புதுடெல்லி: வைகாசி மாதத்தின் வளர்பிறை ஏகாதசி, மோகினி ஏகாதசியாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் விஷ்ணுவின் மோகினி ரூபம் வழிபடப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருப்பது பல நன்மைகளைக் கொடுக்கும்.
இந்து மதத்தில் ஏகாதசி சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசி திதிகள் வருகின்றன. ஒரு வருடத்தில் மொத்தம் 24 ஏகாதசி திதிகள் வருகின்றன.
வைகாசி மாதத்தின் வளர்பிறை ஏகாதசி, மோகினி ஏகாதசியாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் விஷ்ணுவின் மோகினி ரூபம் வழிபடப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருப்பது பல நன்மைகளைக் கொடுக்கும்.
விஷ்ணு பகவான் வைகாசி மாத வளர்பிறை ஏகாதசியின்போதுதான் மோகினி அவதாரம் எடுத்தார் என்பது நம்பிக்கை. அதனால்தான், அந்த நன்னாள் 'மோகினி ஏகாதசி' என்ற பெயரை பெற்றது.
மேலும் படிக்க | செவ்வாய் - சனி கூட்டணி: மே 17 வரை சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்
பாற்கடலைக் கடைந்ததன் பலனாக அதில் இருந்து அமிர்தம் வெளிப்பட்டது. அதனை பங்கிட்டுக் கொள்வதில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்தார்.
ஆனால், அரக்கர்களுக்கு அமிர்தம் கிடைத்தால் ஏற்படும் பிரச்சனைகளை எண்ணி, அவர்களுக்குக் அமிர்தம் கிடைக்கக்கூடாது என்பதற்காக அசுரர்களை தன்னுடைய அழகால் மயக்கி, தானே அமிர்தத்தை பங்கிட்டுக் கொடுப்பதாக கூறினாள். முதலில் தேவர்களுக்கு அமிர்தம் கொடுக்க விஷ்ணு முடிவு செய்தார்.
அதன்படி தேவர்களுக்கு அமிர்தத்தை வழங்கிய மோகினி வடிவில் இருந்த விஷ்ணு பகவான், தேவரைப்போல வேடம் தரித்து அமிர்தத்தை வாங்கிய அசுரனின் கழுத்தை தன்னுடைய கையில் இருந்த கரண்டியைக் கொண்டு வெட்டினார்.
அமிர்தம் அருந்திய காரணத்தால் அவனது அசுரனின் உயிர் பிரியவில்லை. எனவே, ராகு, கேதுவாக என இரு கிரகங்களாக மாற்றி நவக்கிரகங்களில் முக்கியமானவர்களாக மாற்றினார் சிவபெருமான்.
இந்த முக்கியமான நன்னாளில், விரதம் இருந்தால், ஒருவர் ஏழேழு பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்றும், துக்கத்தை வென்று நிம்மதியாய் வாழ மோகினி ஏகாதசியன்று விரதம் இருப்பது நல்லது என்றும் கூறப்படுகிறது.
மோகினி ஏகாதசி நாளன்று, அதற்கான விரதக் கதையை கூறுவது ஆயிரம் பசுக்களை தானம் செய்ததற்கு சமமான புண்ணியத்தை தரும் என்று புராணங்கள் கூறுகின்றன.
இந்த ஆண்டின் மோகினி ஏகாதசி நாளை, அதவது (12 மே 2022, வியாழன்) அன்று அனுசரிக்கப்படுகிறது.
மே 11 புதன்கிழமை இரவு 07:31 மணிக்கு தொடங்கும் மோகினி ஏகாதசி திதி, மே 12 வியாழன் அன்று மாலை 06:51 மணிக்கு முடிவடைகிறது. அதனால், மே 12 ஆம் தேதி மோகினி ஏகாதசி அனுசரிக்கப்படுகிறது.
மே 12 ஆம் தேதி மோகினி ஏகாதசி விரதம் எடுப்பவர்கள், அதற்கு அடுத்த நாள் அதாவது மே 13 வெள்ளிக்கிழமையன்று சூரிய உதயத்திற்குப் பிறகு துவாதசி பாராயணம் என்று சொல்வார்கள். பரணை நேரம் காலை 05:32 முதல் காலை 08:14 வரை. துவாதசி திதி மே 13 மாலை 05:42 மணியுடன் நிறைவடையும்.
மோகினி ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பவர்கள், இந்த உலக பந்தத்தில் இருந்தும், உலக மாயைகளில் இருந்து விடுபட்டு முக்தி அடைவார் என்று நம்பப்படுகிறது. அவருக்கு சொர்க்கத்தில் தனி இடம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மேலும் படிக்க | Astro: அனைவரையும் காந்தம் போல் வசீகரிக்கும் திறன் பெற்ற ‘3’ ராசிக்காரர்கள்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR