அழகான சருமத்திற்கு அற்புத பலன் அளிக்கும் ஐந்து பொருட்கள்! தேங்காயின் அழகு வைத்தியம்

Skin Care Tips: இரவில் உறங்கச் செல்வதற்கு முன்னதாக இந்த அற்புதமான பொருட்களை சருமத்தில் பூசி, காலையில் எழுந்த பிறகு கழுவினால் சருமம் ஆரோக்கியத்துடன் அழகாக மிளிரும்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 22, 2022, 03:05 PM IST
  • அழகான சருமம் பெற இயற்கையான 5 வழிகள்
  • சருமத்தை மென்மையாக்க இரவில் தேன் செய்யும் மாயம்
  • கற்றாழையை இப்படி பயன்படுத்தினால் பட்டு போன்ற மென்மையான சருமம் உறுதி
அழகான சருமத்திற்கு அற்புத பலன் அளிக்கும் ஐந்து பொருட்கள்! தேங்காயின் அழகு வைத்தியம் title=

அழகே உன்னை ஆராதிக்கிறேன் என்று சொல்லும் இயற்கையான பொருட்களை நாம் சரியான முறையில் பயன்படுத்தினால், அவை ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.  பல இயற்கையான பொருட்களை உண்பது உடலின் உள் உறுப்புகளுக்கு ஆரோக்கியம் என்றால், அவற்றை சருமத்தில் பயன்படுத்தினால் அழகு மிளிரும். இரவில் முகத்தில் என்ன தடவினால் பட்டு போன்ற சருமம் கிடைக்கும்? அதை எப்படி பயன்படுத்துவது என பல கேள்விகள் அவ்வப்போது எழுகின்றன. ஆனால் கிடைக்கும் பதில் அனைவருக்குமானதாக இருக்காது.

ஏனென்றால், சருமத்தின் தன்மை, ஆளுக்கு ஆள் மாறுபடுவதால், சரும பராமரிப்புக் குறிப்புகளும் ஆளுக்கு ஆள் மாறுபடும். வறண்ட சருமம் உள்ளவர்களின் முகத்திற்கு ஒத்து வரும் குறிப்புகள் எண்ணெய் பசை கொண்ட சருமத்தைக் கொண்டவர்களுக்கு எதிர்மறையான பலனையேக் கொடுக்கும்.

எனவே, இரவில் எந்த வகை சருமத்தைக் கொண்டவர்கள் எதை பயன்படுத்தினால் நன்மை பெறலாம் என்பதை தெரிந்துக் கொண்டால், அதன் பயன்களை எளிதாக பெறலாம். 

மேலும் படிக்க | Honey For Skin: முகத்தில் உள்ள தழும்புகள் மறைய தேன்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த எண்ணெயில் ஒமேகா -3 மற்றும்  ஆரோக்கியமான் கொழுப்புகள் உள்ளன, அவை சருமத்திற்கு நன்மை பயக்கும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு தேங்காய் எண்ணெய் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை வெளிக் கொண்டு வருகிறது. தேங்காய் எண்ணெயில் சில பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகத்தில் உள்ள பாக்டீரியாவைக் குறைத்து, சருமத்தை ஆரோக்கியமாக்குகின்றன.

தேன்
தேன் முகத்திற்கு எல்லா வகையிலும் நன்மை பயக்கும். தேனில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது சருமத்தை உள்ளே இருந்து சுத்தப்படுத்தவும் குணப்படுத்தவும் உதவுகிறது. கூடுதலாக, இது சருமத்தில் உள்ள கறைகளை அகற்ற உதவுகிறது. எனவே, தேனை எடுத்து முகத்தில் தடவவும். இது உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.  

கற்றாழை
கற்றாழை ஜெல் முகத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும். கற்றாழையின் சதைப் பகுதியை பயன்படுத்தினால், முகத்தின் ஈரப்பதம் பராமரிக்கப்படும். அதோடு, பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுகள் ஏற்படாமலும் உதவும். கற்றாழையில் உள்ள குணப்படுத்தும் பண்புகள், சேதமடைந்த சருமத்தை உள்ளே இருந்து சரிசெய்து, மெருக்கூட்டும். கற்றாழை மட்டுமே, அனைத்து வகை சருமத்தினருக்கும் நன்மை பயக்கும். 

மேலும் படிக்க | ஆரோக்கியத்திற்கு உகந்த இந்த காய்கறிகளே உடல்நலனுக்கு எதிராகும்

பன்னீர்
ரோஸ் வாட்டர் என்று அறியப்படும் பன்னீர் சருமத்திற்கு எல்லா வகையிலும் நன்மை பயக்கும். இரவில் தடவினால் சருமம் சுத்தமாகும். மேலும், அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்கும் பன்னீர், உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கும் நன்மை பயக்கும்.

அவக்கோடா
அவக்கோடா பழத்தை அரைத்து சருமத்தில் தடவினால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். இது அனைத்து சரும வகைகளுக்கும் நன்மை பயக்கும். வறண்ட சருமம், எண்ணெய் சருமம் மற்றும் உணர்திறன் வாய்ந்த சருமம் என அனைவருக்கும் உகந்த பழம் இது.  

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சருமத்தில் சொறி, அரிப்பு தொல்லையா? இந்த வீட்டு வைத்தியங்களால் நிவாரணம் பெறலாம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News