ஜன்னல், கதவுகள் இல்லாத ரயில் பெட்டி... NMG பெட்டிகள் குறித்த சுவாரஸ்ய தகவல்!

ரயிலின் போகியில் ஜன்னல்களோ கதவுகளோ இல்லாமல் இருக்கும் ரயிலை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இது குறித்த சுவாரஸ்யமான தகவலை அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 13, 2023, 05:15 PM IST
  • ஜன்னல்கள் மற்றும் கதவுகள் இல்லாமல் உள்ள பெட்டிகள்
  • இருக்கை, மின்விசிறி மற்றும் விளக்கு அகற்றப்படுகின்றன.
  • ரயில்வே இயக்கும் ஒரு வகை ரயிலின் பெட்டிகளில் ஜன்னல்களோ கதவுகளோ இல்லை.
ஜன்னல், கதவுகள் இல்லாத ரயில் பெட்டி...  NMG பெட்டிகள் குறித்த சுவாரஸ்ய தகவல்! title=

இந்தியன் ரயில்வே: நாமெல்லாம் நிச்சயம்  ரயிலில் பயணம் செய்திருப்போம். அதிலும் ஜன்னலோரா சீட் என்றால் பிடிக்காதவர் இருக்க முடியுமா. ஆனால் ரயில்வே இயக்கும் ஒரு வகையி ரயிலின் பெட்டிகளில்  ஜன்னல்களோ கதவுகளோ இல்லை..  நீங்கள் இப்படிப்பட்ட ஒரு பெட்டி கொண்ட ரயிலை பார்த்திருக்க மாட்டீர்கள். ரயில்வேயால் இயக்கப்படும் ஒரு ரயிலில் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் இல்லை. இந்த சிறப்பு ரயிலைப் பற்றிய தக்வல்களை அறிந்து கொள்ளலாம்..

ஜன்னல்கள் மற்றும் கதவுகள் இல்லாமல் உள்ள பெட்டிகள் 

ஜன்னல்கள் மற்றும் கதவுகள் இல்லாத ரயில்கள் என்எம்ஜி பெட்டிகள் கொண்ட ரயில்கள் என்று அழைக்கப்படுகின்றன. நாம் பயணிக்கும் பாசஞ்சர் ரயில்களின் அனைத்துப் பெட்டிகளும் ரிடயர்ட் ஆன பெட்டிகள் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். எந்தவொரு ரயிலின் பெட்டிகளின் ஆயுட்காலம் 25 ஆண்டுகள் மற்றும் அதை 5 முதல் 10 ஆண்டுகள் வரை பழுதுபார்ப்பதன் மூலம் நீட்டிக்க முடியும்.

ரயில் பெட்டிகளின் ஆயுட் காலம் 25 ஆண்டுகள்

எந்தப் பெட்டியும் 25 ஆண்டுகள் நிறைவடையும் போது, ​​அதன் பிறகு ICF கோச் பயணிகள் ரயிலின் சேவையில் இருந்து நீக்கப்படும். பின்னர் இது என்எம்ஜி ரேக் என்ற பெயரில் ஆட்டோ கேரியராக பயன்படுத்தப்பட்டது. NMG என்பது புதிதாக மாற்றியமைக்கப்பட்ட சரக்கு வண்டியைக் (Newly Modified Goods) குறிக்கிறது.

மேலும் படிக்க | ரயில் ஏசி இருக்கை டிக்கெட் கட்டண குறைப்பு! ஆனால் சில நிபந்தனைகள் உண்டு!

அத்தகைய பெட்டிகளால் என்ன பயன்?

என்எம்ஜி வேகனின் அனைத்து ஜன்னல்களும் கதவுகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன. சீல் வைத்த பிறகு, கார்கள், மினி லாரிகள் மற்றும் டிராக்டர்களில் எளிதாக ஏற்றி இறக்கும் வகையில் இந்த வேகன்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. புதிதாக மாற்றப்பட்ட பெட்டிகள், அதிவேகத்தில் செல்லக் கூடியதன் காரணமாக குறுகிய காலத்திற்குள் ஆட்டோமொபைல்களை கொண்டு செல்வதற்கு ரயில்வேயின் திறனை அதிகரிக்க உதவும். 

இருக்கை, மின்விசிறி மற்றும் விளக்கு அகற்றப்படுகின்றன

சாதாரண பெட்டியை என்எம்ஜி கோச்சாக மாற்ற, அதில் உள்ள இருக்கைகள், மின்விசிறிகள், விளக்குகள் அனைத்தும் அகற்றப்படும். இது தவிர, மேலும் வலுவூட்டும் வகையில், இரும்புப் பட்டைகள் போடப்படுகின்றன. அதை எதிர்கொள்ள, கோச்சின் பின்புறத்தில் ஒரு கதவு பொருத்தப்பட்டு, அதைத் திறந்து சாமான்கள் வைக்கப்படுகின்றன. இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஏற்ற இறக்கும் வகையில் பெட்டிகள் மாற்றப்பட்டுள்ளன. 

மேலும் படிக்க | இந்திய ரயில்வே குறித்து நீங்கள் அறியாத ‘சில’ சுவாரஸ்ய தகவல்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News