வயதில் மூத்த பெண்களை விரும்பும் மெஜாரிட்டி ஆண்கள்... ஏன் தெரியுமா?

Relationship Tips: திருமணம் செய்துகொள்ள ஆண்கள் தங்களை விட வயதில் மூத்த பெண்களையும், பெண்கள் தங்களை விட வயதில் இளைய ஆண்களையும் விரும்பவது தற்போதைய டிரெண்டாக உள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : May 7, 2023, 08:53 PM IST
  • தற்போது ஆணுக்கு நிகராக பெண்களும் அதிக வேலைவாய்ப்பை பெறுகின்றனர்.
  • யாரும் யாரையும் பொருளாதார ரீதியாக சார்ந்திருக்க வேண்டிய தேவை குறைந்துள்ளது.
  • திருமண உறவில் வயதும் ஒரு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.
வயதில் மூத்த பெண்களை விரும்பும் மெஜாரிட்டி ஆண்கள்... ஏன் தெரியுமா? title=

Relationship Tips: காதல் என்பது மாயாஜாலம். அது எப்போது, யாருடன், யாரிடம் தோன்றும் என யாருக்குமே புரியாது, தெரியாது எனலாம். காதலிப்பவர்கள் சமூகத்தையோ, வயதையோ என எதையுமே பார்ப்பதில்லை என்பது பொதுவான கருத்து. சமூகமும் குடும்பமும் காதலிப்பவர்களுக்கு எதிராக இருப்பதற்கு இதுவே காரணம். 

சமூகத்தின் கடுமையான விதிகள் மற்றும் கருத்துக்களுக்கு எதிராகத் திரும்பும் சக்தி காதலுக்கு மட்டுமே உண்டு என சொல்லப்படுகிறது. மேலும், பெரும்பாலும் இன்றைய இளைஞர்கள் தங்களை விட வயது அதிகமான இளம்பெண்களையும், பெண்கள் தங்களை விட இளமையான ஆணை திருமணம் செய்வது தற்போதைய டிரெண்டாக உள்ளது. இதற்கு என்ன காரணம், அவர்கள் இந்த முடிவை எடுக்க எது அவர்களுக்கு தூண்டுகோளாக இருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் காணலாம். 

தன்னைவிட அதிக வயது உள்ள பெண்களை திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் பொதுவாக இந்த சமூகத்தில் இல்லை. இருப்பினும், இதுபோன்ற பழக்கவழக்கங்கள் பிரபலங்கள் இடமே அதிகம் காணப்படும். பொதுமக்கள் அனைவருக்கும் தெரிந்த உதாரணம் என சொல்ல வேண்டும் என்றால் சச்சின் டெண்டுல்கர் - அஞ்சலி ஜோடியை கூறலாம்.

அதேபோல, பல திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரங்களிலும், பெண்கள் தங்களை விட வயது குறைந்த ஆண்களை திருமணம் செய்து கொண்டுள்ளனர். நடிகை பிரியங்கா சோப்ரா, பாடகர்-நடிகர் நிக் ஜோனாஸ், ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் பச்சன் என பாலிவுட் நட்சத்திரங்கள் ஏராளமாக உள்ளனர். இதற்கு என்ன காரணம் என்று தொடர்ந்து பார்க்கலாம்.

மேலும் படிக்க | நண்பா... நண்பீஸ்... காதல் உறவில் இதையெல்லாம் செய்யவே செய்யாதீங்க!

அனுபவம்

வயது அதிகமான பெண்களுக்கு காதல் மற்றும் ரொமான்ஸ் விஷயங்களில் அதிக அனுபவம் இருக்கும். அவர்கள் உறவுகளையும் சூழ்நிலைகளையும் மிக விரைவாக புரிந்துகொள்கிறார்கள். தனிமையில் இருக்க அவர்களுக்கு பயம் இல்லை. மேலும், மண உறவில் தங்கள் சுயமரியாதையை இழக்காமல் தங்கள் துணையை எப்படி மகிழ்ச்சியாக வைத்திருப்பது என்பது அவர்களுக்குத் தெரியும். 

வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வு

வயது அதிகமான பெண்ணுக்கு உலகத்தைப் பற்றிய புரிதல் அதிகமாக இருக்கும். அவர்கள் தவறுகள் என்றால் என்ன என்பதை புரிந்திருப்பார்கள். அவர்கள் தங்கள் இணையரை நன்கு புரிந்துகொள்வார்கள். அந்த பெண்ணுக்கு உலகத்தைப் பற்றிய அவருடைய சொந்த பார்வை இருக்கிறது.

பணம் ஒரு பிரச்சினையாக இருக்காது

ஆண்களை விட பெண்கள் தற்போது வேகமாக செட்டில் ஆகிறார்கள். இத்தகைய நிலையில், இளம் ஆண்கள் தங்களை விட மூத்த பெண்கள் மீது அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள். ஏனென்றால், மண உறவில் பணமும் முக்கியத்துவம் பெறுகிறது. தேவைப்பட்டால் உதவி செய்யும் நிலையில் பெண்கள் உள்ளனர்.

அதிக புரிதல் மற்றும் ஆதரவு

இளம் பெண்கள் சற்று தொலைநோக்கு பார்வையுடன் உள்ளனர். அத்தகைய சூழ்நிலையில், தங்கள் மண உறவில் ஏதேனும் தவறு நடந்தால், அவர்கள் அதை சமாளித்து முன்னேறுகிறார்கள். இது அவரின் இணையருக்கு அதிக ஆதரவை அளித்து வழிநடத்துகிறது.

காதல் உறவில் நேர்மை

நேர்மைக்கும் வயதுக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும், மண உறவில் ஆண்களை விட மூத்த பெண்கள் அதிக புரிதல் கொண்டவர்களாக இருப்பார்கள். ஏனென்றால், சிறு வயதிலேயே அவர்கள் சமூகத்தைப் பற்றி அறிந்திருக்கிறார்கள். அவர்கள் அதிக விழிப்புணர்வு கொண்டவர்கள். அதனால்தான் ஆண்கள் தங்களை விட வயதான பெண்களுடன் அதிக தொடர்பு கொள்ள விரும்புகிறார்கள். மேலும், உறவில் ஏமாற்றும் வாய்ப்புகளும், ஏமாறும் வாய்ப்புகளும் குறைவு.

மேலும் படிக்க | உடலுறவின்போது ஆண்கள் இதையெல்லாம் கவனிப்பாங்க.. பெண்களே இத நோட் பண்ணுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News