ரயில்களின் 5 இலக்க எண்ணில் மறைந்திருக்கும் சுவாரஸ்ய தகவல்கள்!

ரயில் டிக்கெட்டில் இருக்கும் இந்த 5 இலக்க எண் பல முக்கிய தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது என்றால் ஆச்சர்யமாக உள்ளதா. ரயில் எண்  புறப்படும் இடம், செல்லும் இடம்  மட்டுமின்றி, ரயிலின் நிலை, வகை என பல விஷயங்களை கூறுகிறது.

Last Updated : Mar 6, 2022, 01:58 PM IST
ரயில்களின் 5 இலக்க எண்ணில் மறைந்திருக்கும் சுவாரஸ்ய தகவல்கள்! title=

ரயில் டிக்கெட்டில் இருக்கும் இந்த 5 இலக்க எண் பல முக்கிய தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது என்றால் ஆச்சர்யமாக உள்ளதா. இந்த ரயில் எண் புறப்படும் இடம், செல்லும் இடம் மட்டுமின்றி, உங்கள் ரயிலின் நிலை, வகை என பல விஷயங்களை கூறுகிறது.

இந்த 5 இலக்க எண்ணின் அர்த்தம் என்ன?

ஒவ்வொரு ரயிலுக்கும் தனிப்பட்ட எண் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இது அதன் அடையாளமாகும். 

5 இலக்கங்களில் உள்ள முதல் இலக்கம் (0-9) வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டுள்ளது.
0 என்றால் இந்த ரயில் ஒரு சிறப்பு ரயில் என்று அர்த்தம். (கோடை சிறப்பு, விடுமுறை சிறப்பு அல்லது பிற சிறப்பு) எப்போது வேண்டும் என்றாலும் நிறுத்தம் செய்யும் அதிகாரம் ரயில்வே நிர்வாகத்துக்கு இருக்கும்.

மேலும் படிக்க | Indian Railways: உங்கள் ரயில் டிக்கெட்டில் 'வேறு ஒருவரும்' பயணிக்கலாம்!

முதல் இலக்கத்தில் 1 முதல் 4 வரையிலான எண்

- முதல் இலக்கம் 1 அல்லது 2 என்றால் இந்த ரயில் நீண்ட தூரம் செல்லும். மேலும், இந்த ரயில் ராஜ்தானி, சதாப்தி, ஜன் சாதர், சம்பர்க் கிராந்தி, கரிப் ரத், துரந்தோ ஆகிய ரயில்களாக இருக்கும்.
- முதல் இலக்கம் 3 என்றால், இந்த ரயில் கொல்கத்தா துணை நகர்ப்புற ரயில் ஆகும்.
- முதல் இலக்கம் 4 என்றால் அது புது தில்லி, சென்னை, செகந்திராபாத் மற்றும் பிற மெட்ரோ நகரங்களின் துணை நகர்ப்புற ரயில் ஆகும்.

5 முதல் 9 வரையிலான இலக்கங்களின் பொருள்

- முதல் இலக்கம் 5 என்றால் அது பயணிகள் ரயில்.

- முதல் இலக்கம் 6 என்றால் அது MEMU ரயில் ஆகும்.

- முதல் இலக்கம் 7 ​​என்றால் அது DEMU ரயில்.

- முதல் இலக்கம் 8 என்றால் அது முன்பதிவு செய்யப்பட்ட ரயில்.

- முதல் இலக்கம் 9 என்றால் அது மும்பையின் சப் அர்பன் ரயில்.

இரண்டாவது மற்றும் அடுத்த இலக்கம்

இதில் இரண்டாவது மற்றும் அடுத்த இலக்கமும் முதல் இலக்கத்தை பொறுத்தே இருக்கும். ரயிலின் முதல் எழுத்து 0, 1 மற்றும் 2 இல் தொடங்கினால், மீதமுள்ள நான்கு எழுத்துக்கள் ரயில்வே மண்டலம் மற்றும் பிரிவைக் குறிக்கும். 

0- கொங்கன் இரயில்வே
1- மத்திய இரயில்வே, மேற்கு-மத்திய இரயில்வே, வட மத்திய இரயில்வே
2- சூப்பர்ஃபாஸ்ட், சதாப்தி, ஜன் சதாப்தி ஆகியவற்றைக் காட்டுகிறது. இந்த ரயில்களின் அடுத்த இலக்கங்கள் மண்டலக் குறியீட்டைக் குறிக்கின்றன.
3- கிழக்கு இரயில்வே மற்றும் கிழக்கு மத்திய இரயில்வே
4- வடக்கு இரயில்வே, வட மத்திய இரயில்வே, வடமேற்கு இரயில்வே
5- தேசிய கிழக்கு இரயில்வே, வடகிழக்கு எல்லை இரயில்வே
6- தெற்கு ரயில்வே மற்றும் தெற்கு மேற்கு ரயில்வே
7- மத்திய  தெற்கு ரயில்வே மற்றும் தென் மேற்கு ரயில்வே
8- தெற்கு கிழக்கு இரயில்வே மற்றும் கிழக்கு கடற்கரை இரயில்வே
9- மேற்கு இரயில்வே, வடமேற்கு இரயில்வே மற்றும் மத்திய மேற்கு மத்திய இரயில்வே

மேலும் படிக்க | IRCTC E-Catering: தரமான உணவு பெற அங்கீரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் பட்டியல் இதோ..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News