புதுடெல்லி: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் இ-நாமினேஷன் செய்வதை கட்டாயமாக்கியுள்ளது. உங்கள் பிஎஃப் கணக்கிற்கு நீங்கள் நாமினியை நியமிக்கவில்லை என்றால், உங்கள் பாஸ்புக் இருப்பை உங்களால் சரிபார்க்க முடியாது. மேலும், துரதிஷ்டவசமாக, கணக்கு வைத்திருப்பவர் இறந்தால், டெபாசிட் தொகையைப் பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
நாடு முழுவதும் உள்ள பல ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை தங்கள் பிஎஃப் கணக்கில் வருங்கால வைப்பு நிதியாக டெபாசிட் செய்கிறார்கள். இந்த தொகை ஓய்வு காலத்திலும் சில சமயங்களில் தேவையான சூழ்நிலைகளிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பணியாளர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யும் அதே அளவு தொகை, பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அவர் பணிபுரியும் நிறுவனத்தால் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.
மேலும் படிக்க | சொத்துக்கள் வாங்க PF தொகையை பயன்படுத்துவது எப்படி?
உங்கள் பாஸ்புக் இருப்பை எவ்வாறு செக் செய்வது?
தனியார் துறையில் பணிபுரியும் பல பணியாளர்கள் தங்கள் நிறுவனத்தை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருப்பதால் அவர்களின் பிஎஃப் கணக்கு எண்ணும் மாறிக்கொண்டே இருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், யுஏஎன் (UAN) எண் மூலம் லாக் இன் செய்து அவர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட மொத்தத் தொகையைப் பார்க்கலாம்.
யுஏஎன் எண்ணுடன் லாக் இன் செய்து உங்கள் பிஎஃப் கணக்கின் பாஸ்புக்கை எளிதாக அணுகலாம்.
இ-நாமினேஷன் செய்வது கட்டாயமாக்கப்பட்டது
இபிஎஃப்ஓ இணையதளத்திற்கு சென்று உங்கள் பாஸ்புக்கை அணுக விரும்பினால், அதற்கு நீங்கள் முதலில் இ-நாமினேஷனைச் செய்ய வேண்டும். பாஸ்புக் பக்கம் திறந்தவுடன் இணையதளத்தில் இ-நாமினேஷனுக்கான பாப்-அப் விண்டோ தோன்றும்.
இதில், நீங்கள் இ-நாமினேஷனை தாக்கல் செய்யவில்லை என்றால், இந்த பாப் அப் விண்டோ இணையதள பக்கத்தில் இருந்து போகாது. எனவே, கணக்கு வைத்திருப்பவர்கள் இ-நாமினேஷனைச் செய்வது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, இல்லையெனில் அவர்கள் தங்கள் பாஸ்புக் கணக்கை அணுக முடியாது.
மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி; வருகிறது புதிய திட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR