குரு - சுக்கிரன் கூட்டணியினால் இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தான்

வியாழன் மற்றும் சுக்கிரன் 2022, மே 23 வரை மீன ராசியில் இருக்கும் நிலையில், இந்த இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் இருப்பது இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை பெய்யும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 6, 2022, 10:28 AM IST
குரு - சுக்கிரன் கூட்டணியினால் இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தான் title=

ஜோதிடத்தில் கோள்கள் ஒன்றுடன் ஒன்று நெருங்கி வருவது அல்லது அவ்வப்போது தொடர்பு கொள்வது சிறந்த யோகத்தை உருவாக்குகிறது. இது மனித வாழ்க்கையில் மிகவும் சாதகமான பலன்களைக் கொடுக்கும்.

இம்முறை ஜோதிட கால கணக்கீட்டின்படி, 2022, ஏப்ரல் 27ம் தேதி முதல் 2022,மே 23ம் தேதி வரை வியாழனும் சுக்கிரனும் மீனத்தில் நிலைத்திருக்கும். இந்த இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் இருப்பது மிகவும் சுப ராசியாகும். வியாழன் மற்றும் சுக்ரன் மிகவும் முக்கியமான கிரகங்களாக கருதப்படுகின்றன. சுக்கிரன் செல்வத்தையும், வியாழன் கிரகம் அதிர்ஷ்டத்தையும் அள்ளிக் கொடுக்கும் கிரகமாகும். 

குரு பிரகஸ்பதி தேவர்களின் குருவாகக் கருதப்படுகையில், சுக்கிரன் அசுரர்களின் குருவாகக் கருதப்படுகிறார். மகிழ்ச்சி, அறிவு, குழந்தைகள், ஆன்மீகப் பணி, தொண்டு, அறம் மற்றும் முன்னேற்றத்திற்கான காரணியாக குரு விளங்குகிறார். மறுபுறம், சுக்கிரன் ஆடம்பரம், பொருள் இன்பம், காதல், திருமண வாழ்க்கை போன்றவற்றின் காரணியாக விளங்குகிறார். இந்த இரண்டு கிரகங்கள் ஒன்று சேர்வது 12 ராசிகளுக்கும் தனித் தனி பலன்களை கொடுக்கிறது. அதில், 4 ராசிக்காரர்களுக்கு சில விசேஷ பலன்களை ஏற்படுத்தி ராஜ யோகத்தை அனுபவிப்பார்கள்.

மேலும் படிக்க | Personality by Zodiac Sign: வெறுப்பு, பகை குணம் இல்லாத '3' ராசிக்காரர்கள்..!!

12 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் இந்த சிறப்பான யோகத்தால், இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் நிறைய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சுக்கிரன் மற்றும் வியாழன் இணைவதால் சாதகமான பலனை அனுபவிக்க உள்ள நான்கு ராசிகளை அறிந்து கொள்ளலாம்.

மீனம்:

பண ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் புதிய உயரங்கள் எட்டப்படும். ஆடம்பரமும் வசதியும் பெறுவீர்கள்.

கடகம்:

எதிர்பாராத வகையில் பண ஆதாயம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வேலையில் புதிய உயரங்கள் எட்டப்படும். ஆடம்பரமும் வசதியும் தடையில்லாமல் பெறுவீர்கள்.

கன்னி:

அதிர்ஷ்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். வருமானம் அதிகரிக்கும் அறிகுறிகளும் தென்படுகின்றன.

மகரம்:

இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட பலன் கிடைக்கும். குடும்பத்தில் சிறந்த சூழல் நிலவும். வருமானம் உயரும் வாய்ப்புகள் உண்டு. வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.

இரண்டு கிரகங்கள் ஒரே ராசியில் இருந்தால் இணைவு என்றும், மூன்று கிரகங்கள் ஒரே ராசியில் இருந்தால் திரிகிரஹி யோகம் என்றும், நான்கு கிரகங்கள் ஒரே ராசியில் சஞ்சரித்தால், அது சதுர்கிரஹி யோகம் என்றும், ஐந்தில் இருந்தால் அது சதுக்ரக யோகம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒரே ராசியில் கிரகங்கள் நுழைவது அல்லது ஒன்றாகச் செல்வது பஞ்சகிரஹி யோகம் எனப்படும். இந்த யோகாக்கள் அனைத்தும் வெவ்வேறு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astro: அனைவரையும் காந்தம் போல் வசீகரிக்கும் திறன் பெற்ற ‘3’ ராசிக்காரர்கள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News