Indian Railways அட்டகாசமான செய்தி: ஜெனரல் டிக்கெட் விதிகளில் மாற்றம்.. குஷியில் பயணிகள்

Indian Railways: முன்பதிவு செய்யப்படாத ஜெனரல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான சிறப்பு செயலியை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 15, 2023, 11:20 PM IST
  • ரயில்வே டிக்கெட் புக்கிங் ஆப்.
  • நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை.
  • இதற்கு பதிவு செய்வது எப்படி?
Indian Railways அட்டகாசமான செய்தி: ஜெனரல் டிக்கெட் விதிகளில் மாற்றம்.. குஷியில் பயணிகள் title=

இந்திய ரயில்வே: இந்தியன் ரயில்வே நம் நாட்டு மக்களின் போக்குவரத்தின் உயிர் நாடியாக இருந்து வருகிறது. மக்கள் தொகை அதிகம் உள்ள நமது நாட்டில், மக்களின் போக்குவரத்தை பொறுத்தவரையில், ரயில்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வே பல வித வசதிகளை செய்கிறது. அவ்வப்போது பல புதிய விதிகள் இயற்றப்படுகின்றன. சில விதிகள் மாற்றப்படுகின்றன. கோடிக்கணக்கான பயணிகளுக்கு சிறப்பு நிபந்தனைகளின் கீழ் சிறப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன.  

ரயில்வே டிக்கெட் புக்கிங் ஆப்: 

நீங்கள் அடிக்கடி ரயிலில் குறுகிய தூரம் பயணம் செய்யும் நபராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக ரயில்வே பயணிகள் குறுகிய தூர பயணங்களுக்கு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில்லை. ஜெனரல் டிக்கெட்டிலேயே பயணம் செய்கிறார்கள். இப்போது ஜெனரல் டிக்கெட்டில் பயணிப்பவர்களுக்கு ரயில்வே மூலம் பல தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான ரயில்வே பயணிகளுக்கு இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வப்போது ரயில்வே மூலம் பயணிகளுக்கு பல விதமான வசதிகள் அளிக்கப்படுகின்றன. சில நாட்களுக்கு முன்னர் ரயில்வே தொடங்கியுள்ள இந்த வசதியின் கீழ், ஜெனரல் டிக்கெட்டுகளிலும் பயணிகளுக்கு ரயிலில் இருக்கை கிடைப்பதில் சிக்கல் இருக்காது.

நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை

முன்பதிவு செய்யப்படாத ஜெனரல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான சிறப்பு செயலியை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், பயணிகள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் பெற வேண்டிய அவசியம் இருக்காது. ரயில் வருவதற்கு முன்பு கவுன்டரில் டிக்கெட் எடுப்பவர்கள் நீண்ட வரிசையில் நிற்பதை நாம் அடிக்கடி காண்கிறோம். இந்நிலையில், பல சமயங்களில் டிக்கெட் எடுக்க மக்கள் கடும் சிரமப்பட வேண்டியுள்ளது. ஆனால் ரயில்வே தொடங்கியுள்ள புதிய வசதியில் பயணிகளிக்கு இந்தப் பிரச்னை இருக்காது.

இதற்கு பதிவு செய்வது எப்படி

முதலில் ரயில்வேயின் ஜெனரல் டிக்கெட் முன்பதிவு செயலியான யூடிஎஸ் -ஐ (UTS) உங்கள் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். இதற்குப் பிறகு, அதில் உள்ள தகவலை உள்ளிட்டு உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் மொபைல் எண் மற்றும் பிற விவரங்களை நிரப்ப வேண்டும். அதன் பிறகு உங்கள் மொபைல் எண்ணில் OTP கிடைக்கும், அதை உள்ளிட்ட பிறகு நீங்கள் பதிவு செய்யப்படுவீர்கள்.

டிக்கெட் புக்கிங்கில் போனஸ்

இந்த ரயில்வே செயலி மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் பயணிகள் போனஸையும் பெறலாம். இது தவிர, இதற்கு 15 ரூபாய்க்கு பதிலாக, 30 ரூபாய் செலவழிக்க வேண்டும். இந்த செயலி மூலம் குறைந்த கட்டணத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இதற்கு நீங்கள் ஆர் வாலட்டில் இருந்து பணம் செலுத்த வேண்டும்.

ஜெனரல் டிக்கெட் வாங்கும் விதி என்ன

ஜெனரல் டிக்கெட்டுகளை ஆன்லைனில் எடுக்கவும் விதிமுறை உள்ளது. இது இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இது நேரம் மற்றும் தூரத்திற்கு ஏற்ப உள்ளது. ஒருவர் அதிகபட்சமாக 199 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க வேண்டும் என்றால், டிக்கெட் வாங்கிய 180 நிமிடங்களில் ரயிலில் ஏற வேண்டும். ஆனால் ஒரு பயணி 200 கி.மீ.க்கு மேல் பயணிக்க வெண்டி இருந்தால், அதற்கு மூன்று நாட்களுக்கு முன் ஜெனரல் டிக்கெட் வாங்க வேண்டும் என்ற விதி உள்ளது.

மேலும் படிக்க | டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இதை செய்யுங்கள்... ஏன் ரொம்ப அவசியம்? 

UTS பயன்பாட்டில் R-Wallet ரீசார்ஜ் செய்வது எப்படி:

- முதலில் UTS செயலியில் உள்ள R-Wallet ஐகானைக் கிளிக் செய்யவும்.

- இப்போது உங்கள் ரீசார்ஜ் வாலட்டில் கிளிக் செய்ய வேண்டும். 

- இதற்குப் பிறகு நீங்கள் ரீசார்ஜ் செய்ய விரும்பும் தொகையை உள்ளிடவும்.

- இப்போது UPI, நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துங்கள்.

- செயல்முறையை முடித்த பின்னர், பணம் உங்கள் R-Wallet இல் சேர்க்கப்படும்.

- UTS செயலியின் பயனர்கள் R-Wallet கட்டணத்தில் 3% போனஸைப் பெறுவார்கள்.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது மற்றும் பணம் செலுத்துவது எப்படி?

- முதலில் காகிதமற்ற (பேப்பர்லெஸ்) அல்லது காகித (பேப்பர்) விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

- அதன் பிறகு புறப்படும் நிலையம் மற்றும் சேருமிடம் பற்றிய தகவலை உள்ளிடவும்.

- இதற்குப் பிறகு நெக்ஸ்ட் என்பதைக் கிளிக் செய்து கெட் ஃபேர் என்பதை கிளிக் செய்யவும்.

- இப்போது டிக்கெட் கட்டணத்தைக் கிளிக் செய்து, R-wallet / UPI / Net banking போன்ற பல்வேறு விருப்பங்களைப் பயன்படுத்தி கட்டணத்தைச் செலுத்துங்கள்.

- யுடிஎஸ் செயலியில் உள்ள 'ஷோ டிக்கெட்' விருப்பத்தை கிளிக் செய்து டிக்கெட்டுகளைப் பார்க்கலாம். 

- காகித டிக்கெட்டைப் பொறுத்தவரை, அந்த விருப்பத்தை தேர்ந்தெடுத்த பயணிகள் UTS பயன்பாட்டில் அறிவிப்பைப் பெறுவார்கள்.

மேலும் படிக்க | ஜன்னல், கதவுகள் இல்லாத ரயில் பெட்டி... NMG பெட்டிகள் குறித்த சுவாரஸ்ய தகவல்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News