ஆதார் மோசடி குறித்த அச்சமா? Masked Aadhaar Card மூலம் பாதுகாப்பாக இருக்கலாம்

Masked Aadhaar Card: ஆதாரில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்களில் ஒன்று மாஸ்க்டு ஆதார் கார்டாகும். மாஸ்க்ட் ஆதார் அட்டை மூலம், உங்கள் ஆதார் எண்ணை மறைத்து இணைய மோசடியில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 9, 2022, 08:03 PM IST
  • மாஸ்க்ட் ஆதார் அட்டை விவரங்கள்.
  • மாஸ்க்ட் ஆதார் அட்டை என்றால் என்ன?
  • மாஸ்க் செய்யப்பட்ட ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி?
ஆதார் மோசடி குறித்த அச்சமா? Masked Aadhaar Card மூலம் பாதுகாப்பாக இருக்கலாம் title=

மாஸ்க்ட் ஆதார் அட்டை விவரங்கள்: இன்றைய காலகட்டத்தில் ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது. தற்போது ஆதார் அட்டை இல்லாமல் எந்த வேலையையும் கையாள்வது மிகவும் கடினமாகிவிட்டது. இதன் முதல் பயன்பாடு 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்குப் பிறகு, ஆதார் பயன்பாட்டில் அரசு சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது. இது வங்கிக் கணக்கைத் திறக்கப் பயன்படுகிறது. இதனுடன், அரசின் திட்டங்களைப் பயன்படுத்தவும், சொத்து வாங்கவும், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது.

ஆதார் பயன்பாடு அதிகரித்து வருவதோடு, அது தொடர்பான இணைய மோசடி வழக்குகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், ஆதார் வழங்கும் அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையம், ஆதாருக்கு அவ்வப்போது பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறது. 

மாஸ்க்ட் ஆதார் அட்டை என்றால் என்ன?

ஆதாரில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்களில் ஒன்று மாஸ்க்டு ஆதார் கார்டாகும். மாஸ்க்ட் ஆதார் அட்டை மூலம், உங்கள் ஆதார் எண்ணை மறைத்து இணைய மோசடியில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டையில் 12 எண்களின் தனிப்பட்ட அடையாள எண் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மாஸ்க்ட் ஆதார் அட்டையில், முதல் 8 எண்கள் இருக்கும் இடத்தில் XXXX-XXXX என்று எழுதப்பட்டிருக்கும். ஆதாரின் கடைசி 4 இலக்கங்களில் மட்டுமே ஆதார் எண் இருக்கும். இந்த ஆதார் அட்டையைக் கொண்டு, உங்கள் தனிப்பட்ட எண்ணைப் பயன்படுத்தி யாரும் எந்தவிதமான மோசடியும் செய்ய முடியாது. இப்படிப்பட்ட ஏற்பாட்டின் மூலம் ஆதார் எண்ணை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கான செயல்முறையை UIDAI செய்துள்ளது. 

மேலும் படிக்க | Aadhaar கார்டில் திருத்தம் செய்யுமா? இனி கஷ்டப்படாமல் ஈஸியா செய்யலாம் 

மாஸ்க் செய்யப்பட்ட ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி?

1. இதற்கு, ஆதார் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, 'ஆதாரைப் பதிவிறக்கு' (Download Aadhaar) என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
2. அடுத்து, VID அல்லது Enrollment ID அல்லது Aadhaar Card என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, Masked Aadhaar என்பதைக் கிளிக் செய்யவும்.
3. இதன் பிறகு Request OTP என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
4. இந்த OTP உங்கள் ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் வந்த பிறகு, அதை இங்கே உள்ளிடவும்.
5. இதற்குப் பிறகு ஆதார் பதிவிறக்கத்தைக் கிளிக் செய்யவும்.
6. இதற்குப் பிறகு, மாஸ்க்ட் ஆதார் அட்டை பதிவிறக்கம் செய்யப்படும்.

மேலும் படிக்க | மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைப்பது அவசியம்: ஆன்லைனில் இப்படி இணைக்கலாம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News