சனியின் மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி உண்டாகும், வியாபாரம் செழிக்கும்

Astrology: ஏப்ரல் 29ஆம் தேதி சனிபகவான் கும்ப ராசியில் பிரவேசிக்கிறார். இது பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேரடி விளைவை ஏற்படுத்தும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 3, 2022, 07:15 PM IST
  • சனியின் இந்த ராசி மாற்றம் சில பிரச்சனைகளை உருவாக்கும்.
  • வாழ்க்கைத் துணைக்கு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படலாம்.
  • கூட்டு சேர்ந்து செய்யும் வேலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சனியின் மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி உண்டாகும், வியாபாரம் செழிக்கும்  title=

ஜோதிடத்தில் 9 கிரகங்கள் மற்றும் 12 ராசிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் கிரகங்களின் மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 9 கிரகங்களில், சனி பகவான் ஒரு செல்வாக்குமிக்க கிரகமாக கருதப்படுகிறார். சனி அந்தந்த நபரின் நல்ல மற்றும் கெட்ட செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருகிறார். நற்செயல்கள் செய்பவர்களுக்கு வெகுமதிகள் கிடைக்கும், தீய செயல்களைச் செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

ஏப்ரல் 29ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் பிரவேசித்து ஜூன் 4ஆம் தேதி வரை இந்த ஸ்தானத்தில் இருப்பார். இதற்குப் பிறகு, ஜூன் 4 முதல், பிற்போக்கு இயக்கத்தில் சஞ்சரித்து, கும்ப ராசியில் மீண்டும் நுழைவார். ஜூலை 12 அன்று, மகரத்தில் தலைகீழ் இயக்கத்தில் நுழைவார். இது பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேரடி விளைவை ஏற்படுத்தும். இவற்றை பற்றி தெரிந்துகொள்ளலாம். 

கடகம்:

சனி பகவான் லக்னத்தில் 7 மற்றும் 8 ம் இடத்திற்கு வருவதன் மூலம் கடக ராசியில்  எட்டாவது வீட்டிற்குள் நுழைவார். இதன் பலனாக பணியிடத்தில் வெற்றி உண்டாகும். இதனுடன் தினசரி வருமானமும் அதிகரிக்கும். கடக ராசிக்காரர்களுக்கு பழைய நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும். வாழ்க்கைத் துணைக்கு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படலாம்.

இது சிறிய கவலையை உண்டாக்கும். காதல் உறவுகளில் பதற்றம் ஏற்படலாம். இந்த நேரத்தில், வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல்களில் எச்சரிக்கை தேவை. குழந்தையின் கல்வி மற்றும் முன்னேற்றம் குறித்து மனம் சஞ்சலிக்கலாம். கடக ராசிக்காரர்களுக்கு சனி பகவான் பிரச்சனைகளை உருவாக்கலாம்.

மேலும் படிக்க | 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் சூரியன் குரு சேர்க்கை: இவர்களுக்கு நல்ல நேரம் 

சிம்மம்:
சனியின் ராசி மாற்றத்திற்குப் பிறகு சனிபகவான் சிம்ம ராசியில் 7ஆம் வீட்டில் நுழைவார். ஜோதிட சாஸ்திரத்தின் படி ஏழாவது வீடு கடன், எதிரிகள் மற்றும் திருமண வாழ்க்கைக்கு காரணியாக கருதப்படுகிறது. சனிபகவான் உச்ச வீட்டில் தங்கியிருப்பதால் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். 

அதே சமயம் தாயாரின் உடல் நலனில் அக்கறை இருக்கும். மன உளைச்சல் இருந்து கொண்டே இருக்கும். தினசரி வருமானம் கூடும். கூட்டு சேர்ந்து செய்யும் வேலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நிதி நன்மைகள் சாத்தியமாகும். அதுமட்டுமின்றி திருமண வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும். காதல் உறவுகளில் இனிமை இருக்கும்.

கன்னி:

சனி கன்னி ராசிக்கு 5 ஆம் வீட்டில் நுழைவார். ஜோதிடத்தின் படி, ஐந்தாவது வீடு கல்வி, குழந்தைகள், அறிவுசார் திறன் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. இதனுடன், நோய், எதிரி மற்றும் கடன் ஆகியவையும் ஒரு காரணியாக கருதப்படுகின்றன. 

சனியின் இந்த ராசி மாற்றம் சில பிரச்சனைகளை உருவாக்கும். பாதங்கள் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். கண் சம்பந்தமான பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டி வரும். செலவுகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களிடையே கருத்து வேறுபாடுகள் வரலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.) 

மேலும் படிக்க | காதல் உறவை ஒரு போதும் கைவிடாத ‘5’ ராசிக்காரர்கள்..!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News