சிறுமியை போலவே நடனமாடி காட்டிய யானை! க்யூட் வீடியோ வைரல்!

யானை ஒன்று சிறுமி நடனமாடுவதை பார்த்து அந்த சிறுமியை போலவே அதுவும் உற்சாகமாக நடமாடும் ஒரு க்யூட்டான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Sep 18, 2022, 11:55 AM IST
  • யானை முன்பு நடமாடும் சிறுமி.
  • அதே போல் நடனமாடும் யானை.
  • வைரலாகும் வீடியோ.
சிறுமியை போலவே நடனமாடி காட்டிய யானை! க்யூட் வீடியோ வைரல்! title=

பலவிதமான அற்புதமான வீடியோக்கள் நாள்தோறும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது, அதிலும் குறிப்பாக யானைகள் செய்யும் சில அழகான மற்றும் வேடிக்கையான செயல்கள் பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது.  யானைகளும், யானைக்குட்டிகளும் பெரும்பாலும் இணையத்தை ஆக்கிரமித்து இருக்கின்றன, அவற்றின் செயல்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் மனதை இதமாக்குவதாகவும் அமைந்து இருக்கிறது.  சமீபகாலமாக யானைகள் செய்யும் குறும்புகள் பல இணையவாசிகளை கவர்ந்து வருகிறது, அதேபோல தற்போது ஒரு யானை சிறுமியின் நடனத்தை பார்த்து தானும் ஆட முயற்சிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

மேலும் படிக்க | பதுங்கிப் பாயும் புலி! கடைசி நிமிடத்தில் எஸ்கேப் ஆன தோகைமயில்! பெண் மயில்களின் நிலை? 

இதேபோல முன்னர் ஒரு இளைஞன் ஆடுவதை பார்த்து யானைக்குட்டி அப்படியே ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் ரசிக்கவைத்த நிலையில் தற்போது இந்த வீடியோவும் பலரையும் ரசிக்க செய்துள்ளது.  இந்த அழகான வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி தீபன்சு கப்ரா என்பவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.  அந்த வீடியோவில் சிறுமி ஒருவர் ஒரு நடன அசைவை செய்கிறார், அந்த சிறுமியின் நடன அசைவை எதிரே நின்று பார்த்துகொண்டிருந்த யானை அந்த சிறுமி ஆடுவதை போலவே முயற்சி செய்து தனது தலையையும், உடலையும் மெதுவாக ஆட்டுகிறது.  இந்த காட்சி பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது.

 

இணையவாசிகள் பலரையும் இந்த வீடியோ பெரிதும் கவர்ந்து இருக்கிறது, ட்விட்டரில் பகிரப்பட்டு இருக்கும் இந்த வீடியோவை இதுவரை பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட இணையாவசிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.  இந்த வீடியோவுடன் யார் சிறப்பாக செய்கிறார்கள்? என்கிற கேப்ஷனும் சேர்க்கப்பட்டு இருக்கிறது, இதற்கு பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | என்னை பிளான் பண்ணி சிக்க வைச்சிட்டீங்களே! சீறும் முதலையை வேட்டையாடும் இளைஞர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News