கொச்சி-மங்களூரு குழாய் எரிவாயு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்: பிரதமர் மோடி

கொச்சி - மங்களூரு இடையேயான 450 கி.மீ நீளமுள்ள குழாய் மூலம் இயற்கை எரிவாயு திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 5, 2021, 05:21 PM IST
  • குழாய் வழி எரிவாயு திட்டம், வாகனங்களுக்கும், வீடுகளுக்கும், சுற்றுசூழலுக்கு உகந்த இயற்கை எரிவாயுவை விநியோகிக்கும்.
  • சுற்று சூழலை பாதிக்காத எரிவாயு மூலம், காற்றின் தரத்தையும் மேம்படுத்த உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த திட்டத்தை கெயில் இந்தியா நிறுவனம் அமைத்துள்ளது.
கொச்சி-மங்களூரு குழாய் எரிவாயு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்: பிரதமர் மோடி title=

கொச்சி - மங்களூரு இடையேயான 450 கி.மீ நீளமுள்ள குழாய் மூலம் இயற்கை எரிவாயு திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். 

இந்த எரிவாயு திட்டத்தை வீடியோ கான்பரென்ஸிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். இந்த திட்டத்தை கெயில் இந்தியா நிறுவனம் அமைத்துள்ளது. 

இந்த திட்டத்தை நாட்டுக்கு அர்பணித்து பேசிய மோடி (PM Narendra Modi), கேரளா மற்றும் கர்நாடகா மாநில மக்களுக்கு இது ஒரு முக்கியமான நாள் என்றும் இதனால் மக்களின் வாழ்க்கை முறை மேம்ப்படும் என குறிப்பிட்டார். 

இந்த திட்டத்திற்கு ஆன செலவு, ₹3 ஆயிரம் கோடி.  இந்த திட்டத்தின் மூலம், கொச்சியில் உள்ள எல்என்ஜி நிறுவனத்திலிருந்து எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களை வழியாக செல்லும் எரிவாயு குழாய் மூலம் நாள் ஒன்றுக்கு 12 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்டு கியூபிக் கன அடி என்ற அளவிற்கு, இயற்கை எரிவாயு கர்நாடகாவில் (Karnataka) உள்ள மங்களூருக்கு செல்லும். 

இந்த குழாய் வழி எரிவாயு திட்டம், வாகனங்களுக்கும், வீடுகளுக்கும், சுற்றுசூழலுக்கு உகந்த இயற்கை எரிவாயுவை விநியோகிக்கும். இந்த எரிவாயு குழாய்கள் அமைந்துள்ள மாவட்டங்களில், தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு தேவைபடும் இயற்கை எரிவாயு விநியோகிக்கப்படும். 

சுற்று சூழலை பாதிக்காத எரிவாயு மூலம், காற்று மாசுவை குறைப்பதோடு, காற்றின் தரத்தையும் மேம்படுத்த உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில், மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன்,  மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாடளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை, கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பா, கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன், கர்நாடகா மாநில ஆளுநர் வஜூபாய் வாலா, கேரளா மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ALSO READ | டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி..!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News