இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்: ரூ.20,000-க்கான நன்மை இலவசமாக கிடைக்கும்

PNB MySalary Account: PNB இல் இந்தக் கணக்கு உங்களிடமும் இருந்தால், ரூ. 20 லட்சத்திற்கான பலனை இலவசமாகப் பெறலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 8, 2022, 10:31 AM IST
  • உங்களுக்கும் PNB இல் இந்தக் கணக்கு உள்ளதா?
  • 20 லட்சம் ரூபாய்க்கான பயன் பெறலாம்.
  • 20 லட்சம் பலன் பெறுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்: ரூ.20,000-க்கான நன்மை இலவசமாக கிடைக்கும் title=

PNB MySalary கணக்கு: புதிதாக வங்கிக்கணக்கை துவக்கும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு இது முக்கிய செய்தியாக இருக்கும். நீங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாடிக்கையாளரானால், 20 லட்ச ரூபாய்க்கான பலனையும் இலவசமாகப் பெறுவீர்கள். இந்தச் சிறப்புச் சலுகையின் கீழ், நீங்கள் பணியில் இருப்பவராக இருந்தால், வங்கியில் பிஎன்பி மை சேலரி (PNB MySalary Account) கணக்கைத் தொடங்க வேண்டும். 
இதுமட்டுமின்றி இதில் இன்னும் பல வசதிகள் வங்கி மூலம் உங்களுக்கு வழங்கப்படும். இந்த பதிவில் இந்தக் கணக்கைப் பற்றி விரிவாகக் காணலாம். 

பிஎன்பி இந்த வசதிகளை வழங்கும்

பிஎன்பி வழங்கிய தகவலின்படி, உங்கள் ஊதியத்தை நீங்கள் சிறப்பாக நிர்வகிக்க விரும்பினால், 'பிஎன்பி மை சேலரி’ கணக்கைத் திறக்கலாம். இதன் கீழ், வாடிக்கையாளர்கள் விபத்தால் பாதிக்கப்பட்டால், காப்பீட்டுடன் ஓவர் டிராஃப்ட் (அதிகப்படியான பணம் எடுப்பது) மற்றும் ஸ்வீப் வசதி ஆகியவையும் கிடைக்கும்.

20 லட்சம் பலன் பெறுவது எப்படி? 
பின்பி, சம்பள கணக்கு வைத்திருப்பவர்களுக்கு காப்பீடு உட்பட இன்னும் பல நன்மைகளை வழங்குகிறது. ஜீரோ பேலன்ஸ் மற்றும் ஜீரோ காலாண்டு சராசரி இருப்பு வசதியுடன் PNB MySalary கணக்கைத் தொடங்கினால், உங்களுக்கு ரூ.20 லட்சம் தனிநபர் விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது. அதாவது, இந்தக் கணக்கைத் திறந்தால், வாடிக்கையாளர்கள் அதிகப்படியான லாபம் காணலாம். 

மேலும் படிக்க | ரேஷன் கார்டில் இந்த தவறை செய்திருக்கிறீர்களா? ஒரு நொடியில் ரத்து 

இந்தக் கணக்கில் 4 பிரிவுகள் உள்ளன

- ரூ. 10 ஆயிரம் முதல், ரூ. 25 ஆயிரம் வரை மாத சம்பளம் உள்ளவர்கள், 'சில்வர்' பிரிவில் வைக்கப்பட்டுவார்கள்.

- ரூ.25001 முதல் ரூ. 75000 வரை மாதச் சம்பளம் உள்ளவர்கள் ’கோல்ட்’ பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர்.

- ரூ.75001 முதல் ரூ.150000 வரை மாதச் சம்பளம் உள்ளவர்கள் 'பிரீமியம்' பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர்.

- ரூ. 150001க்கு மேல் மாதச் சம்பளம் உள்ளவர்கள் 'பிளாட்டினம்' பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?

- வங்கி மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஓவர் டிராஃப்ட் வசதி வழங்கப்படுகிறது.

- சில்வர் வகை வாடிக்கையாளர்களுக்கு ரூ.50,000 வரை ஓவர் டிராஃப்ட் வசதி கிடைக்கும்.

- கோல்ட் வகையில் உள்ளவர்களுக்கு ரூ.150000 வரை ஓவர் டிராஃப்ட் வசதி கிடைக்கும்.

- பிரீமியம் நபர்களுக்கு ரூ.225000 வரை ஓவர் டிராஃப்ட் வசதி கிடைக்கும்.

- பிளாட்டினம் மக்களுக்கு ரூ.300000 வரை ஓவர் டிராஃப்ட் வசதி கிடைக்கும்.

https://www.pnbindia.in/salary saving products.html என்ற இந்த வலைத்தளத்தில் இது பற்றிய விரிவான தகவல்களைப் பெறலாம்.

மேலும் படிக்க | ரயில்களின் 5 இலக்க எண்ணில் மறைந்திருக்கும் சுவாரஸ்ய தகவல்கள்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News