தக்காளி திருட்டு... 400 கிலோ தக்காளியை காணோம் என விவசாயி போலீஸில் புகார்!

தக்காளிக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக தக்காளியின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் விவசாயி ஒருவர் 400 கிலோ தக்காளி திருடப்பட்டதாகக் கூறி காவல்துறையை அணுகியுள்ளார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 21, 2023, 03:41 PM IST
  • தக்காளி பல மாநிலங்களில் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.200 வரை விற்கப்படுகிறது.
  • தோம் ஷிரூர் காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தார்.
  • வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல் நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தக்காளி திருட்டு... 400 கிலோ தக்காளியை காணோம் என விவசாயி போலீஸில் புகார்! title=

புனே (மகாராஷ்டிரா) : இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக முக்கிய பேசு பொருளாக ஆகி இருப்பது தக்காளி விலை நிலவரம் தான். தக்காளிக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக தக்காளியின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் விவசாயி ஒருவர் 400 கிலோ தக்காளி திருடப்பட்டதாகக் கூறி காவல்துறையை அணுகியுள்ளார். தக்காளியின் விலை சமீபத்திய வாரங்களில் நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தக்காளி திருட்டினல், தனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட நபர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இந்த திருடியதால் தனக்கு சுமார் 20,000 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயி போலீசாரிடம் தெரிவித்தார்.

தக்காளியின் விலை பல மாநிலங்களில் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.200 வரை விற்கப்படுகிறது. புகார்தாரர் அருண் தோம், ஞாயிற்றுக்கிழமை தனது பண்ணையில் தக்காளி அறுவடை செய்து, காய்கறிகளை ஷிரூர் தாலுகாவில் உள்ள தனது வீட்டிற்கு தொழிலாளர்கள் உதவியுடன் வாகனத்தில் கொண்டு வந்ததாக போலீஸாரிடம் தெரிவித்தார்.

தக்காளியை சந்தையில் விற்க திட்டமிட்டுள்ளதாக தோம் கூறினார்.இருப்பினும், திங்கள்கிழமை காலை டோம் எழுந்து பார்த்தபோது, 400 கிலோ எடையுள்ள விலை மதிப்பற்ற காய்கறியான தக்காளி வைத்திருந்த 20 பெட்டிகள் காணாமல் போனதைக் கண்டுபிடித்தார். அவரது தக்காளி திருடப்பட்டதை அறிந்ததும், தோம் ஷிரூர் காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல் நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | Tomato Price: ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய்க்கு விற்பனையா..? இன்றைய காய்கறி விலை நிலவரம்!

புனே மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு விவசாயி சமீபத்தில் 18,000 தக்காளி பெட்டிகளை ரூ. 3 கோடிக்கு விற்று தேசிய செய்திகளில் இடம்பிடித்தார். திடீர் பணக்காரரான அந்த விவசாயியின் பெயர், துக்காராம் பகோஜி கயாக்கர். இவர், தக்காளியை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இவரின் குடும்பம், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 13,000 ஆயிரம் தக்காளி பெட்டிகளை விற்றுள்ளது. ஆனால், அவ்வளவு தக்காளியை விற்றது பெரிய விஷயமல்ல. அந்த தக்காளியின் மூலம் இவர்கள் ஈட்டிய வருமானம்தான் பலரையும் வாய்பிளக்க வைத்துள்ளது. இவர், தக்காளி விற்று  ஒரே மாதத்தில் 1.5 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். 

தக்காளி மட்டுமே விற்று பணக்காரராக மாறியது மகாரஷ்டிரா விவசாயி மட்டுமல்ல.  கர்நாடகாவில் உள்ள கோலார் நகரில் உள்ள ஒரு விவசாயியும் தக்காளி அடங்கிய 2,000 பெட்டிகளை விற்று ஒரே வாரத்தில் 38 லட்சம் வரை சம்பாதித்துள்ளார். தக்காளி (Tomato) விலையேற்றம் தாறுமாறாக எகிறியுள்ளதை தொடர்ந்து, அது பல விவசாயிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது நல்ல விஷயம் என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். தக்காளி விலை புதிய உச்சத்தை தொட்டது முதல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன.

மேலும் படிக்க | ‘அப்பாடா..’ தமிழகத்தில் தக்காளி விலை அதிரடி குறைவு..! ஒரு கிலோ இவ்வளவுதானா..?

கடந்த சில தினங்களாக தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, தக்காளி அதிரடி விலை ஏற்றத்தை சந்தித்தது. தக்காளியின் தொடர் விலை ஏற்றத்தை தடுப்பதற்காக மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.  அது தொடர்பாக நேற்று மத்திய அரசு இன்று முதல் டெல்லி உள்பட பிற நகரங்களில் தக்காளி சில்லறை விற்பனையில் கிலோ ஒன்றிற்கு 70 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டும் என்ற உத்தரவை இந்திய தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு மற்றும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு வாணிப கூட்டமைப்பு ஆகிவற்றுக்கு மத்திய நுகர்வோர் துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | ஒரே மாதத்தில் கோடீஸ்வரனாக மாறிய தக்காளி விவசாயி..! எப்படி தெரியுமா..?
 

Trending News