தினம் சுடுதண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா?

தினமும் தண்ணீரை சுடவைத்து குடித்தால் உடல்நலத்திற்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 22, 2022, 05:13 PM IST
  • சுடு தண்ணீர் குடிப்பதால் வரும் நன்மைகள்
  • சரும பாதுகாப்புக்கு உதவுகிறது
  • செரிமானத்தை மேம்படுத்துக்கிறது
தினம் சுடுதண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா? title=

மனிதனின் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு தண்ணீர் குடிப்பது மிக மிக அவசியம். ஒருநாளைக்கு குறைந்தபட்சம் நான்கு லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதுபோல் தண்ணீரை சுடவைத்து குடித்தால் உடலுக்கு மேலும் பல நன்மைகள் உருவாகின்றன

மூக்கடைப்பிலிருந்து விடுதலை : 

குளிர் காலம் கடுமையாக இருக்கும் இந்த நேரத்தில் மூக்கு அடைப்பது மிகவும் சங்கடமான ஒன்றாக இருக்கும். ஒரு கப் சூடான தண்ணீர் குடிப்பது மூக்கடைப்பை குறைக்க உதவுகிறது.

மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் : 

மலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணங்களில் ஒன்று உடல் நீர்ச்சத்தை இழப்பை சந்திப்பது. மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் சுடு தண்ணீரைக் குடிப்பது குடல்களை மீண்டும் சாதாரணமாக இயக்க ஒரு சிறந்த வழி.

மேலும் படிக்க | இரவில் ஊறவைத்து காலையில் இதை சாப்பிடுங்கள்: நோய்கள் எல்லாம் ஓடியே போகும்!!

சரும பராமரிப்பு:

தொடர்ந்து வெந்நீரைக் குடித்து வருவது சருமம் வயதாவதை தடுக்கிறது மற்றும் முகப்பரு, தழும்புகளை நீக்குகிறது.

மேலும் படிக்க | அழகான சருமத்திற்கு அற்புத பலன் அளிக்கும் ஐந்து பொருட்கள்! தேங்காயின் அழகு வைத்தியம்

செரிமான மேம்பாடு : 

காலை நேரங்களில் நீர் குடிப்பது நல்லது. குறிப்பாக உணவிற்கு முன் வெந்நீர் குடிப்பது செரிமானத்திற்கு உதவுகிறது. இப்பழக்கம் வயிற்று உப்புசம், அசிடிட்டி மற்றும் வாயுவை குணப்படுத்துகிறது.

மேலும் படிக்க | அடடே! முருங்கையை இப்படி பயன்படுத்தினா சர்க்கரை நோய் ஓடிப்போகுமா? தெரியாம போச்சே!

மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் : 

மாதவிடாயின் போது சீரான இடைவெளியில் வெந்நீரைக் குடிப்பதன் மூலமும் வலிமிகுந்த மாதவிடாய் பிடிப்பிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News