளார். 32 வயதான அனூப், இந்த லாட்டரி டிக்கெட்டை திருவனந்தபுரத்தில் வாங்கியிருக்கிறார். திருவனந்தபுரத்தில் உள்ள பழவங்காடி பகவதி ஏஜென்சி இந்த லாட்டரி டிக்கெட்டை விற்பனை செய்துள்ளது. 

டிஜி 270912 என்ற எண் கொண்ட லாட்டரி டிக்கெட் இரண்டாம் பரிசான ரூ.5 கோடியை வென்றது. இந்த லாட்டரி சீட்டை கோட்டயத்தில் உள்ள மீனாட்சி லாட்டரி ஏஜென்சி விற்பனை செய்தது.

மேலும் படிக்க | எலோன் மஸ்க் கொடுத்த காதல் பரிசுகளை விற்று கோடீஸ்வரியான மஸ்கின் டீனேஜ் காதலி

மேலும் படிக்க | சிறுமியை போலவே நடனமாடி காட்டிய யானை! க்யூட் வீடியோ வைரல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News