ஜூலை 31-வரை பள்ளிகள் திறக்கப்படாது; துணை முதல்வர் அறிவிப்பு...

டெல்லியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் ஜூலை 31-வரை மூடப்படுவதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

Last Updated : Jun 27, 2020, 07:38 AM IST
  • இதற்கிடையில், பெற்றோர்கள் உதவியுடன் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் இதர நடவடிக்கைகள் தொடரும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
  • இந்த மாத தொடக்கத்தில் மத்திய அரசு தனது "Unlock 1" வழிகாட்டுதல்களை அறிவித்த பின்னர், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசனைகளை வழங்குமாறு டெல்லி அரசு பெற்றோரை வலியுறுத்தியது.
  • 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை வகுப்புகள் நடத்தலாம் என்று அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.
ஜூலை 31-வரை பள்ளிகள் திறக்கப்படாது; துணை முதல்வர் அறிவிப்பு... title=

டெல்லியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் ஜூலை 31-வரை மூடப்படுவதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

ஜூன் 26 அன்று நடைப்பெற்ற, கல்வித் துறை அதிகாரிகளுடனான சந்திப்புக்குப் பின்னர் இந்த அறிவிப்பினை துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வெளியிட்டுள்ளார். தேசிய தலைநகரில் கொரோனா வைரஸ் தொற்றுகள் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

READ | நன்னடைத்தையால் தண்டனை காலத்திற்கு முன்னதாக விடுவிக்கப்படுகிறாரா சசிகலா?

இதற்கிடையில், பெற்றோர்கள் உதவியுடன் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் இதர நடவடிக்கைகள் தொடரும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

"புதிய சூழ்நிலைகளை சரிசெய்ய எங்கள் மாணவர்களை தயார்படுத்தும் விதத்தில் பள்ளிகளை மீண்டும் திறக்கும் திட்டத்தை வடிவமைப்போம், இது எங்கள் மாணவர்களுக்கு கொரோனா வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ள உதவும்" என்றும் சிசோடியா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 9 மற்றும் 10 வகுப்புகளுக்கு வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை சிறிய குழுக்களாக நடத்த வகுப்புகளை அனுமதிக்குமாறும் அவர் அதிகாரிகளை கேட்டுக்கொண்ட. அதேவேளையில் மற்ற அதிகாரிகள் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொரு நாளும் வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் மத்திய அரசு தனது "Unlock 1" வழிகாட்டுதல்களை அறிவித்த பின்னர், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசனைகளை வழங்குமாறு டெல்லி அரசு பெற்றோரை வலியுறுத்தியது.

"கூட்டத்தில் ஒரு ஆலோசனையானது, ஒரு வகுப்பில் 12-15 மாணவர்களின் பலத்துடன் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை முதன்மை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்" என்று அரசாங்கம் கூறியது. "3 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்று நாட்களில் வகுப்புகள் நடத்தப்படலாம் என்று மற்றொரு கருத்து தெரிவிக்கப்பட்டது" என்று அரசாங்கம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

READ | ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்; எச்சரிக்கும் உளவுதுறை...

6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை வகுப்புகள் நடத்தலாம் என்று அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.

பரிந்துரைகளின்படி, 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புகளை மாற்று நாட்களில் நடத்தலாம் என்றும், மீதமுள்ள நாட்களில் ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Trending News