குடியுரிமை திருத்தம் சட்டம் தொடர்பாக மக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் -ராஜ்நாத் சிங்

Citizenship Amendment Act: குடியுரிமை திருத்தம் சட்டம் மூலம் இந்தியாவில் வாழும் யாருடைய குடியுரிமையையும் பறிக்க முடியாது என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 14, 2024, 06:48 PM IST
குடியுரிமை திருத்தம் சட்டம் தொடர்பாக மக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் -ராஜ்நாத் சிங் title=

Rajnath Singh About CAA: குடியுரிமை (திருத்தம்) சட்டம் தொடர்பாக மக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்றும், இந்தியாவில் வாழும் யாருடைய குடியுரிமையையும் இந்த சட்டம் பறிக்காது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

அசாமின் பார்பேட்டாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பேரணியில் பேசிய ராஜ்நாத் சிங், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2014 ஆம் ஆண்டு வரை இந்தியாவுக்கு வந்த மதரீதியாக துன்புறுத்தப்பட்டவர்களுக்கு குடியுரிமை மட்டுமே வழங்கப்படும் என்றும், இந்த சட்டம் எந்தவொரு மக்களின் குடியுரிமையையும் பறிக்காது. இது குடியுரிமையை மட்டுமே வழங்கும் எனத் தெளிவுப்படுத்திய அவர், குடியுரிமை (திருத்தம்) சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

அசாம் பார்பெட்டா மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக கூட்டணிக் கட்சியான அசோம் கண பரிஷத்தின் வேட்பாளரான ஃபானி பூசன் சவுத்ரிக்கு சிங்கை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்த போது குடியுரிமை திருத்தம் சட்டம் தொடர்பாக அவர் விளக்கம் அளித்தார். 

மேலும் படிக்க - குடியுரிமை திருத்தச் சட்டம்: 'உரிமைகள் பறிப்பு' பாஜகவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும்

குடியுரிமை திருத்தச் சட்டம் - எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி

கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம், நான்கு ஆண்டுகள் கழித்து கடந்த (மார்ச் 11, திங்கள்கிழமை) நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு intஇத்தனை ஆண்டு காலம் அமைதியாக இருந்துவிட்டு, 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தற்போது அமல்படுத்துவதன் நோக்கம் என்ன? எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

குடியுரிமைச் சட்டம் என்ன சொல்கிறது? 

குடியுரிமைச் சட்டம் 1955 திருத்தப்பட்டு, 31 டிசம்பர் 2014 க்கு முன்னர் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்த ஆவணமற்ற முஸ்லீமை தவிர்த்து  இந்துக்கள், பௌத்தர்கள், கிறித்தவர்கள், பார்சிக்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகிய ஆறு மதப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கான சட்டம் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.

மேலும் படிக்க - CAA Act : இந்திய முஸ்லிம்களுக்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் பாதிப்பு வருமா? சிஏஏ பற்றி முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News