ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி; வருகிறது புதிய திட்டம்

ஓய்வூதியம் தொடர்பான நல்ல செய்தி உள்ளது. ஓய்வூதிய நிதி அமைப்பான இபிஎஃப்ஓ, ஒழுங்கமைக்கப்பட்ட துறை ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவர ஆலோசித்து வருகிறது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 13, 2022, 08:56 AM IST
  • இபிஎஸ் விதிகள் என்ன
  • ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது
  • இபிஎஸ் கணக்கீட்டு ஃபார்முலா
ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி; வருகிறது புதிய திட்டம் title=

ஓய்வூதியம் தொடர்பான நல்ல செய்தி வந்துள்ளது. அதன்படி ஒழுங்கமைக்கப்பட்ட துறை ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர ஓய்வூதிய நிதி அமைப்பான இபிஎஃப்ஓ, ஆலோசித்து வருகிறது. அதேபோல் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள உச்சவரம்பையும் அரசாங்கம் விரைவில் நீக்க முடியும் என்று கூரப்படுகிறது. இது உங்கள் வாழ்க்கையை எவ்வாறு மாற்றப்போகிறது என்பதை பார்போம்.

இபிஎஸ் வரம்பு என்ன?
தற்போது அதிகபட்ச ஓய்வூதிய ஊதியம் மாதம் 15,000 ரூபாய் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, உங்கள் சம்பளம் என்னவாக இருந்தாலும் சரி, ஓய்வூதியத்தின் கணக்கீடு 15,000 ரூபாயில் மட்டுமே இருக்கும். ஆனால் இந்த வரம்பை நீக்குவது தொடர்பான தற்போது வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

மேலும் படிக்க | உங்கள் கணக்கில் இபிஎஃப் வட்டி வந்துவிட்டதா? எப்படி கண்டறிவது?

தற்போது இருக்கும் இபிஎஸ் விதிகள் என்ன?
விதிகளின்படி, ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.15,000 அல்லது அதற்கு மேல் இருந்தால், ஓய்வூதிய நிதியில் ரூ.1250 டெபாசிட் செய்யப்படும். அடிப்படை சம்பளம் 10 ஆயிரம் ரூபாய் என்றால் பங்களிப்பு தொகை 833 ரூபாய் மட்டுமே இருக்கும். பணியாளரின் ஓய்வூதியத்தின் மீதான ஓய்வூதிய கணக்கீடு அதிகபட்ச சம்பளமாக 15 ஆயிரம் ரூபாயாக மட்டுமே கருதப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், ஓய்வு பெற்ற பிறகு, இபிஎஸ் விதியின் கீழ், ஊழியர்கள் 7,500 ரூபாய் மட்டுமே ஓய்வூதியமாக பெற முடியும். 15,000 என்ற வரம்பு நீக்கப்பட்டால், 7,500 ரூபாய்க்கு மேல் ஓய்வூதியம் கிடைக்கும்.

இபிஎஃப்ஓ இன் ஓய்வு பெற்றோரின் அமலாக்க அலுவலகத்தின் பானு பிரதாப் ஷர்மாவின் கூற்றுப்படி, ஓய்வூதியத்தில் இருந்து 15,000 ரூபாய் என்ற வரம்பு நீக்கப்பட்டால், 7,500 ரூபாய்க்கு மேல் ஓய்வூதியம் பெறலாம். ஆனால், இதற்கு இபிஎஸ்-க்கு முதலாளியின் பங்களிப்பையும் அதிகரிக்க வேண்டும்.

ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
நீங்கள் செப்டம்பர் 1, 2014க்கு முன் இபிஎஸ்ஸில் பங்களிக்கத் தொடங்கியிருந்தால், உங்களுக்கான ஓய்வூதியப் பங்களிப்புக்கான அதிகபட்ச மாதச் சம்பள வரம்பு ரூ.6500 ஆக இருக்கும். செப்டம்பர் 1, 2014க்குப் பிறகு நீங்கள் இபிஎஸ்ஸில் சேர்ந்திருந்தால், அதிகபட்ச சம்பள வரம்பு 15,000 ஆக இருக்கும். இப்போது ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதைப் பாருங்கள்.

இபிஎஸ் கணக்கீட்டு ஃபார்முலா
மாதாந்திர ஓய்வூதியம் = (ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளம் x வருடங்கள்  இபிஎஸ்பங்களிப்பு)/70
செப்டம்பர் 1, 2014 க்குப் பிறகு ஊழியர்  இபிஎஸுக்கு பங்களிக்கத் தொடங்குகிறார் என்று வைத்துக் கொண்டால், ஓய்வூதிய பங்களிப்பு 15,000 ரூபாயாக இருக்கும். அவர் 30 ஆண்டுகள் பணிபுரிந்தார் என்று வைத்துக்கொள்வோம்.
மாதாந்திர ஓய்வூதியம் = 15,000X30/70 = ரூ 6428

அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியம்
* இதன் கீழ், 6 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளரின் சேவை 1 வருடமாக கருதப்படும், அது குறைவாக இருந்தால் அது கணக்கிடப்படாது.
* பணியாளர் 14 ஆண்டுகள் 7 மாதங்கள் பணிபுரிந்திருந்தால், அவர்கள் 15 ஆண்டுகளாக கருதப்படுவார்.
* நீங்கள் 14 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் பணிபுரிந்திருந்தால், 14 வருட சேவை மட்டுமே கணக்கிடப்படும்.
* இபிஎஸ்ஸின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை மாதம் 1000 ரூபாய், அதிகபட்ச ஓய்வூதியம் 7500 ரூபாய் ஆகும்.
* இத்துடன், 15 ஆயிரம் என்ற வரம்பு முடிவடைந்து, அடிப்படை சம்பளம் 20 ஆயிரம் ரூபாயாக இருந்தால், இபிஎஸ் ஃபார்முலாவின்படி உங்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியம் இதுதான். (20,000 X 30)/70 = ரூ 8,571 ஆகும்.

ஓய்வூதியத்திற்கான தற்போதைய நிபந்தனைகள்
* ஓய்வூதியத்திற்கு இபிஎஸ் உறுப்பினராக இருக்க வேண்டியது கட்டாயம்.
* குறைந்தபட்சம் 10 வருடங்கள் பணியில் இருக்க வேண்டியது கட்டாயமாகும்.
* பணியாளருக்கு 58 வயதாகும் போது ஓய்வூதியம் கிடைக்கும்.
* 50 ஆண்டுகளுக்குப் பிறகும், 58 வயதுக்கு முன்பே ஓய்வூதியம் பெற முடியும்.
* முதல் ஓய்வூதியத்தில், நீங்கள் குறைக்கப்பட்ட ஓய்வூதியத்தைப் பெறுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள், இதற்காக நீங்கள் படிவம் 10டி ஐ நிரப்ப வேண்டும்.
* ஒரு வேளை ஊழியர் இறந்தால், ஊழியரின் குடும்பத்திற்கு அந்த ஓய்வூதியம் கிடைக்கும்.
* சேவை வரலாறு 10 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால், அவர்கள் 58 வயதில் ஓய்வூதியத் தொகையை திரும்பப் பெறுவதற்கான விருப்பம் கிடைக்கும்.

மேலும் படிக்க | ஓய்வூதியம் வாங்குபவர்களுக்கு அடித்த புதிய ஜாக்பாட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News