சனியும் செவ்வாயும் சேர்ந்து செழிப்பை அளிக்கப்போகும் ராசிகள் இவைதான்

Astrology: சனியும் செவ்வாயும் கும்ப ராசியில் தங்கி எந்தெந்த ராசிக்காரர்களுக்குச் சிறப்பு பலன்களை அளிக்கிறார்கள் என்பதை இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 13, 2022, 06:17 PM IST
  • ஜோதிடத்தில் கிரகங்களின் சேர்க்கை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
  • துலா ராசிக்கார்ரகள் இந்த நேரத்தில் எதிரிகளிடமிருந்து விடுதலை பெறுவீர்கள்.
  • மேஷ ராசிக்கார்ரகளுக்கு பணியிடத்தில் மரியாதை கூடும்.
சனியும் செவ்வாயும் சேர்ந்து செழிப்பை அளிக்கப்போகும் ராசிகள் இவைதான் title=

ஜோதிடத்தில் கிரகங்களின் சேர்க்கை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் சனியும் செவ்வாயும் கும்ப ராசியில் உள்ளனர். சனியும் செவ்வாயும் ஒருவரது ஜாதகத்தில் சுபமாக இருக்கும் போது அந்த நபருக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். 

சனி மற்றும் செவ்வாய் கிரகங்களின் சுப பலன்களால், அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சனியும் செவ்வாயும் கும்ப ராசியில் தங்கி எந்தெந்த ராசிக்காரர்களுக்குச் சிறப்பு பலன்களை அளிக்கிறார்கள் என்பதை இந்த பதிவில் காணலாம். 

மேஷம்:

மேஷ ராசிக்கார்ரகளுக்கு பணியிடத்தில் மரியாதை கூடும், வருமானம் அதிகரிக்கும். வசதிகள் பெருகும், பயணம் செல்ல திட்டம் தீட்டலாம். இந்த பயணங்கள் நல்ல பலன்களை அளிக்கும். நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

துலாம்:

துலா ராசிக்கார்ரகள் இந்த நேரத்தில் எதிரிகளிடமிருந்து விடுதலை பெறுவீர்கள். உங்கள் துறையில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனால் இறுதியில் வெற்றி கிடைக்கும். உங்கள் துணையுடன் இனிமையாகப் பொழுதைக் கழிப்பீர்கள். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

மேலும் படிக்க | சனியின் ராசி மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியும் 

தனுசு: 

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் அனைத்து இடங்களிலும் கௌரவம் உயரும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு சுமுகமாக இருக்கும். இந்த காலத்தில் நீண்ட நாட்களாக வாட்டி வதைத்து வந்த பிரச்சனை தீரும். 

உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் அடைய வாய்ப்புகள் இருக்கும். தனுசு ராசிக்காரர்களுக்கு இது பல புதிய முயற்சிகளை செய்து பார்க்க ஏற்ற நேரமாக இருக்கும். 

கும்பம்: 

கும்ப ராசிக்கார்ரகளுக்கு இந்த நேரத்தில் நிலம் அல்லது வாகனம் வாங்க யோகம் உண்டாகும். நிலத்தில் முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும். ஆன்மீக நிகழ்வுகளில் கலந்துகொள்வீர்கள். 

வர்த்தகத்தில் உங்கள் கூட்டாளியின் ஆலோசனையால் பண வரவு அதிகமாகும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். கணவன் / மனைவி மற்றும் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

மேலும் படிக்க | ராகு ஏற்படுத்தும் பித்ரு தோஷம் மற்றும் ஜார்த்வ தோஷத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News