Aadhaar Update: ஆதார் கார்ட் அப்டேட் செய்யணுமா? எளிய செயல்முறை இதோ

Aadhaar Card Update: ஆதார் அட்டை இல்லாதவர்கள், அரசின் பல திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடிவதில்லை. ஆதார் அட்டையில் பயோமெட்ரிக் விவரங்கள், புகைப்படம், முகவரி மற்றும் பயனர்களின் பிற தகவல்கள் உள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 7, 2022, 10:54 PM IST
  • இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணமாகும்.
  • ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் இதை பெறலாம்.
  • இதனுடன் ஆதார் அட்டையில் உள்ள பெயர், குடும்பப்பெயர், முகவரியையும் மாற்றலாம்.
Aadhaar Update: ஆதார் கார்ட் அப்டேட் செய்யணுமா? எளிய செயல்முறை இதோ title=

ஆதார் அட்டை புதுப்பிப்பு: இன்றைய காலகட்டத்தில், ஆதார் அட்டை அனைவருக்கும் வாழ்க்கையில் மிக முக்கியமான ஆவணமாக மாறியுள்ளது. வங்கியில் கணக்கு தொடங்கவும், அரசாங்கத் திட்டங்களைப் பயன்படுத்தவும், அரசிடமிருந்து இலவச ரேஷன் பெறவும், அரசு மானியங்களை பெறவும் இது தேவைப்படுகிறது. ஆதார் அட்டை இல்லாதவர்கள், அரசின் பல திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடிவதில்லை. ஆதார் அட்டையில் பயோமெட்ரிக் விவரங்கள், புகைப்படம், முகவரி மற்றும் பயனர்களின் பிற தகவல்கள் உள்ளன. 

பயனர்கள் தங்கள் ஆதார் அட்டையில் பெயர், முகவரியை மாற்ற விரும்பினால், வீட்டில் இருந்தபடியே அதை எளிதாக செய்யலாம். வீட்டில் அமர்ந்தபடி இந்த மாற்றங்களை செய்வதற்கான ஒரு சிறந்த மற்றும் எளிதான வழிமுறையை பற்றி இந்த பதிவில் காணலாம். 

புதிய ஆதார் அட்டை

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணமாகும். ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் இதை பெறலாம். இதனுடன் ஆதார் அட்டையில் உள்ள பெயர், குடும்பப்பெயர், முகவரியையும் மாற்றலாம். இந்த வேலையை நீங்கள் எளிதாக செய்யலாம். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள செயல்முறை மூலம் இந்த பணிகளை எளிதாக செய்து முடிக்கலாம். 

இந்த வகையில் லாக்-இன் செய்ய வேண்டும்

முதலில், உங்கள் லேப்டாப் அல்லது மொபைலில் ஆதார் அட்டையின் அதிகாரப்பூர்வ போர்டல் https://ask.uidai.gov.in/ -க்கு செல்லவும். இங்கே உள்நுழைவு விருப்பத்தைப் பெறுவீர்கள். இதற்கு, நீங்கள் மொபைல் எண் மற்றும் கேப்ட்சாவை நிரப்ப வேண்டும், அதன் பிறகு நீங்கள் அதில் லாக் இன் செய்யலாம். 

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களின் கணக்கில் ரூ.2 லட்சம் வரவு, டிஏ அரியர் சமீபத்திய அப்டேட் 

பெயர், குடும்பப்பெயர் ஆகிய விவரங்களை இப்படி மாற்றலாம்

உங்களிடம் ஏற்கனவே ஆதார் அட்டை இருந்தால், மேலும் கேட்கப்படும் விவரங்களை நிரப்பவும். உங்களிடம் ஆதார் அட்டை இல்லையென்றால், முதலில் உங்கள் விவரங்களை 'ஆதார் அட்டையை உருவாக்கு' என்ற விருப்பத்தில் நிரப்பவும். லாக் இன் செய்த பிறகு, பெயர் மற்றும் குடும்பப்பெயர் விருப்பங்களை நிரப்பவும். அதன் பிறகு, கொடுக்கப்பட்ட எண்ணில் OTP குறியீடு பெறப்படும். அதை பெட்டியில் நிரப்ப வேண்டும். இதைச் செய்த பிறகு, சுய சேவை விருப்பம் (செல்ஃப் சர்விஸ் ஆப்ஷன்) உங்கள் முன் தோன்றும். அங்கு உங்கள் பெயர், குடும்பப்பெயர் போன்றவற்றை மாற்றலாம்.

திருமணத்திற்குப் பிறகு குடும்பப் பெயரை மாற்ற

உங்கள் திருமணத்திற்குப் பிறகு குடும்பப்பெயரை மாற்ற வேண்டுமா? முன்னர் குறிப்பிட்ட நடைமுறையைப் பின்பற்றுவதன் மூலம் அதை எளிதாக மாற்றலாம். இங்கே நீங்கள் எதற்கும் பணம் செலுத்த வேண்டியதில்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உத்தியோகபூர்வ அரசாங்க நிறுவனத்தால் வழங்கப்படும் துணை ஆவணத்தைப் பகிர்வது மட்டுமே. அதனுடன் சான்றிதழையும் வைத்திருக்க வேண்டும். இதில் உங்களின் நிரந்தர முகவரி இருப்பது கட்டாயமாகும்.

இவற்றை ஆஃப்லைனிலும் செய்யலாம்

ஆதார் அட்டையில் புதுப்பிப்பதற்கான ஆன்லைன் வசதியை UIDAI வழங்கியுள்ளது. எனினும், அனைத்து தகவல்களையும் ஆன்லைனில் புதுப்பிக்க முடியாது. புகைப்படம் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பிக்க ஆதார் அட்டை மையத்திற்குச் செல்ல வேண்டும். ஆதார் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று இதற்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கலாம். ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அல்லது இந்த புகைப்படம் பழையதாக இருந்தால், ஆதார் மையத்துக்கு சென்று ஆதாரில் உள்ள புகைப்படத்தை எளிதாக மாற்றலாம்.

மேலும் படிக்க | ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு லாட்டரி, 150 கிலோ அரிசி இலவசம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News