தபால் அலுலவலகத்தின் சூப்பர் ஹிட் திட்டம்: சிறிய சேமிப்பு, பெரிய லாபம்

நாட்டின் சிறு சேமிப்பு திட்டங்களில், நிலையான வைப்புடன் ரெக்கரிங் டெபாசிட் அதாவது RD-யும் மிகப் பிரபலமாக உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 10, 2021, 09:10 PM IST
  • பணம் ஈட்டும் வழி, பாதுகாப்பானதாகவும், நியாயமானதாகவும் இருக்க வெண்டியது அவசியமாகும்.
  • சிறிய தொகையையும் மாதந்தோறும் இதில் முதலீடு செய்யலாம்.
  • தபால் அலுவலகத்தின் 5 ஆண்டு மெச்யூரிட்டி கொண்ட ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில், ​​5.8 சதவீத வருடாந்திர வட்டி வழங்கப்படுகிறது.
தபால் அலுலவலகத்தின் சூப்பர் ஹிட் திட்டம்: சிறிய சேமிப்பு, பெரிய லாபம் title=

Post Office Scheme: பணம் ஈட்டும் ஆசை அனைவருக்கும் உள்ளது. ஆனால், அதற்கான வழி, பாதுகாப்பானதாகவும், நியாயமானதாகவும் இருக்க வெண்டியது அவசியமாகும். அப்படிபட்ட பாதுகாப்பான ஒரு திட்டத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

நாட்டின் சிறு சேமிப்பு திட்டங்களில், நிலையான வைப்புடன் ரெக்கரிங் டெபாசிட் அதாவது RD-யும் மிகப் பிரபலமாக உள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், ஒரே முறையில் முதலீடு செய்ய முதலீட்டாளரிடம் அதிக தொகை இல்லை என்றால், ஒரு சிறிய தொகையையும் மாதந்தோறும் இதில் முதலீடு செய்யலாம்.

ஒரு வகையில், இந்தத் திட்டம் ஒரு முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) போல செயல்படுகிறது. அதே நேரத்தில், இது நீண்ட காலத்திற்கு ஒழுக்கமான முதலீட்டை ஊக்குவிக்கிறது. இது ஒரு சிறிய சேமிப்புத் திட்டமாகும். ஆனால் அதன் நன்மைகள் மிகப்பெரியதாக உள்ளன. உங்கள் தினசரி செலவில் சிறு தொகையை சேமிப்பதன் மூலம், நீங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு பெரிய தொகையை பெறலாம். தபால் நிலையங்களிலும் ரெகரிங் டெபாசிட் செய்ய வசதி உள்ளது. இங்கு, எஸ்பிஐ அல்லது பிற வங்கிகளை விட அதிக வருவாயைப் பெற முடியும்.

எவ்வளவு வட்டி கிடைக்கும்

தபால் அலுவலகத்தின் (Post Office) 5 ஆண்டு மெச்யூரிட்டி கொண்ட ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில், ​​5.8 சதவீத வருடாந்திர வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி காலாண்டு கூட்டு அடிப்படையில் கிடைக்கிறது. சாதாரண குடிமக்களுக்கு, எஸ்பிஐ அளிக்கும் வட்டி 5.4 சதவிகிதமாகும். மற்ற அரசு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிலும், ஆர்.டி.-க்கு 5 முதல் 5.5 சதவீதம் வரை வட்டி கிடைக்கிறது. 

RD-ஐ எப்படி கணக்கிடுவது

ஒரு நாளைக்கு  - ரூ .200 அதாவது மாத முதலீடு - ரூ. 6000. திட்டக் காலம் - 10 ஆண்டுகள் (5 வருடங்களுக்கான ஆர்.டி.-ஐ  மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம்). வட்டி விகிதம் காலாண்டுக்கு - 5.8 சதவிகிதம். முதிர்வு தொகை - தோராயமாக 9.75 லட்சம்

ALSO READ | Post Office: மாதம் ரூ 5000 முதலீடு; 15 ஆண்டுகளில் 16.25 லட்ச ரூபாய் தரும் சூப்பர் திட்டம்

குறைந்தது ரூ .100 உடன் கணக்கு தொடங்கப்படும்

ஒரு தபால் அலுவலகத்தில் ரெக்கரிங் டெபாசிட் (RD) கணக்கைத் திறக்க, குறைந்தபட்ச மாத முதலீடு ரூ 100 ஆகும். நீங்கள் முதலீடு செய்யக்கூடிய அதிகபட்ச தொகைக்கு வரம்பு இல்லை. தபால் அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைனில் கணக்குகளைத் திறக்கும் வசதியையும் வழங்குகின்றன. 

RD மற்றும் வரி

RD க்கு கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படுகிறது. உங்கள் வட்டி வருமானம் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அதற்கு டிடிஎஸ் செலுத்த வேண்டும். (பிடிஐ)

முதலீட்டில் ஆபத்து

RD இல் முதலீடு செய்வதில் எந்த ஆபத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் வட்டி விகிதங்கள் முன்கூட்டியே நிர்ணயிக்கப்படுகின்றன. இதில் சந்தை தொடர்பான ஆபத்து இல்லை.

ALSO READ | Post Office சூப்பர் திட்டம், ரூ10,000 வீதம் முதலீடு; ரூ16 லட்சம் ரிட்டன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News