வடஇந்தியா நோக்கி வந்துள்ள தென்மேற்கு பருவமழை அடுத்த 2 அல்லது 3 நாட்களில் நாடு முழுவதும் மழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது!
பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் தற்போது வடஇந்தியாவின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக கோடையில் வாடிய மக்கள் மிகவும்மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
டெல்லியில் கடந்த மூன்று மாதா காலம் வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று முதல் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து வானிலை மாறி மழை பெய்தது. அதேபோன்று, வடஇந்தியாவின் புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில்..!
தென்மேற்கு பருவமழை காரணமாக இன்று முதல் 30-ஆம் தேதி வரை டெல்லியில் பெய்யும். இதேபோல் ஒடிஸா, மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட, மகாராஷ்டிரம், குஜராத் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் பெய்யும். அதே நிலை இன்றும் நீடிப்பதால் மழை தொடரும். டெல்லியைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், குஜராத், ராஜஸ்தான் மற்றும் நாடு முழுவதும் அடுத்த 2 அல்லது 3 நாட்களில் மழையை எதிர்பார்க்கலாம்.