Post Office FD: அதிக வட்டியுடன் கூடுதல் நன்மைகள் கொடுக்கும் பாதுகாப்பான முதலீடு

தபால் அலுவலகத்தில் FD கணக்கில் முதலீடு செய்வதன் மூலம் சிறந்த பலனை பெறுவதோடு, உங்கள் முதலீட்டிற்கு அரசாங்க உத்தரவாதமும் கிடைக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 10, 2021, 02:38 PM IST
  • தபால் அலுவலக திட்டத்தில் முதலீடிற்கு நல்ல வட்டி விகிதம் கிடைக்கும்
  • வங்கிகளில் செய்யும் முதலீடுகளை விட அதிக நன்மைகள் கிடைக்கும்.
  • தபால் அலுவலகத்தில் FD கணக்கு தொடங்குவது எளிது.
Post Office FD: அதிக வட்டியுடன் கூடுதல் நன்மைகள் கொடுக்கும் பாதுகாப்பான முதலீடு title=

Post Office scheme: அஞ்சலகத்தில் முதலீடு செய்வது எப்போதுமே, பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாக இருக்கும். சிறந்த இலாபத்தை பெற விரும்புபவர்கள், தபால் நிலையத்தில் பிக்ஸட் டெபாஸிட்டில் (Fixed deposit) முதலீடு செய்யலாம். தபால் அலுவலகத்தில் FD (Post office FD) கணக்கில் முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் பல வசதிகளையும் பெறுவீர்கள்.

இதில், நல்ல லாபத்துடன் அரசு உத்தரவாதமும் கிடைக்கும். இதில், நீங்கள் காலாண்டு அடிப்படையில் வட்டி வசதியை (தபால் அலுவலக FD வட்டி விகிதம் 2021) பெறுவீர்கள்.

தபால் அலுவலகத்தில் (Post Office) FD கணக்கு தொடங்குவது மிகவும் எளிதானது. இந்த தகவலை இந்தியா போஸ்ட் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. நீங்கள் தபால் அலுவலகத்தில் 1,2, 3, 5 வருடங்களுக்கான FD கணக்கை தொடங்கலாம். இந்த திட்டத்தில் என்ன நன்மைகள் உள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம்

ALSO READ | Post Office: ATM கார்டு, பரிவர்த்தனை தொடர்பான விதிகளில் முக்கிய மாற்றம்..!!!

1. அஞ்சலகத்தில் FD கணக்கிற்கு இந்திய அரசு உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

2. இதில், முதலீட்டாளர்களின் பணம் முற்றிலும் பாதுகாப்பானது.

3. FD கணக்கில் செய்ப்படும் முதலீட்டை, ஆஃப்லைன் (பணம், காசோலை) அல்லது ஆன்லைன் (நெட் பேங்கிங் / மொபைல் பேங்கிங்) மூலம் செய்யலாம்.

4. ஒன்றுக்கு மேற்பட்ட FD கணக்கை தொடங்கலாம். 

5. இது தவிர, FD கணக்கை கூட்டாகவும் இருக்கலாம்.

6. இதில், 5 வருடங்களுக்கான நிலையான வைப்பு தொகையில் முதலீடு செய்வதன் மூலம் உங்களுக்கு வருமான வரி விலக்கும் கிடைக்கும்.

7. ஒரு அஞ்சலகத்திலிருந்து மற்றொரு தபால் நிலையத்திற்கு FD கணக்கை எளிதாக மாற்றலாம்.

ALSO READ | Post Office Schemes: பணத்தை இரட்டிப்பாக்கும் சூப்பர் முதலீட்டு திட்டங்கள்..!!!

FD கணக்கை தொடங்கும் முறை

தபால் அலுவலகத்தில் எப்.டி கணக்கை தொடங்க, காசோலை கொடுக்கலாம் அல்லது பணத்தைச் செலுத்தி கணக்கைத் தொடங்கலாம். இதில், குறைந்த பட்சம முதலீடு ரூ.1000. அதிகபட்ச தொகைக்கான வரம்பு ஏதும் இல்லை

FD முதலீட்டில் அதிக வட்டி கிடைக்கும்

FD கணக்கில் 7 நாட்கள் முதல் ஒரு வருடம் வரை 5.50 சதவீத வட்டி கிடைக்கும். அதே வட்டி விகிதம் 1 வருடம் 1 நாள் முதல் 2 ஆண்டுகள் வரை FD கணக்குகளுக்கும் பொருந்தும். அதே நேரத்தில், 3 வருடங்கள் முதல் 5 வருடங்கள் வரையிலான 6.70 சதவீத வட்டி கிடைக்கிறது. அதாவது, இங்கே நீங்கள் FD முதலீட்டில் நல்ல லாபம் பெறுவீர்கள்.

ALSO READ | Alert! ஆன்லைனில் DL அப்ளை செய்கிறீர்களா; மோசடிக்கு பலியாகாதீர்கள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News