மண வாழ்க்கை இன்பமாக இருக்க இந்த ராசி பொருத்தம் கண்டிப்பாக தேவை!

Zodiac Compatibility: ஒரு ஜோடிக்கு திருமணம் செய்யும்போது, இருவரின் ராசியையும் பார்ப்பது மிகவும் முக்கியம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், ஒரு சில ராசிகளுக்கு, மற்ற வேறு ராசியினர் பொருத்தமானவர்களாக இருப்பார்கள். அதுகுறித்து இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 16, 2023, 10:48 PM IST
மண வாழ்க்கை இன்பமாக இருக்க இந்த ராசி பொருத்தம் கண்டிப்பாக தேவை! title=

Zodiac Compatibility: ஜோதிட சாஸ்திரத்தில், ஒருவரது ராசியை வைத்து அவரது இயல்பு தீர்மானிக்கப்படுகிறது. எந்தவொரு நபரின் ராசியிலும் ஆளும் கிரகத்தின் நிலை அவர்களின் வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

கணவனும் மனைவியும் சண்டை போட்டுக் கொள்வதையும், உறவில் விரிசல் ஏற்படுவதையும் பார்த்திருப்பீர்கள். சிலரது வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாகவும் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் இருக்கிறார்கள்.

ஒரு ஜோடிக்கு திருமணம் செய்யும்போது, இருவரின் ராசியையும் பார்ப்பது மிகவும் முக்கியம் என்று கூறப்படுகிறது. ராசிகள் இணக்கமாக இருக்க வேண்டுமானால், கிரகங்கள் இணக்கமாக இருக்க வேண்டும். சாஸ்திரங்களின்படி, மேஷ ராசிக்காரர்கள் மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுடன் நன்றாகப் பழகுவார்கள்.

மேலும் படிக்க | உங்கள் மனைவியிடம் மறந்தும்கூட இந்த விஷயங்களை பேசாதீங்க!

இருவரும் சிறந்த வாழ்க்கை துணைகளாக இருப்பார்கள். மறுபுறம், விருச்சிகம் மற்றும் மகர ராசிக்காரர்கள் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல கூட்டாளிகளாக இருப்பார்கள். மிதுன ராசிக்காரர்கள் ரிஷபம், துலாம், சிம்மம் ஆகியோருடன் நன்றாகப் பழகுவார்கள்.

ராசி பொருத்தம்!

உங்கள் ராசி கடகம் என்றால் விருச்சிக ராசிக்காரர்கள் உங்களுக்கு சிறந்த துணையாக இருப்பார்கள். மேலும், கடகம், சிம்மம் ஆகிய ராசியினர் மேஷ ராசிக்காரர்களுடன் நன்றாகப் பழகுகிறது. தனுசு ராசிக்காரர்களுக்கு சிம்ம ராசிக்காரர்கள் நல்ல ஜோடியாக இருப்பார்கள். 

சிம்ம ராசிக்காரர்கள் கொஞ்சம் ஆக்ரோஷமாக இருப்பார்கள், எனவே அவரின் துணை அமைதியான மனநிலையுடன் இருக்க வேண்டும் என்று வேத வல்லுநர்கள் கூறுகிறார்கள். கும்ப ராசிக்காரர்கள் நல்ல குணம் கொண்டவர்களாக பார்க்கப்படுகிறது. எனவே அவர்களின் இணையர், அவருக்கு துணையாக இருக்க வேண்டும். சிம்மம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல கூட்டாளிகள் என்று கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | Flirt செய்வது ஒரு கலை... அதனை முறையாக செய்ய 10 டிப்ஸ்கள் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News