12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் சூரியன் குரு சேர்க்கை: இவர்களுக்கு நல்ல நேரம்

Astrology: சூரியன் மற்றும் வியாழன் இணைவது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இம்மாதம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியனும், வியாழனும் கும்ப ராசியில் இணைந்திருப்பது 3 ராசிக்காரர்களுக்கு அதிக பலன்களைத் தரும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 3, 2022, 11:16 AM IST
  • கும்ப ராசியில் சூரியன் - குரு சேர்க்கை.
  • 3 ராசிக்காரர்களுக்கு மிக நல்ல நேரம்.
  • இவர்கள் வாழ்வில் அதிர்ஷ்ட மழை பொழியும்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் சூரியன் குரு சேர்க்கை: இவர்களுக்கு நல்ல நேரம் title=

ஜோதிடத்தில் கோள்களின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. கிரகங்களின் ஒவ்வொரு ராசி மாற்றமும் அனைத்து ராசிகளிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. எனினும், சில கிரகங்களின் ராசி மாற்றங்களும், ஒரே ராசியில் சில கிரகங்கள் இணைவதும் சில சமயம் மிகப்பெரிய மாற்றங்களையும் தாக்கங்களையும் கொண்டு வருகின்றன. 

தற்போது, கும்ப ராசியில், கிரகங்களின் அரசரான சூரியனும் தேவகுருவான வியாழனும் இணைகிறார்கள். இந்த இரண்டு கிரகங்களும் நட்பு கிரகங்கள் என்பதால், இவற்றின் சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும் என கூறப்படுகின்றது. சூரியன் மற்றும் குருவின் இணைப்பு எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகிறது என்று இந்த பதிவில் காணலாம். 

இந்த ராசிக்காரர்கள் மீது அதிர்ஷ்ட மழை

மேஷம்:

சூரியன் மற்றும் வியாழன் இணைவது மேஷ ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகளை அளிக்கும். இந்த சேர்க்கை மேஷ ராசியின் பதினொன்றாம் இடத்தில் நடக்கிறது. இது வருமானத்திற்கான வீடாகும். ஆகையால், இந்த ராசிக்காரர்களுக்கு அதிக பண ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. 

மேஷ ராசிக்காரர்களின் நிதி நிலை வலுவான முறையில் மேன்மையடையும். முதலீடு செய்வது பற்றி நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால், இந்த நேரம் அதற்கு ஏற்ற நேரமாக இருக்கும். பண பரிவர்த்தனைகளுக்கு இது ஒரு சிறந்த நேரமாக இருக்கும்.

மேலும் படிக்க | 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் 

ரிஷபம்:

சூரியன் மற்றும் வியாழனின் இணைப்பு, ரிஷப ராசியின் கர்ம வினை மற்றும் தொழில் வீடான பத்தாம் வீட்டில் நடக்கிறது. ஆகையால், இந்த காலத்தில் புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கவும், ஊதியம் அதிகரிக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. 

பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். உயர் அதிகாரிகளுடன் நல்லுறவு இருக்கும். நீங்கள் ஒரு வியாபாரியாகவே, வர்த்தகம், வணிகத்தில் ஈடுபட்டுள்ளவராகவோ இருந்தால், இந்த காலகட்டத்தில் ஒரு மிகப்பெரிய வணிக ஒப்பந்தத்தை இறுதி செய்வீர்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு அறிமுகமாகும் சிலரால் எதிர்காலத்தில் பல பெரிய பலன்களைப் பெறுவீர்கள். 

மகரம்:

சூரியன் மற்றும் வியாழன் இணைவது மகர ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை அள்ளித்தரப்  போகிறது. வியாபாரிகள் அதிக லாபம் ஈட்டுவரகள். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கக்கூடும். நீண்ட நாட்களாக வேறு இடத்தில் சிக்கியிருந்த பணம் இப்போது திரும்பக் கிடைக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.) 

மேலும் படிக்க | இன்று இந்த ராசிக்காரர்கள் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News