Personality by Zodiac Sign: வெறுப்பு, பகை குணம் இல்லாத '3' ராசிக்காரர்கள்..!!

ஜோதிடத்தின் மூலம், ஒவ்வொரு மனிதனின் ஆளுமை, இயல்பு மற்றும் எதிர்காலம் பற்றி எளிதாகக் கண்டறிய முடியும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 29, 2022, 06:22 PM IST
  • மக்களின் தவறுகளை மன்னிப்பார்கள்.
  • இவர்கள் அடக்கமான இயல்புடையவர்கள்
  • யாரையும் வெறுக்காத அன்பு மனம் கொண்டவர்கள்
Personality by Zodiac Sign: வெறுப்பு, பகை குணம் இல்லாத  '3' ராசிக்காரர்கள்..!! title=

ஒவ்வொரு நபருக்கும் ஒரு ராசி உள்ளது. ஜோதிடத்தில், ஒவ்வொரு ராசிக்கும் தொடர்புடைய நபர்களின் தன்மை, குணங்கள், தீமைகள் மற்றும் எதிர்காலம் ஆகியவை கூறப்பட்டுள்ளன. 

ஜோதிட சாஸ்திரத்தில்,  12 ராசிகளில் 3 ராசிக்காரர்கள் மிகவும் வெள்ளை மனம் படைத்தவர்கள், அடக்கமான குணம் கொண்டவர்கள் என கூறப்படுகிறது. அவர்கள் யாருடனும் பகையோ, வெறுப்போ கொள்வதில்லை. 

இந்த ராசிக்காரர்கள் பழைய விஷயங்களை மறந்துவிடுவார்கள், மக்களின் தவறுகளை மன்னிப்பார்கள். மேலும் அவர்கள் இதயம் பரிசுத்தமானது. அதுமட்டுமின்றி இந்த ராசிக்காரர்கள் யாருடனும் தானாக சென்று தகராறு செய்ய மாட்டார்கள். 

அவர்களின் இயல்புக்கு ஏற்ப, அவர்கள் சிறிய விஷயங்களைப் புறக்கணிக்கின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் அனைவரிடமும் நல்லெண்ணத்துடன் அன்புடன் பழகும் குணம் கொண்ட அந்த 3 ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | Astro: அனைவரையும் காந்தம் போல் வசீகரிக்கும் திறன் பெற்ற ‘3’ ராசிக்காரர்கள்..!!

கடகம்

கடகம் சந்திரனால் ஆளப்படுகிறது. ஜோதிடத்தில், சந்திரன் மனதின் காரணியாகக் கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி கடக ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படும் இயல்புடையவர்கள். இந்த ராசிக்காரர்களும் அன்புக்குரியவர்களிடம் அதிக அக்கறை செலுத்துவார்கள். இதனுடன் இந்த ராசிக்காரர்கள் உறவுகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இது தவிர மன்னிக்கும் குணமும் இந்த ராசியை சேர்ந்தவர்களிடம் உள்ளது.

சிம்மம்

சிம்ம ராசியை ஆளும் கிரகம் சூரியன். இந்த ராசிக்காரர்கள் எல்லாவற்றையும் தெளிவாக வெள்ளை மனதுடன் இருக்கிறார்கள். இந்த ராசியை சேர்ந்தவர்கள் பழைய விஷயங்களை திரும்பிப் பார்க்காமல் இருப்பதே அவர்களின் மிகப்பெரிய குணம். பழைய விஷயங்களை மறந்துவிட்டு முன்னேற விரும்புகிறார்கள்.  மன்னிக்கும் குணமும் அவர்களுக்கு உண்டு. பிறரின் குற்றங்களை மன்னிப்பதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள்.

மீனம்

மீன ராசியின் அதிபதியாக வியாழன் கருதப்படுகிறது. இந்த ராசியை சேர்ந்தவர்கள் யோசிக்காமல் பதில் சொல்கிறார்கள். அவர்களின் வார்த்தைகள் சில நேரங்களில் மற்றவர்களுக்கு முரட்டுத்தனமாகத் தோன்றினாலும், அவை இதயத்திலிருந்து மிகவும் தெளிவாக இருக்கும். மேலும், இவர்களுக்கு யார் மீதும் பொறாமையோ, வெறுப்போ கிடையாது. இது தவிர, எதையும் மறந்து முன்னேறிச் செல்வதையே இவர்கள் நம்புகிறார்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இந்த 4 ராசிக்காரர்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News