Ramar Temple Consecration Updates In Tamil: உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தி நகரில் ராமர் கோவில் கட்டப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பிரம்மாண்டமான ராமர் கோவிலின் பிரான் பிரதிஷ்டையில் (கும்பாபிஷேகம்) இன்று நடைபெறுகிறது. ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா என் அறக்கட்டளை திரட்டிய நன்கொடையின் இந்த ராமர் கோவில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ராமர் கோவில் கும்பாபிஷேக நல்ல நேரம்
ராமர் கோவில் கும்பாபிஷேகம் (Ramar Temple Pran Pratishth) இன்று மதியம் 12.15 முதல் 12.45 மணிவரை வரை நடைபெற உள்ளது. பல்வேறு ஊடக அறிக்கைகளின்படி, இந்த பிரான் பிரதிஷ்டைக்கான நல்ல நேரம் என்பது மதியம் 12:29:08 மணி முதல் 12:30:32 மணிவரை, அதாவது 84 வினாடிகள் ஆகும்.
ராமர் கோவிலில் வழக்கமாக நடைபெறும் ஆரத்தி வழிபாடு நேரம் குறித்து விவரமும் வெளிவந்துள்ளது. ராமர் கோவலில் ஆரத்தி ஒரு நாளைக்கு மூன்று முறை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாகரன் அல்லது சிருங்கர் ஆரத்தி காலை 6:30 மணிக்கும், போக் ஆரத்தி மதியம் 12:00 மணிக்கும் மற்றும் சந்தியா ஆரத்தி இரவு 7:30 மணிக்கும் நடைபெறும். ஆரத்தியில் பங்கேற்பதற்கு, பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதது.
மேலும் படிக்க | அயோத்தி: பால ராமர் சிலையின் முக்கியமான சிறப்புகள்..!
ராமர் கோவில் கும்பாபிஷேக சடங்குகள்
ராமர் கோவில் பிரான் பிரதிஷ்டாவின் முதல் சடங்கு 'ஷோபா யாத்ரா' ஆகும். இதன் போது சிலை ஊர்வலமாக கோயிலின் வளாகத்தை சுற்றி கொண்டு செல்லப்படுகிறது. இந்த 'யாத்திரை' மூலம் மக்களின் பக்தி சிலைக்குள் மாற்றப்பட்டு, தெய்வீகத்தன்மையுடன் கட்டமைப்பை உட்செலுத்துவதாக நம்பப்படுகிறது. பின்னர் சிலை மீண்டும் கோவிலில் உள்ள இடத்திற்கு கொண்டு வரப்பட்டு கும்பாபிஷேகம் தொடங்கும். அடுத்த கட்ட சடங்கு 'அதிவாஸ்' ஆகும். இதன் போது சிலை நீர், தானியங்கள் மற்றும் பிற பொருட்கள் மூலம் மூழ்கடிக்கப்படுகின்றன. இதன்மூலம், சிற்பியின் கருவிகளில் ஏற்பட்ட அனைத்து காயங்களையும் குணப்படுத்த முடியும் என நம்பப்படுகிறது. 'அதிவாஸ்' மூலம், சிலையின் கல்லின் தரமும் சரிபார்க்கப்படுகிறது.
ஷோபா யாத்திரை மற்றும் அதிவாஸ் சடங்குகளுக்கு பிறகு, சிலை குளிப்பாட்டப்பட்டு, பின்னர், நீர், பஞ்சாமிர்தம் மற்றும் கரும்புச்சாறு ஆகியவற்றால் அபிஷேகம செய்யப்படுகிறது. இந்த அபிஷேகம், வரிசையான மந்திரங்களுக்கு பிறகு சிலையை எழுப்பி, பழைய ஊசியால் தெய்வத்தின் கண்களைச் சுற்றி 'அஞ்சன்' போடப்படுகிறது. ஒரு சிலை இவ்வாறு கடவுளாக மாற்றப்படுகிறது என்பது இங்கே நம்பப்படுகிறது. இனி ஆண்டாண்டுகளாக அனைவராலும் இங்கே வணங்கப்படுவார்.
எல்.கே அத்வானி பங்கேற்கவில்லை
ராமர் கோவிலில் நடைபெறும் பிரான் பிரதிஷ்டை நிகழ்ச்சி தொலைக்காட்சியிலும், யூ-ட்யூபிலும் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன (Ramar Temple Pran Pratishth Live Telecast). மேலும், நேரிலும் இந்நிகழ்வுகளை காண பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த பெரும் விருந்தினர் பட்டியலில் தொழிலதிபர்கள் கௌதம் அதானி, முகேஷ் அம்பானி ஆகியோரும் அடங்குவர். பாலிவுட் பிரபலங்கள் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, எல்.கே.அத்வானி மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோருக்கும் அழைப்பு உள்ளது.
அந்த வகையில், மூத்த பாஜக தலைவர் எல்.கே. அத்வானி ராமர் கோவிலின் இன்றைய பிரான் பிரதிஷ்டை விழாவில் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டது. அவர் வராததற்கு முக்கிய காரணம் கடும் குளிராக உள்ள காலநிலை என கூறப்படுகிறது. எல்.கே. அத்வானிக்கு வயதாகிவிட்டதால், இந்த காலநிலையில் அயோத்திக்கு செல்வது நல்லதல்ல எனவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எல்.கே. அத்வானி ராமர் கோவில் வேண்டி 90 காலங்கட்டங்களில் நாடு முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Ayothi Ramar Temple: ராமர் கோவில் கும்பாபிஷேகம் எத்தனை மணிக்கு தொடங்குகிறது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ