EPF முக்கிய செய்தி: ஊதிய வரம்பு அதிகரிக்கலாம், அரசு பரிசீலனை தொடர்கிறது

EPF Salary Limit Update: ஊழியர்களின் சம்பள வரம்பு அதிகரிக்கக்கூடும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் சம்பள வரம்பை அதிகரிக்க உயர்மட்டக் குழு முன்மொழிந்துள்ளது

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 25, 2022, 11:02 AM IST
  • ஊழியர்களுக்கு நல்ல செய்தி.
  • ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் சம்பள வரம்பை அதிகரிக்க உயர்மட்டக் குழு முன்மொழிந்துள்ளது.
  • இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், 7.5 லட்சம் கூடுதல் தொழிலாளர்கள் பயனடைவார்கள்.
EPF முக்கிய செய்தி: ஊதிய வரம்பு அதிகரிக்கலாம், அரசு பரிசீலனை தொடர்கிறது title=

இபிஎஸ் சமீபத்திய செய்திகள்: ஊழியர்களுக்கு நல்ல செய்தி!! ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் சம்பள வரம்பை அதிகரிக்க உயர்மட்டக் குழு முன்மொழிந்துள்ளது. சம்பள வரம்பை மாதம் ஒன்றுக்கு ரூ.15,000லிருந்து ரூ.21,000 ஆக உயர்த்த வேண்டும் என்று குழு கூறியுள்ளது. இது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாகவும், அதை பேக் டேட்டிலிருந்து அமல்படுத்தக்கூடும் என்றும் குழு கூறியுள்ளது.

யாருக்கு பலன் கிடைக்கும்?

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், 7.5 லட்சம் கூடுதல் தொழிலாளர்கள் பயனடைவார்கள். ஏனெனில் அவர்களும் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்படுவார்கள். ஊதிய உயர்வுக்கும் பரிசீலிக்கப்படுவார்கள். 2014 இல் செய்யப்பட்ட திருத்தம் போல் செய்யப்படும். எகனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர், “இந்த ஆலோசனையை இபிஎஃப்ஓ ​​இன் மத்திய அறங்காவலர் குழு ஏற்றுக்கொண்டால், கூடுதல் நிதிச் சுமையை உடனடியாகச் சுமக்கத் தயாராக இருக்கும் முதலாளிகளுக்கு அது நிவாரணம் அளிக்கும்” என்று தெரிவித்தார். 

அரசின் கருவூலத்திற்கு நிவாரணம்

கொரோனா தொற்றுநோய் காரணமாக மோசமடைந்து வரும் பட்ஜெட்டைக் காரணம் காட்டி முதலாளிகள் / நிறுவனங்கள் இந்த உயர்வைக் கோரியிருந்தனர். இபிஎப்ஓவின் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்காக மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6,750 கோடி ரூபாய் செலுத்துவதால், இந்த முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டால், கருவூலத்திற்கும் நிவாரணம் கிடைக்கும். இந்த திட்டத்திற்காக இபிஎஃப்ஓ ​​சந்தாதாரர்களின் மொத்த அடிப்படை சம்பளத்தில் 1.16 சதவீதத்தை அரசாங்கம் பங்களிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | EPFO முக்கிய செய்தி: இதை செய்யவில்லை என்றால் கணக்கு இருப்பை தெரிந்துகொள்ள முடியாது

இபிஎஃப்ஓ-இன் மத்திய அறங்காவலர் குழுவில் உள்ள கெஇ ரகுநாதன், இபிஎஃப்ஓ ​​மற்றும் இஎஸ்ஐசி ஆகிய இரண்டின் கீழும் சமூகப் பாதுகாப்பை வழங்குவதற்கு ஒரே மாதிரியான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று இபிஎஃப்ஓ-​​க்குள் பொதுவான ஒருமித்த கருத்து உள்ளது என்றார். இரண்டு திட்டங்களிலும் உள்ள விதிமுறைகளில் உள்ள வேறுபாடு, தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்புப் பலன்களைப் பறிக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

இப்போது இபிஎஸ் தொடர்பான விதிகள் என்ன?

நாம் ஒரு வேலையைத் தொடங்கி இபிஎப்-இல் உறுப்பினராகும்போது, ​​அதே நேரத்தில் இபிஎஸ்-லும் உறுப்பினராகிறோம். ஊழியர் தனது சம்பளத்தில் 12%-ஐ இபிஎஃப்-இல் கொடுக்கிறார், அதே தொகையை அவரது நிறுவனமும் கொடுக்கிறது. ஆனால் அதில் ஒரு பகுதி 8.33 சதவிகிதம் இபிஎஸ்-க்கும் செல்கிறது. நாம் மேலே குறிப்பிட்டுள்ளபடி, தற்போது அதிகபட்ச ஓய்வூதிய ஊதியம் 15 ஆயிரம் ரூபாய் என்று உள்ளது. அதாவது ஒவ்வொரு மாதமும் ஓய்வூதிய பங்கு அதிகபட்சம் (15,000 இல் 8.33%) ரூ 1250 ஆகும்.

ஊழியர் ஓய்வு பெறும்போது, ஓய்வூதியத்தை கணக்கிடுவதற்கான அதிகபட்ச சம்பளம் 15,000 ரூபாயாகக் கருதப்படுகிறது. இதன்படி, இபிஎஸ்-இன் கீழ் ஒரு ஊழியர் பெறக்கூடிய அதிகபட்ச ஓய்வூதியம் 7,500 ரூபாய். 

இப்படித்தான் ஓய்வூதியம் கணக்கிடப்படுகிறது.

நீங்கள் செப்டம்பர் 1, 2014க்கு முன் இபிஎஸ்ஸில் பங்களிக்கத் தொடங்கியிருந்தால், உங்களுக்கான ஓய்வூதியப் பங்களிப்புக்கான அதிகபட்ச மாதச் சம்பள வரம்பு ரூ.6500 ஆக இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். செப்டம்பர் 1, 2014க்குப் பிறகு நீங்கள் இபிஎஸ்-இல் சேர்ந்திருந்தால், அதிகபட்ச சம்பள வரம்பு 15,000 ஆக இருக்கும். 

மேலும் படிக்க | சொத்துக்கள் வாங்க PF தொகையை பயன்படுத்துவது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News